தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது.
இதன் நன்மை தீமைகளை ஆராய்வதை விட்டு மாற்றம் என்பது தேவை என்பதை மட்டுமே எடுத்துக்கொண்டு அது நடந்திருப்பதை வரவேற்கலாம்.
அதிமுக எதிர்பாரா மிகப்பெரும் வெற்றி பெற்றிருப்பதால் சில நன்மைகள் நடந்திருக்கின்றன.
1. பணபலத்தால் மட்டும் எதையும் சாதிக்கலாம் என்பது
சரிந்திருக்கிறது.
2. அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக ஆடும் ஆட்டம்
நிலையல்ல அது நிலைகுலையச் செய்துவிடும் இருக்கும்
இருப்பையும் இழக்கவைத்து.
3. சாதிவெறிபிடித்து சாதிகளால் கட்சி அமைத்துக்கொண்டு
சாதிக்கலாம் எனபதும் அடியோடு வேரறுக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்ந்து நிலைநிறுத்தப்படவேண்டும்.
வேண்டுகோள்கள்
1. புதிய அரசு போன அரசின் குறைகளையும் குற்றங்களையும்
பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்வதே குறிக்கோள்
என்பதைக் கவனத்தில் கொண்டால் மக்கள் நன்மை பெறுவார்
கள்.
2. புதிய அரசின் முதல்வர் குறிப்பிட்டதுபோல் சட்டம் ஒழுங்கு,
மின்வெட்டு, கல்விச்சூழல் இவற்றோடு சாலைகளைப்
பராமரித்தல், வாகனங்களை ஒழுங்குபடுத்தி விபத்துக்களை
கட்டுப்படுத்தல், கைபேசிகளை ஒழுங்குபடுத்துதல், அரசியல்
வாதிகளால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்த்தல்
இவையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.
3. குறிப்பாக பள்ளிக் கல்வி நிலை ஒழுங்குபடுத்தப்படல் மற்றும்
பணியமைப்புக்களில் தகுதியானவர்கள் அடையாளப்படுத்தப்
பட்டு அவர்களுக்குரிய பணிவாய்ப்பு பணம், சிபாரிசு, சாதிய
ஒதுக்கீடு இவற்றைத் தாண்டி வழங்கப்படல் அமைந்தால்
நல்லதொரு சமுக முன்னேற்றம் அமையும்.
4. நல்ல மருத்துவ வசதி ஏழைமக்களுக்குப் பாரபட்சமில்லாமல்
கிடைத்தல் அவசியம்.
5. மக்கள் நிறைய நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் மிகப்
பெரும் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். அவர்கள் எந்தச்
சூழலிலும் ஏமாந்துவிடக்கூடாது.
This comment has been removed by the author.
ReplyDeleteமிகவும் பொறுப்பான பதிவு ஹரணி.
ReplyDeleteதுவக்கத்தில் இருக்கும் பொறுப்பும் ஆர்வமும் இறுதிவரை தொடரவேண்டும் என்பதே எல்லோரின் ஆசையும் கூட.
அரசு எங்கிருந்து செயல்படவேண்டும் என்பது மாதிரியான விஷயங்களில் பிடிவாதப் போக்கைக் கைவிடாமல் தன்னிச்சையாக செயல்படும் போக்கு
கவலையளிக்கிறது.
அரசு எனபது மக்களின் பிரதிநிதித்துவம் என்கிற மேன்மை தொனிக்கும் வகையில் நான் என்கிற ப்ரயோகத்தைத் தவிர்க்கவேண்டும். நான் ஆணையிட்டுள்ளேன் என்பதற்குப் பதிலாக இந்த அரசு ஆணையிட்டுள்ளது என்கிற பதத்துக்கான மேன்மைக்கு மாறவேண்டும்.
எப்போதும் போல் நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
மாற்றம் எதிர்பார்க்கப்பட்டது. நடந்திருக்கிறது. வரவேற்கப்படவேண்டியது. ஆனால் இந்த வெற்றி கட்ந்த அரசுக்கான எதிர்மறை அலையே அன்றி அ.தி. மு.க. வினை வரவேற்கும் வெற்றியா என்பது புரியவில்லை. கிடைத்துள்ள பெரும்பான்மை இடங்கள், அரசின் கண்களை மறைக்கக் கூடாது. பொருத்திருந்து பார்ப்போம்.
ReplyDeleteஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் அல்லது இருக்கக் கூடாது என்பதற்கான தெளிவு மக்களிடம் இருக்கிறது.. ஆனால் ஆள வருபவர்கள் தான் அதைப் புரிந்து கொள்ளாமல் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு எதிர்க் கட்சியாகிறார்கள்.. படிப்பினை கிடைத்தும் பலன் இல்லாமல் போகக் கூடாது..
ReplyDeleteநன்றி சுந்தர்ஜி.
ReplyDeleteநன்றி ஜிஎம்பி ஐயா.
நன்றி ரிஷபன்.