செம்மொழிக்கான இளம் தமிழ் அறிஞர் விருதுகள் 06.05.2011 அன்று குடியரசு தலைவர் அவர்களால் புதுதில்லியில் வழங்கப்பட்டன. தொடர்பணிகளால் அது பற்றிய குறிப்புக்களை இன்றுதான் எழுத நேர்ந்தது. தமிழ்மொழியில் குறிப்பிடத்தக்க பணிகளைத் தொடர்ந்து செய்துவருபவர்களுக்கு வழங்கப்படும் விருது. இவ்விருது பெற்றவர்கள்ல் பலர் எனது நண்பர்கள் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்புடன் என் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் விதமாக இந்தப் பதிவு. இவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
1. நண்பர் ய.மணிகண்டன். எனது நீண்ட நாள் நண்பர். தஞ்சாவூர் சரசுவதி மஉறாலில் பணிபுரிந்தவர்.அவருடன் பல கவியரங்குகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவருடைய தலைமையில் கவிதை வாசித்து இருக்கிறேன். தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். மிகவும் தகுதியானவர். சுறுசுறுப்பானவர். சரசுவதி மஉறாலில் பணிபுரியும்போது பல குறிப்பிடத்க்கப் பணிகளை சுவடியியல் பதிப்பிலும், இலக்கண இலக்கியங்களிலும் மேற்கொண்டவர். குறிப்பாக யாப்பியலில் தேர்ந்தவர் மணிகண்டன். கணீரென்ற குரலுக்குச் சொந்தக்காரர். மிகவும் அன்பானவர் மனிதர்களை நேசிப்பதில். வாழ்த்துகிறோம் அவரை இவ்விருது பெற்றமைக்காக.
2. நண்பர் அறவேந்தன் என்கிற இரா.தாமோதரன் நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது அங்கு நான் பணியாற்றிய துறையில் முனைவர்பட்ட ஆய்வாளராக இருந்தபோது அறிமுகம். ஆய்வாளராக அறிமுகம் தொடங்கிய கால்த்திலிருந்து இன்று பேராசிரியராகப் பணியாற்றும் நிமிடம் வரையிலும் காலத்தின் அருமை கருதியவர். சொற்களை அளந்து பேசுபவர். நல்ல நண்பர். நல்ல ஆய்வாளர். நல்ல ஆசிரியர். சிங்கள இலக்கணத்தையும் வீரசோழியத்தையும் ஒப்பிட்டு முனைவர் பட்டம் பெற்றவர். இதற்காக சிஙக்ளம் கற்று இலங்கைப் பயணம் மேற்கொண்டு ஆய்வை நிறைவு செய்தவர். தொடர்ந்து பல ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு அவற்றை உடனுக்குடன் புத்தகவடிவில் வெளியிட்டு வருபவர். பல பரிசுகளைப் பெற்றவர். தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத்தின் பேராசியர். இவ்விருதுக்காக அவரை வாழ்த்துகிறோம்.
3. நண்பர் அரங்க.பாரி என்னுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபாற்றுபவர். பல ஆய்வுப் புத்தகங்களை வழங்கியவர். பல கருத்தரங்குகளைத் திறம்பட நடத்தி அதன் தொடர்ச்சியாக ஆய்வுக்கோவைகளைத் தந்தவர். இனிமையாக பழகுபவர். எப்போதும் எளிமையாக இயங்குபவர். தொடர்ந்து இயங்கிவருபவர். சக தோழரை இவ்விருதுக்காக வாழ்த்துகிறோம்.
4. நண்பர் மு.இளங்கோவன் அண்ணாமலை தொலைதுர்ரக் கல்வி இயக்கக வழி தொடர்பு வகுப்பில் அறிமுகம். அன்பிற்குரிய இளவல். இனிய புன்னகையுடன் உறவுகளைப் பேணுபவர். பல்வகைப்பட்ட பொருண்மைத் தளங்களில் பல புத்தகங்களைத் தந்தவர். தொடர்ந்து அவரது இணையத் தளத்தின் வழியாக செய்துவரும் தமிழ்த்தொடர்பான பணிகள் ஒவ்வொன்றும் சிறப்புக்குரியவை. வரலாறு, மானிடவியல், இலக்கணம், இலக்கியம், இணையம் என முனைப்புடன் இயங்குபவர். இளவலை இவ்விருதுக்காக வாழ்த்துகிறோம். அவரது இணையத்தளத்தின் வழியாகப் பெற்ற புகைப்படத்திற்கு நன்றி.
சிறப்பாக குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. என்னுடைய நண்பர் அ.சிவபெருமானின் தந்தையார் மதிப்பிற்குரிய பேராசிரியர் அடிகளாசிரியர் ஐயா அவர்கள் தொல்காப்பிய விருது பெற்றிருக்கிறார். அவரை வாழ்த்தும் தகுதியும் வயது இல்லையென்தால் அவரை வணங்குகிறேன் பணிந்து. அடிகளாசிரியர் தஞ்சை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் முதல்வராக இருந்தவர். அவருடைய தமிழ்ப் பணிகள் அளவிடற்கரியன. முற்றிலும் இவ்விருதிற்குத் தகுதியானவர். அவருடைய தகுதிக்கு இன்னொரு சான்று நண்பர் அ.சிவபெருமான். இவருடைய தமிழ்ப்பணிகளும் குறிப்பிடத்தக்கவை.
இவ்விருது பெற்ற மற்ற முகமறியாதவர்களையும் வாழ்த்துகிறோம்.
இளம் தமிழ் அறிஞர் விருதுபெற்றோரிடம் வேண்டுகோள்
மேன்மேலும் உங்களின் தமிழ்ப்பணிகள் செழிப்புறட்டும். தமிழின் மேன்மை உலகெங்கும் இன்னும் தனித்துவமிக்க தரமான இடத்தை அடைய உங்களின் பணிகளும் தனித்துவம் மிக்கதாக அமையவேண்டும். தொடருங்கள் என வேண்டுகிறோம்.
எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
ReplyDeleteவிருது பெற்றவர்களுக்கு வந்தனங்கள்..
ReplyDeleteவிருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.அவர்களைப் பாராட்டி பதிவு எழுதி அவர்கள் பெருமை பறைசாற்றும் உங்களுக்கும் என் பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றி ரிஷபன்.
ReplyDeleteநன்றி கௌரிப்பிரியா.
நன்றி ஜிஎம்பிஐயா.
வணக்கம் அண்ணா
ReplyDeleteதங்கள் ஊக்கவுரைகளுக்கு நன்றி.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
இனம் இனத்தோடு சேரும் என்பார்கள். இவ்வளவு திறமையான நண்பர்களா உங்களுக்கு? பொறாமையாக இருக்கிறது.
ReplyDelete