Tuesday, June 5, 2012

ஒரு நாள் கழிந்தது...

எதிர்பாராதவர்களிடமிருந்து வரும்
எதிர்பாராதக் கடிதங்களால்...

சிறுசிறு சண்டைகளால்
கொஞ்சம் கொஞ்சல்களால்


சாப்பிடவும் துர்ங்கவும் எனவும்
பேப்பர் வாங்கவும் டீ குடிக்கவும்
ஒதுக்கும் தருணங்களால்...


ஏதேனும் ஒரு மரணத்தால்


என ஈக்கள் மொய்த்ததுபோல்
எல்லாப் பக்கங்களிலும்
மொய்த்துக் கரைகிறது
ஒரு நாளின்
எல்லாப் பக்கங்களும்


ஆனாலும்


அன்னிய நாய் கண்டு குரைக்கும்
வளர்ப்பு நாயின் குரைப்பன்பிலும்


வாசல் குழாயடியில் தேங்கிய நீரில்
குளிக்கும் அந்தப் பறவையின் சிலிர்ப்பாலும்


ஏதோவொரு குழந்தையின் சிரிப்பிலும்



ஒரு நாளின் ஆன்மா
அமைதி கொள்கிறது...

8 comments:

  1. பதிவைப் படிக்க்க முடியவில்லை.புரியாத எழுத்துக்கள் வருகின்றன. பாருங்கள்.

    ReplyDelete
  2. படிக்க முடியவில்லை..

    ReplyDelete
  3. அன்புள்ள ஜிஎம்பி ஐயா அவர்களுக்கும்
    அன்பு ரிஷபன் அவர்களுக்கும்

    ஏதோ தொழில்நுட்பச் சிக்கல். மறுபடியும் மாற்றி பதிவிட்டிருக்கிறேன். என்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  4. நாள் நன்றாகவே கழியும்.... உங்கள் கவிதை படித்து....

    ReplyDelete
  5. உறையும் ஆன்மாவின் அமைதியும், கரையும் ஆன்மாவின் பேரிரைச்சலுக்கும் இடையில் கவிதை வாழ்கிறது. கவிஞனும்.

    மொழியின் புற்று நீங்கியபின் கவிதை பளிச்சிடுகிறது ஹரணி.

    ReplyDelete
  6. அருமை அருமை
    ஆன்மாவுக்கு இதுபோன்ற சிறு சிறு ஆறுதலகள் எல்லையெனில்
    நிச்சயம் மண்ணுலகு நரகமாகித்தான் போகும்
    மனம் கவர்ந்த பதிவு.

    ReplyDelete
  7. சின்னச் சின்ன நிகழ்வுகள் மனதிற்கு அமைதி தரும்போது அவற்றைக் கண்டெடுத்து தக்க வைத்துக் கொள்ள கவிதை வழி சொல்லுகிறது.

    ReplyDelete