இன்று பொக்கிஷம் கிடைத்த நாள்.
நண்பன் சுந்தர்ஜியின் வலைப்பதிவிற்கு சென்று விவேகானந்தரின் துறவியின் பாடலைக் கேட்டு என்னை மறந்தேன்.
மனத்தில் உள்ளதையெல்லாம் சுந்தர்ஜியிடம் கொட்டினேன் துறவியின் பாடல் எற்படுத்திய உணர்வலைகளின் தாக்கத்தால்.
உடனே அவர் எனக்கு அந்தப் பாடலை இன்று அந்த வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுநாளில் மின்னஞ்சலில் அனுப்பிவிட்டார். அவர் அனுப்பியதிலிருந்து ஐந்து முறை பாடலைக் கேட்டுவிட்டேன்.
பொக்கிஷம் ஈந்தவருக்கு நன்றிகள்.
இன்று வீரத்துறவியின் நினைவுநாள்
உங்களைப் பற்றி
நானென்ன உரைப்பது
உலகே உரைக்கும்போது...
உங்கள் நினைவுநாளில்
விழித்திருக்கப்பெற்றவன்
பாக்கியவர்ன்...
எழுபவன்
எழுதப்படுவான் வரலாற்றேடுகளில்
இயங்குபவன்
என்றைகும்
சாகா வரம் பெற்றவன்...
புறத்தால் பணிவதல்ல
உன்னை
அகத்தால் பணிதல் வேண்டும்
அதற்கே பயிற்சி
என் வாழ்நாள் முயற்சி
என்றொரு சொல்லுரைக்க
ஞானமாகும் எந்த வாழவும்...
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
இரண்டு
திருமிகு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கைப்பேசி வழியாக வந்த இனிய தகவல் திரு ஜிஎம்பி ஐயா அவர்கள் தான் பயணிக்கிற வழியில் என்னைச் சந்திக்கவிருப்பதாக.
உள்ளம் துள்ளியது.
முன்பொருமுறை எழுதியிருந்தார் கரந்தையைக் கடக்கும்போது இது ஹரணியின் வீடு என்று தன் மனைவியிடம் கூறியதாக.
அன்பு அளவிடற்கரியது.
காலையுணவிற்கு என் வீட்டில் இருக்க ஐயாவைக் கேளுங்கள் ஜெயக்குமார் என்றேன். நீங்களும் என் வீட்டில்தான் காலையுணவு அருந்தவேண்டும் அன்பு வேண்டுகோள் வைத்தேன்.
சரி என்றார்.
அப்புறம் இல்லை சாப்பிடுவதைவிட சந்திப்பது அவசியமானது. அதற்கான நேரங்களே முக்கியம் என்றுரைதது காபி மட்டும் போதும் என்று ஜெயக்குமார் சொன்னார்.
அதன்படி 7.50 க்கு வீட்டிற்கு வந்தார் ஜிஎம்பி ஐயா.
ஐயா. அம்மா, அவர்களின் திருமகனார் மூவரும் வந்தார்கள்.
இத்தனை வயதிலும் இப்படியொரு நேர்த்தியான அழகிருக்குமா என்பதுபோல பளிச்சென்ற தோற்றம் ஜிஎம்பி ஐயா. அதற்கேற்றாற்போல எளிமையின் அழகோடு அம்மாவும் அவர்கள் பிள்ளையும்.
முதல் அறிமுகமாக அது இல்லை.
நெருங்கிய உறவுகள் போலவும் நீண்ட நாள்கள் தங்கிப் பழகியதுபோன்றும் அவர்கள் இருந்தார்கள்.
அழகான மர்ன் துள்ளலைப்போல இனிய உரையாடல் எங்களுக்குள் நிகழ்ந்துகொண்டேயிருந்தது. மாடியிலிருந்து என்னுடைய சிறு நுர்லகத்திற்கு அழைத்துச்சென்றேன். ஐயா பரவசப்பட்டார். நெகிழ்ந்துபோனார். சுந்தர்ஜி ரிஷபன் ஆர் ராமமூர்த்தி. வைகோ என்று வலைப்பதிவு நண்பர்களை வலைப்பக்கத்திலேயே பார்த்துவிட்டு நேரில் பார்க்கவேண்டும் என்கிற தன்னுடைய விருப்பத்தை எங்களைப் பார்த்த நிகழ்வில் குறிப்பிட்டார். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். இப்படியொரு தருணம் வாய்க்குமா?
அம்மா அவர்களின் சாந்தமான முகம் இன்னும் அன்புகாட்டும் சொற்களோடு காட்சியாகிக்கொண்டிருந்தது. அவசியம் பெங்களூர் வாருங்கள் என்று அன்பு காட்டிச் சொன்னார்.
இது பரவசமான நாள். ஆம் வலைப்பக்கத்தில் கண்டவரை நேரில் சந்தித்து உரையாடியது எத்தனை மகிழ்ச்சியானது. அவர்கள் போன பிறகு திரு ஜெயக்குமார் அவர்களிடம் அந்த இனிய உரையாடல் தொடர்ந்து இருந்தது.
ஒரு நல்ல பொழுதோடு விடிந்த நாள் இது.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
படைப்பாளி என்பவன் பன்முக ஆளுமை கொண்டவன்.
தோண்டத்தோண்ட ஊறும் கிணற்றைப்போல அவனைத் துர்ண்டத் துர்ண்ட உள்ளிருக்கும் படைப்பு பெருகி ஊற்றெடுக்கும் என்பது உண்மையானது.
அப்படித்தான் கவிஞர் ராகவ் மகேஷ்.
முதலில் கவிஞர். நகைச்சுவைக் கவிஞர்.
நல்ல நலமுரைக்கும் நகைச்சுவைப் பண்பு கொண்டவர்.
பின்பு தஞ்சையில் இருக்கும் உள்ளூர் தொலைக்காட்சியில் நகைச்சுவை
நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைத்துப் பல மனங்களைக் கொள்ளைக் கொண்டவர்.
நகைச்சுவை உணர்வென்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அது கடவுளின் வரம்போலவே.
ராகவ் மகேஷ் அதில் திறனானவர்.
அப்புறம் பல தொலைக்காட்சி நிகழ்வுகளில் உலகறிய தன்னுடைய நகைச்சுவைத்திறனை பாடியும் பேசியும் நடித்தும் காட்டிய்வர்.
இப்போதும் அவரது பணி தொடர்ந்திருக்கிறது.
அண்மையில் யமுனா எனும் திரைப்படத்தில் நடித்து ஒருபடி மேலேறியிருக்கிறார்கள். நீண்டுகிடக்கிறது ஏணி. ஏறிக்கொண்டேயிருப்பார்.
இதுபோன்ற கலைஞர்களைச் சொல்வதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தேன். தற்போது அவர் எனது நத்தையோட்டுத் தண்ணீர் புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தை அவரின் அறிமுகத்திற்குரியதாக்கிக்கொண்டேன்.
அவரின் விமர்சனக்கடிதம் - நத்தையோட்டுத் தண்ணீர் நுர்லுக்கானது.
பேரன்பிற்குரிய அய்யா
வணக்கம். கடித மரபு தொலைந்துபோனது பற்றிய உங்கள் கட்டுரை என்னைக் கடிதம் எழுத வைத்தது. நத்தையோட்டுத் தண்ணீர் என்னுள் பல உணர்வுகளை ஏற்படுத்தியது. இன்றைய மனிதர்கள் தொலைத்த பல விஷயங்களையும் நான் ஆற்றவேண்டிய சில கடமைகளையும் எனக்கு உணர்த்தியது. பொதுவாக கதை. கவிதைகளைவிட கட்டுரைகளை சுவாரஸ்யப்படுத்தமுடியுமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்ததுண்டு. முடியும் என்று எனக்கு பதில் சொல்லிவிட்டது இந்த நுர்ல். உங்கள் படைப்புக்களில் வெளிப்படும் யதார்த்தம். நேயம் போன்றவை தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருப்பதை உணரமுடிகிறது. மேலும் மேலும் படையுங்கள். படிக்கப் பெரும்படையே காத்திருக்கிறது.
அன்புடன்
ராகவ் மகேஷ்
ஒரு படைப்பு ஏதேனும் சிறு கடுகளவேணும் பாதிப்பை விளைவை ஏற்படுத்தினால் அது அர்த்தமுடையதாகிறது. மேற்சுட்டிய கடிதத்தில் நுர்லைப் படித்ததும் கடிதம் எழுதுவேண்டும் என்ற உணர்வைத் துர்ண்டிக்
கடிதம் எழுதி அனுப்பவைத்தது என்று சொல்வதே வெற்றிதான். இதற்கப்புறம்தான் விருதுகள் எல்லாமும்.
(நன்றி திரு ராகவ் மகேஷ)
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
இந்த நாள் இனிய நாள்!! மகிழ்வும் வாழ்த்தும்.
ReplyDeleteபதிவின் இறுதி வரி பண்பட்ட மனசுக்கு பொருத்தமாய்... நிறைகுடம்.
அனைத்தையும் பகிர்ந்து கொண்ட விதம் சிறப்பாக இருந்தது. அருமை!..
ReplyDeleteபொக்கிஷம்- மகிழ்வு
ReplyDeleteபரவசமான நாள்... வாழ்த்துகள்..!
இனிய நாள் எங்களையும் மகிழ்வித்தது... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதிரு ஜிஎம்பி ஐயா அவர்களுடன் தொலைபேசியில்தான் பேசினேன். முதல் முறை பேசுகிற உணர்வே இல்லாமல் பல நாட்கள் பழகிய மனதைத் தொடும் குரல்.
ReplyDeleteராகவ் மகேஷின் வாழ்த்தும் சேர்ந்ததில் இன்னும் ஆனந்த்ம்.. இம்மாதிரி இன்னும் பல உற்சாகங்களால் நிறையட்டும் உங்கள் இல்லம்.
எதிர்பாராத நேரத்தில் யாரோ ஒரு வாசகர் பாராட்டு தெரிவிக்கும் போது தான் எழுதியவனின் எழுத்து அர்த்தமுள்ளதாகிறது.
ReplyDeleteசிறப்பான நாள் தான். நீங்கள் கொண்ட சந்தோஷத்தினை எங்களுடன் பகிர்ந்து கொண்டு எங்களையும் சந்தோஷம் கொள்ளச் செய்தமைக்கு நன்றி ஹரணி ஜி!.
ReplyDeleteஜி.எம்.பி. அய்யா அவர்களைச் சந்தித்த நாள் இனிய நாள், வாழ்வின் மறக்க இயலா திருநாள். நன்றி
ReplyDelete
ReplyDeleteஅன்பின் ஹரணிக்கு, சென்ற ஆண்டு பயணப் படும்போதே உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று எண்ணியிருந்தேன். இருந்தாலும் இந்த முறை சந்தித்தே ஆக வேண்டும் என்று விரும்பினேன். முதலில் எங்கள் பயணம் பேரூந்து மூலமாகவே திட்டமிடப் பட்டிருந்தது. என் மனைவிக்கு திட்டை சென்று குரு பகவானை வழிபட விருப்பமிருந்தது. இருக்கும் நேரத்தில் பேரூந்து பயணம் மிகவும் சிரமம் தரக் கூடியதாக இருந்திருக்கும். எனக்கும் உங்களை எல்லாம் காண வேண்டும் போலிருந்தது. எங்கள் மகன் குறிப்பறிந்து கார் பயணத்துக்கு ஏற்பாடு செய்து எல்லோரும் மகிழ்ச்சி பெற வழிவகுத்துவிட்டான். இவ்வளவு கற்றும் முனைவராக, பேராசிரியராக இருந்தும் அவ்வளவு எளிமையாக உங்களைப் பார்த்து ஆச்சரியப் பட்டேன். சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள் “ நிறை குடம் தளும்பாது “ என்று. உங்கள் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து விட்டேன். அப்பப்பா...! இதிலேயே எவ்வளவு வெரைட்டி. ஜெயக்குமாருக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். உங்களது ஆதரவும் அன்பும் தொடருமானால் நானும் தொடர்ந்து ஏதாவது எழுதிக் கொண்டிருப்பேன். அந்த சில மணித்துளிகள் என்றும் நினைவில் இருக்கும். நன்றியுடன்