Saturday, June 21, 2014

நிலம்...வயல்...உறவுகள்...
                         நிலம்....வயல்....உறவுகள்...                    அப்பா அரசாங்க வேலையிலிருந்தார். அவரின் அப்பாவும் அப்படித்தான் அரசாங்க வேலையிலிருந்தார் ஆனால் நிறைய நிலங்கள்
இருந்தன.

                    அதில் பாதி நிலங்கள் அப்பா தன்னுடைய சம்பாத்தியத்தில் தாத்தா வாங்கியது.

                      உன் பெயரில் எழுதி வைக்கிறேன் என்கிற வாய்வார்த்தையோடு கடைசிவரை தன்பெயரில் இருந்த நிலங்களை தன் ஒரே மகள் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு தாத்தா செய்த துரோகத்திற்கு கடைசிக்காலத்தில் கண் தெரியாமல் அந்த ஒரே மகள் வீட்டிலேயே இருந்து இறந்துபோனார்.

                           அப்பா தன் சம்பாத்தியத்தில் தனக்கென்று வாங்கிய சொற்பநிலமும் அத்தையின் அத்தை கணவரின் சாமர்த்தியத்தால் அப்பா விற்றுவிடும்படி நேர்ந்துவிட்டது.

                           ஒரு பைசா உன் சொத்தில் வேண்டாம் என்று பத்திரப் பதிவு
அலுவலகத்தில்  ஒரு கையெழுத்தைப்போட்டுவிட்டு வந்துவிட்டார்
அப்பா.

                          இப்போது அப்பா இல்லை, அத்தையும் இல்லை, அத்தனை நிலங்களும் இல்லை.

                           ஆனால் அப்பாவின் பென்ஷன் அம்மாவிற்கு வருகிறது.

                           00000000000000000000

                            நன்றாகப் படித்தவன் அவன், சிரமப்பட்டுத்தான் படித்தான்,
ஆனால் புத்தி சரியில்லாதவன், குறுக்குப்புத்தி, தவறான புத்தி,  பிளாட்
போட்டு விற்கிறேன் என்றான், மாதத் தவணைத் திட்டம், பண்ம் கட்டினார்கள்
ஏராளமானோர், நல்ல வசூல்.

                            இவனுக்கு ஒருத்தன் பார்ட்னர்,

                            கடைசியில ஏமாந்துபோனது பார்ட்னர். அவனை மாட்டிவிட்டு இவன் தப்பிவிட்டான், நிறைய பணம் சேர்ந்துவிட்டது.

                            பணத்தைக்கொடுத்து ஒரு வேலையையும் வாங்கிவிட்டான்.

                            நிறைய பணம் சேர்ந்ததும் மாமனார் வீட்டையே விலைக்குக்
கேட்டான். அடிமாட்டு விலைக்குப் பேசி வாங்கினான்.உடந்தை தந்தையின்
வீட்டை மகளே உதவினாள். கணவனே கண்கண்ட தெய்வமாம்.

                            பத்திரப் பதிவு அன்றைக்கு மாமனாரைக் காலி செய்யச்
சொன்னான். குடும்பம் வருத்தத்தோடு வெளியேறியது.

                            இப்போது அந்த வீட்டை  நல்ல வாடகைக்கு விட்டுவிட்டான்.

                            சொந்த வீட்டை விற்றுவிட்ட அவனது மாமனாரோ வாடகை
வீட்டில்.

                             நன்றாகத்தான் இருக்கிறான் இன்றுவரை அவன்.

                           0000000000000000


                           மேலே சொன்னவனிடம் சிரமப்பட்டு பணம் கட்டி ஒரு
பிளாட்டைப் பதிவுசெய்தான் ஒருவன்.

                              சொற்பச் சம்பளக்காரன்.

                              எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது இருக்கும்
பணக் கஷ்டத்தில் வாங்கி பிளாட்டை விற்கலாம் என்றால் அந்த பிளாட்டின்
மேல் மின்சார வாரியத்தின் அதிக சக்திவாய்ந்த வயர் கம்பிகள் போகின்றன.
யாரும் வாங்க மறுக்கிறார்கள்.

                                   இருந்தும் இல்லை. விருந்தும் மருந்தானது.

                             00000000000000000


                               ஒரு பெண் தன்னுடைய பிள்ளைகளில் ஒருவனை மட்டும்
அவளுடைய எல்லாத் தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொண்டாள்.

                                 இறப்பதற்கு முன்னதாக தன்னுடைய ஒரே சொத்தான
கணவன் சம்பாதித்து வைத்த வீட்டை அவள் பெயருக்கு இருந்ததால்
எல்லாப் பிள்ளைகளையும ஒதுக்கிவிட்டு தன்னுடைய ஒரு மகளுக்கு
மட்டும் எழுதி வைத்துவிட்டாள்.

                                  இது துரோகமா? தாய்ப்பாசமா? நம்பிக்கை மோசமா?

                                 
                               0000000000000


                       இவை கதைகளல்ல... ஆனால் கனவுகளாயும் பின்னர் கதைகளாயும் மாறிப்போனவை.


8 comments:

 1. வணக்கம்
  ஐயா

  ///நன்றாகப் படித்தவன் அவன், சிரமப்பட்டுத்தான் படித்தான்,
  ஆனால் புத்தி சரியில்லாதவன், குறுக்குப்புத்தி, தவறான புத்தி, ///

  சொன்னது உண்மைதான் ஐயா. நானும் இப்படியான சம்பவங்களை நேரில் பார்த்துள்ளேன்.பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. வணக்கம் ஐயா.
  என்ன இது, எல்லா தாத்தாவும் அத்தைக்குத் தான் சொத்து வேண்டும் என்று நினைத்திருக்கின்றனர்...
  பெற்ற தந்தை வீட்டை விற்கச் செய்த மகளா?? பாவம் அந்த அப்பா.
  ஏமாற்றுபவர் நன்றாக இருக்கின்றனர்..அது எத்தனைக் காலம் தெரியவில்லை.

  ReplyDelete
 3. கனவுகளாகவும் பின்னர் கதைகளாகவும் மாறிப் போன சம்பவங்கள்..
  அத்தனையும் காலக் கொடுமை..

  ReplyDelete
 4. ஐயா எனக்கு புரிந்தும் புரியாதது போல் தோன்றுகிறது.
  இன்றைய உலகம் இதுதான்
  மேலே குறிப்பட்டது போல் பல நிகழ்வுகளை நானும் சந்தித்து இருக்கிறேன்.
  மனதில் நம்பிக்கை இருக்கிறது, வேறென்ன வேண்டும்
  வாழ்ந்து காட்டுவோம் ஐயா

  ReplyDelete
 5. //இது துரோகமா? தாய்ப்பாசமா? நம்பிக்கை மோசமா?// - எல்லாமுமே... முக்கியமாக சுயநலம்...!

  ReplyDelete
 6. கதை அல்ல நிஜங்களாக இருக்கின்றன நிகழ்வுகள்! எல்லாம் சுயநலம் என்ற டி.டி யின் கருத்தோடு ஒத்துப் போகிறேன்! நன்றி!

  ReplyDelete
 7. வாழ்க்கை என்பது வாய்ப்பாடு போல ஒரு ஒழுங்குமுறைக்கு உட்பட்டது அல்ல..

  நல்லவன் வாழ்வான் .. ஏமாற்றுபவர்கள் தண்டனை பெறுவதும் கதைகளிலும் சினிமாக்களிலும் மட்டுமே சாத்தியம்..

  ReplyDelete
 8. கதையல்ல நிஜம்.. இப்படி ஏமாற்றுபவர்கள் நிறையவே....

  ReplyDelete

Follow by Email