அன்புள்ளங்களுக்கு
வணக்கம்.
வலைப்பதிவில் தொடர்ந்து இயங்கவேண்டும் என்கிற எண்ணம் இருந்துகொண்டேயிருக்கிறது. எந்த ஒரு காரியத்தையும் செய்யவேண்டும் என்றால் உடனே செய்துவிடும் நான் இவ்வளவு சுணக்கம் ஏன் கொண்டேன் என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இருப்பினும் எழுதாமல் என்னால் இருக்கமுடியாது என்பதால் தொடர்ந்து நூல்கள் எழுதுவதிலும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதிலும் மாணவர்களுக்கு வழிகாட்டலிலும் எனத் தொடர்ந்து இறுக்கமாகத்தான் இருந்துவருகிறேன். என்றாலும் எனக்கு வலைப்பதில் இந்த ஆண்டு எழுதாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. ஆகவே நான்கு மாதங்கள் எழுதாதப் பதிவையும் கண்டிப்பாக எழுதிவிடுவேன். அதற்கான உறுதியுடன் இருக்கிறேன். அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெற இருப்பதால் இந்த சுணக்கம் நீங்கிவிடும் எனவும் நம்புகிறேன்.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இருப்பதால் வீட்டிலேயே இருக்கும் என் மாணவர்களுக்குப் பாடங்களை வலைப்பதிவு வழி சுருக்கமாக எழுதப்போகிறேன். அவர்களுக்குத் தெரிவித்து இதனை வாசித்துத் தேர்வில் பயன்கொள்ள வைக்கலாம் எனக் கருதுகிறேன். இது எந்தளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை. என்றாலும் தொடர்ந்து எழுத எண்ணுகிறேன்.
இதுதவிர குரல்பதிவின் வழியாகவும் பாடங்களைத் தயாரித்துள்ளேன். அடுத்து யூ ட்யூப் வழியாகவும் பாடங்களைப் பதிவேற்ற நினைத்துள்ளேன்.
இத்தனையையும் எழுதக் காரணம் என் வலைப்பதிவிற்குக் கருத்துரையும் அன்பு வாழ்த்துகளையும் தரும் நீங்கள் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தவேண்டும் என்பதுதான்.
நன்றி.
மிகு அன்புடன்
ஹரணி.
welcome back
ReplyDeleteஅன்பின் நன்றிகள்.
Deleteபுதிய முயற்சிகள் வெல்லட்டும்
ReplyDeleteஅன்பின் நன்றிகள்.
Deleteவருக ஐயா...
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...
உங்களை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன். அன்பின் நன்றிகள் ஐயா.
Deleteவருக வருக....
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் ஐயா.
உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.
உங்களின் வலைப்பதிவில்தான் இனிமையான பழைய பாடல்களைக் கேட்டு ரசித்தவன். அன்பின் நன்றிகள்.
Deleteவலைப் பதிவில் காணலாம் என்பதே மகிழ்ச்சி
ReplyDeleteபணிநது நன்றியுரைக்கிறேன் ஐயா.
Deleteஉங்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்...
ReplyDeleteமிக்க நன்றி சங்கர் சார்.
Delete