Thursday, August 15, 2013

நத்தையோட்டுத் தண்ணீர்.....விமர்சனம்




           நத்தையோட்டுத் தண்ணீர்..... குமுதம் விமர்சனம்..



              தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது போலவே எல்லாமும்
நமக்குள்ளேயே நடந்தேறிவிடுவதை நாகரிகமான முறையில்
நம்முன் எடுத்து வைக்கிறார் ஹ ரணி. வாசிப்பு அனுபவம் நம்மை
அடையாளப்படுத்தும் என்கிறார்.

            சுட்டிக் காட்டுவது நட்பு. சுடப்படுவது நட்பல்ல என்கிறார்.
காற்று நுழைய முடியாத இடத்தில்கூட கடித உணர்வுகளை
நுழைக்கிறார். சந்தர்ப்பவாதிகளை மன உறுதியோடு தவிர்க்க
உதவுகிறார்.

            வழிகாட்டிகளையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்களையும்
இனம் காண வைக்கிறார்.

                மொத்தத்தில் ஹ ரணி தம் மனவோட்டத்தை நத்தையோட்டுத்
தண்ணீரில் வானம் பார்ப்பதுபோல் பகிர்ந்துகொள்கிறார்.


                                                                             - இரா. மணிகண்டன்


(நன்றி.. குமுதம் (21.8.2013)  நன்றி இரா. மணிகண்டன்)

5 comments:

  1. மிக அருமையாக குமுதத்தில் விமர்சனம் செய்துள்ளார்கள் ஐயா. சந்தோஷமாக உள்ளது.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  2. மேலும் சிறப்புகளை எய்த வாழ்த்துகின்றேன்!..

    ReplyDelete
  3. என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளும், ஐயா.

    ReplyDelete
  4. ஐயா, வணக்கம். இன்று என் வலைத்தளத்தில் மேலும் ஒரு சிறப்புப்பதிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. நேரமிருந்தால் வருகை தாருங்கள். இது Just தங்களின் தகவலுக்காக மட்டுமே.http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html

    அன்புடன் VGK

    ReplyDelete
  5. ஹரணி தம் மனவோட்டத்தை நத்தையோட்டுத்
    தண்ணீரில் வானம் பார்ப்பதுபோல் பகிர்ந்துகொள்கிறார்.


    மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete