Monday, November 21, 2011

புதிய ஆத்திசூடி

ஔவையின் ஆத்திசூடியைத் தொடர்ந்து பாரதி புதிய ஆத்திசூடி எழுதினார். நாமும் எழுதிப் பார்த்தால் என்ன என்ற யோசனை வெகுநாளாகவே மனதில் இருந்தது. அதன்விளைவுதான். ஆனால் இன்றைய சூழ்ல் மனதிற்கு சஙக்டமாக உள்ளது. மனித நேயம், பரிவு, நட்பு எல்லாம் வீண். மனிதனை மனிதன் உட்கொள்ளும் வன்முறை பெருகியுள்ளது. இன்றைய சூழலின் விளைவையே

இந்த ஆத்திசூடியில் பகிர்ந்துகொள்கிறேன்.


விரும்பாததது.......
/////////////


அரசியல் அறம் ஒழி

ஆன்மீகப் புலைத்தனம் கல்

இயன்றவரை துரோகம் இழை

ஈட்டுதலுக்காக குற்றம் பயில்

உண்மை எப்போதும் மறு

ஊழலைத் துணிந்து பேண்

எண்ண்த்தில் விடம் நிரப்பு

ஏற்றம்பெற எதுவும் செய்

ஐம்புலனையும் அடக்காது செல்

ஒவ்வொரு நாளும் வன்முறை புரி

ஓராயிரம் முறை நடித்து வாழ்

ஔவை சொல் விலகு.


விரும்புவது.......
/////////////////


அன்புசால் உலகு செய்

ஆற்றலைப் பெருக்கி நில்

இயன்ற வரை உதவு

ஈடடுவதில் தருமம் நிறுத்து

உண்மை எப்போதம் பேசு

ஊரின் நியாயம் கேள்

என்றும இறைவன் துணைகொள்

ஏறறம் பெற உழைப்பு தேடு

ஐம்புலன் செம்மைப் பேண்

ஒவ்வொரு நொடியும் நல்சிந்தை நினை

ஓடிஓடி உறவுகள் வளர்

ஔவை பாரதி வணஙகி வாழ்


எல்லோரும் அவரவர் சிந்தைக்கேற்ப ஆத்திசூடி எழுதுஙக்ள். நல் உலகு மலரட்டும்.


Thursday, November 17, 2011

குழந்தைப் பாடல்கள்

குழந்தை இலக்கியம் குறித்து அதிகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத சூழல் இன்றைக்கும் நிலவுகிறது. இன்னொருபக்கம் குழந்தைகள் இலக்கியம் குறித்து அக்கறையுள்ள இலக்கியப் படைப்பாளிகளும் இதழ்களும் கவனம் செலுத்துகின்றன. நம்முடைய பங்கிற்கும் எதாவது செய்யவேண்டும் என்கிற உந்துத்ல் எப்போதும் மனத்தில் சுழன்றுகொண்டேயிருக்கிறது. தவிரவும் நீண்ட நாட்களாகிவிட்டன குழந்தைப் பாடல்கள் எழுதி. எனவே சில பாடல்கள் மறுபடியும்.



அணில்குட்டி

அணில்குட்டி அணில்குட்டி
அழகான அணில்குட்டி
முதுகுமேல திருநீறு
பூசிக்கிட்ட அணில்குட்டி
தாவிதாவி ஓடுமாம்
தரைமேலேயே தாவுமாம்
வாலவால ஆட்டிக்கிட்டு
ராம்ராம்னு பாடுமாம்
கருப்புமுழி கருகமணி
முழிச்சிக்கிட்டு கத்துமாம்
கட்டைசுவத்துமேல
நின்னுகிட்டு வரம்கேட்டு
ஆடுமாம்...

000000


வானம் முழுக்கப் பாருங்க
கண்ண சிமிட்டி கண்ண சிமிட்டி
காடடும் அழகு நட்சத்திரம்...

அம்மா நிலவு மெல்ல வந்து
அன்பாய் சிரித்துப் பாலுர்ட்டும்
கர்ற்று அடித்து காற்று அடித்து
மேகம் நிலவை மறைக்குமாம்...

கண்ண சிமிட்டி கண்ண சிமிட்டி
நட்சத்திரம் வேண்டாம் வேண்டாம்
என்குமாம்...

மேகம் ஓடி அழுவுமாம்
அம்மா நிலவு சிரிக்குமாம்..

அன்பு என்ற சக்தியை
அம்மா என்ற சக்தியை
யாரும் மறைக்க முடியாதாம்...

அம்மாபோல அன்புகாட்டி
அனைவருமே வாழுவோம்...

00000


காட்டுக்குள்ளே திருவிழா
கலகலன்னு நடக்குமாம்..

குயிலு அக்கா பாடுமாம்
மயில அக்கா ஆடுமாம்
ஓடிஓடி முயலு அண்ணா ஓயாம
அழைக்குமாம் வாங்க..வாங்க்..வாங்க..

சிங்கம் மாமா தலைமையில்
சிறுத்தை அண்ணா கச்சேரி
மான்கள் கூட்டம் மத்தளம்
மயக்கும் இசையில் நடக்குமாம்..

வகைவகையா விதவிதமா
விருந்து எல்லாம் நடக்குமாம்
பச்சைப்பச்சை காய்கறி
பழுக்கப் பழுக்க பழங்களாம்
பட்டாம்பூச்சி மெத்தையாம்
பளபளன்னு மின்னுமாம்...

குருவி வந்து சிரிக்குது...கரடி வந்து உறுமுது
யானை வநது பிளிறுமாம்..குதிரை வந்து கனைக்குமாம்..
எல்லாம் வந்து கூடிக்கூடி
பேசிப்பேசி களிக்குமாம்...

மிருகமெல்லாம் மிருகமா
பறவையெல்லாம் பறவையா
பண்போடு இருக்கணும்
பாழும் மனுசன் குணத்தைப் பார்த்து
பாதை மாறக்கூடாதாம்..

அதுக்குத்தான் திருவிழான்னு
தீர்மானமா சொன்னிச்சாம்
விருந்து வாசம் வந்துச்சாம்
திருவிழாவும் முடிஞ்சிச்சாம்..

00000

Thursday, November 10, 2011

குழந்தைகளிடம் கேட்டவை.

குழந்தைகள் எப்போதும் எந்தக் காலக்கட்டத்திலும் நம்மை ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிகளுககும் உள்ளாக்கிக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் பேச்சும் செயலும் பிரமிப்பும் மன அதிர்வையும் தருகின்றன நமக்கு. நான் சில குழந்தைகளிடம் கேட்ட கதைகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.


மூன் மம்மி இருக்குல்லே..அதுக்கு ஏராளமான ஸ்டார்ஸ் பேபிஸ்..அதனால அது எப்பவும் சிரிச்சிக்கிட்டேயிருக்கும். ஆனா சூரியன் பாவம். அதுக்கு பேபிங்களே இல்லை. அதனால அது மூன் மம்மியைப் பார்த்ததும் கோபமாயிடிச்சி..அது மலைமேல இருந்துச்சா..அங்கிருந்து கிளம்பிடுச்சி. அதுக்கு ஒரே கோபம். வெளியே வந்து வேகமா மூன் மம்மியையும் ஸ்டார்ஸ் பேபிங்களயும் முழுங்கிடிச்சி. அதனாலதான் பகல்லே மூன் மம்மியும் ஸ்டார்ஸ் பேபிங்களும் காணமாப் போயிடிச்சி. அவ்வளவுதான் கதை.

000000000000

தம்பி கடவுள் இருக்காரா?

சாமி இருக்கா இல்லையான்னு தெரியாது.

கடவுள பார்த்திருக்கியா?

கடவுள பாத்திருக்கேன்.

எங்கே?

அதான் தெருத்தெருவா தேர்ல வர்றாரே...


00000000000000


ஒரு குழந்தையிடம் தாய் கதை சொல்லிக்கொண்டிருந்தாள். பாட்டி வடை சுட்ட கதை. கதையில் கடைசியில் நரி காக்கா போட்ட வடையைக் க்வ்விட்டு போயிடிச்சிசொன்னதும். குழந்தை கேட்டது தப்பா கதைய சொல்றியே மம்மி.. என்றது.

என்னப்பா தப்பு?

நரி வைல்ட் அனிமல் ஆச்சே? அது எப்படி வடையை சாப்பிடும். கறிதானே
சாப்பிடும்? கதைய மாத்தி சொல்லு.

0000000

ஒரு கவிதை...


குழந்தைகள்

வாழ்க்கைப் படகின் துடுப்பு...
நம்பிக்கையின் வேர்
எந்தப் பக்கத்தின் இருளையும்
வெளிச்சத்தால் நிரப்புவர்கள்..
கடவுளின் பல அவதாரங்களையும்
காட்சிப்படுததக்கூடியவர்கள்
கடவுளின் சிரிப்பையும்
கடவுளின் அழுகையையும்
கடவுளின் தவிப்பையும்
கடவுளின் ஏக்கத்தையும்
கடவுளின் பிடிவாதத்தையும்
காட்டுபவர்கள்...
ஒன்றேயொன்றுதான்
குழந்தைகளிடம் நெருங்க
குழ்ந்தைகளாகவேணடும் நாம்..
ஆனாலும் குழந்தைகளாக
முயல்வது ரொம்பக் கடினம்
அதே சமயம் அது ரொம்ப
எளிதும்கூட...


தம்பி சாமி கும்பிடுப்பா...

சாமிய கும்பிட்டா என்னா அம்மாச்சி?

சாமி கேட்டதெல்லாம் குடுக்கும்,,

அப்புறம் ஏன் கடையில பெல்ட் சாக்ஸ் எல்லாம் கேட்டா காசு கேக்கறாங்க அமமாச்சி?

00000000000


ஒவ்வொரு முறையும
ஒவ்வொரு பொருள்தரும்
கவிதை
குழந்தைகள் மட்டுமே...

மனித இனத்தின்
முதல் மொழி
குழந்தைகள் மட்டுமே....

எல்லா வாழ்வின்
எப்படிப்பட்ட சிக்கல்களையும்
தீர்ப்பவர்கள்
குழந்தைகள் மட்டுமே...


ஆகவே
குழந்தையாகப் பிறந்து
குழந்தையாகவே
இறப்பவர்கள் மட்டுமே
வாழ்ந்தவர்கள்...

Saturday, November 5, 2011

அவர்களும் நமது பிரதிகளும்



இப்போது அதிகம்
அலைகிறார்கள்...

நெருக்கடியாக சாலையின்
நடுவே நிறைகிற வாகனங்களுக்கிடையில்
காற்றுவெளியில்
கவலையற்று நிற்கிறார்கள்...

ஒருவன் இளைஞன்
ஒருத்தி இளம்பெண்
ஒருவர் முதியவர்

அவரவர் அவரவர்
கவலைகளோடு
போய்க்கொண்டிருக்கையில்

இவர்கள் சிரித்தபடியும்
அல்லது அழுதபடியும்
அல்லது ஏதோ முணுமுணுத்தபடியும்
நிற்பதைப் பார்க்கையில்
உள்ளுக்குள் உடைகிறது
ஒரு பயம்...

அவர்கள் சிரிப்பு நம்முடையதுபோல
அவர்கள் அழுகை நாம் அழுவதுபோல
அவர்கள் முனகல் நாம் முனகுவதைபபோல...

வாழ்க்கையினைப்
பிரதியெடுத்த பிரதியை
மனதில சுமந்திருப்பதுபோல...