பொடி முட்டை,,,
(நாடகம்)
( ஒரு வீட்டின் உறால் அது. தாராளமான இடவசதிகொண்டது)
வயதானவர்..:
அம்மா.. மருமகளே இன்னிக்கு முட்டை
சாப்பிடணும்போல இருக்கு. ஒண்ணு அவிச்சிகொடேன்..
மருமகள் :
முட்டை என்ன விலை விக்குது தெரியுமில்லே..
4.50..
வயதானவர் :
நான் வாங்கிட்டு வந்திருக்கேம்மா.. இந்தா
எல்லாருக்கும்
(கொடுக்கிறார்)
(மருமகள் வாங்கிகொண்டு முணுமுணுக்கிறாள்)
(பென்ஷன் வாங்கற கொழுப்பு... இந்த முட்டைக் காசு
இருந்தா வேற சாப்பிடலாம் வாங்கி)
வயதானவர் : என்ன சொல்றேம்மா?
மருமகள் : அவிச்சி தரேன்.
ஆளுக்கொன்றாக நாலு முட்டைகளை அவித்து வைக்கிறாள்.
காட்சி 2
(ஹர்லில் வயதானவர் ஒரு சிறுவன் அவன் அப்பா
மருமகள்)
சிறுவன் : தாத்தா சாப்பிட வாங்க.. அம்மா கூப்பிடுது..
(வயதானவர் சாப்பிட அமர்கிறார்)
மகன் : முட்டை அவிச்சியா.. போடு.,.போடு..
அவிச்ச முட்டை சாப்பிட்டு நாளாச்சு..
வயதானவர் : (தன் முட்டையை உடைத்து வெள்ளைக்
கருவை மட்டும் வைத்துக்கொண்டு மஞ்சள் கருவை
எடுத்து மகன் தட்டில் போடுகிறார். அவனுக்குப் பிடிக்கும்)
சாப்பிடுப்பா..
(மகன் சாப்பிடுகிறான்) (பக்கத்தில் சிறுவன்)
மருமகள் : இது என்ன இது ரெண்டு மஞ்சள் கரு ஏது?
மகன் : அப்பாவுக்கு ஒத்துக்காதுல்ல.. அதான் கொடுத்தாரு.
மருமகள் : உங்களுக்கு என்ன சின்ன வயசா? உங்களுக்கு மட்டும்
ஒத்து வருமா அதுவும் ராத்திரியிலே ரெண்டு மஞ்சக்கரு
கொண்டாங்க.. ஒண்ணு போதும்
(ஒரு மஞ்சள்கருவை எடுத்து பிள்ளை தட்டில்
போடுகிறாள்)
சிறுவன் : போ... எனக்கு முட்டை வேணாம். போ..
மருமகள் : ஏண்டா வேண்டாம்?
சிறுவன் : எனக்கு பொடி முட்டைதான் வேணும்..இது வேண்டாம்.
மருமகள் : நாளைக்கு செஞ்சு தரேன்.. இப்ப இத சாப்பிடு.
சிறுவன் : முடியாது... எனக்குப் பொடி முட்டைதான் வேணும்.
மகன் : அவனுக்கு என்ன பிடிக்குமோ அப்படி செய்ய வேண்டி
யதுதானே?
மருமகள் : உங்கப்பாவுக்கு அவிச்சா புடிக்கும். இவனுக்கு பொடி
முட்டை புடிக்கும். உங்களுக்கு ஆம்லெட் புடிக்கும்
ஆளுக்கொண்ணு செய்யமுடியுமா?
மகன் : நான் ஆம்லெட் கேட்டனா? புள்ளக்கிப் புடிச்சத
செய்யவேண்டியதுதானே?
வயதானவர் குட்டிப்பயலே சாப்பிடு.. நாளைக்குத் தாத்தா
முட்டை வாங்கிட்டு வரேன்.. பொடி முட்டை
அம்மாவ செய்யச்சொல்லி சாப்பிடலாம்..
சிறுவன் : போ தாத்தா.. எனக்கு பொடி முட்டைதான்
வேணும்.. (தட்டிலிருந்து முட்டையை எடுத்து
தரையில் வைக்கிறான்)
மருமகள் : இந்த வயசிலேயே எவ்வளவு அழுத்தம். சாப்பிடுடா..
(அடிக்கிறாள்... அழுகிறான்)
காட்சி 3
வயதானவர் : அவன அடிக்காதம்மா..
மருமகள் : உங்க வேலைய பாருங்க... உங்களுக்கு முட்டை
வச்சாச்சுல்ல சாப்பிடுங்க..
மகன் : எதுக்கு நீ இப்படி பேசறே? அப்பா என்ன பண்ணாரு?
மருமகள் : இப்ப யாரு முட்டை வேணும்னு கேட்டா?
வயதானவர் : என்னமோ நாக்குருசி கேட்டுட்டேன...முட்டை
சாப்பிடணும்னு தோணிச்சி.. கடைத்தெருவுலே
அவிச்ச முட்டை இருக்கு.. எல்லாரும்சேந்து
சாப்பிடலாம்னு வாங்கிட்டு வந்தேன்..
சிறுவன் : எனக்கு பொடி முட்டைதான் வேணும்.
மருமகள் : இப்ப அடி வாங்கி சாவப்போற பாரு..
மகன் : இதே எழவா போச்சு.. புள்ள வந்து பொறந்திருக்கு
பாரு..
(என்றபடி பாதியில் எழுந்துபோனான் கைகழுவ)
(மருமகள் அடுப்படி உள்ளே போனாள் முனகியபடி)
வயதானவர் (வெள்ளைக்கருவை பொடிப்பொடியா நசுக்கி
இந்தா பொடி முட்டை )
சிறுவன் : என்னை ஏமாத்தறியா தாத்தா? இது பொடி முட்டை
இல்லே. (என்றபடி எழுந்து வந்து வயதானவர் தட்டில் இருந்த அந்த
முட்டைத் துகள்களை அப்படியே அள்ளி தெருப்பக்கம் போய்
வீசினான்)
(நிறைந்தது)
பெரியவரின் அன்பைப் புரிந்து கொள்ள யாரும் இல்லாத அந்த வீட்டில் - தட்டில் இருந்த வெள்ளைக் கருவும் வீதிக்குப் போனது தான் கொடுமை!..
ReplyDelete’’ நன்றாற்றலுள்ளும் தவறுண்டு!..’’ - ஐயன் வள்ளுவர் சொன்னது சரியே!..
வணக்கம்
ReplyDeleteஐயா.
மிகவும் வித்தியாசமான பதிவாக உள்ளது யாரும் எழுதவில்லை நீங்கள் எழுதியுள்ளீர்கள். நாடகத்தின் உரையாடல்கள் மிக அருமையாக உள்ளது.பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை
ReplyDeleteஆனால் மனம் கனக்கிறது
மகன் மகள் என்று இவர்களைச் சார்ந்து நிற்கும் பல பெரியவர்கள் சந்திக்கும் நிகழ்வுகள்தான் வாழ்வின் நிதரிசனம் பெரியவர் வசதி படைத்தவராக இருந்துவிட்டால் கதையே மாறி இருக்கும். வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDelete