Thursday, June 19, 2014

வாழ்க்கையின் சுவை....




                            வாழ்க்கையின் சுவை....

                   அலுவலக வேலை நிமித்தமாக நேற்றிரவு செம்மொழியில்
கோவை சென்று இன்று திரும்பிவந்தேன். திரும்பி வருகையில் பேருந்துப் பயணம்.  அதில் சில சுவைகள்.



நிகழ்வு 1


                  எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை விதிக்கப்பட்டிருக்கிறது. விதிக்கப்பட்ட வாழ்க்கையின் இன்பமும் துன்பமும்கூட அவரவரக்கானது.
இதை ஒவ்வொரு பயணத்தின்போதும் உணர்கிறேன். கூட்டங்கூட்டமாய்
பயணித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

                    பரபரப்பாக ஓடி வருவது.

                    ஒரு கையில் துர்க்கமுடியாத நிலையில் நாலைந்து பைகள்.
இன்னொரு கையில் குழந்தை.

                        ஏங்க இது.. சிங்காநல்லுர்ர் போவுமா?

                        கண்டக்டர் பதில்சொல்வது அவரின் மனநிலையை (மூட்)
பொறுத்தது. எப்படியாயினும் ம்... என்பதை ஒலிக்குறைவாகவேணும்
சொல்லிவிடுவார்.

                        இந்தாங்க நான் அடுத்த மார்க்கட் ஸ்டாப்பிங் இறங்கணும்..  பர்க்கி
சில்லறை கொடுங்க.. அப்புறம் ஒரு ஐந்நுர்றுக்கு சில்லறை கொடுங்க..

                          இதற்கு எதிர்விளைவு காட்டும் கண்டக்டரைப் பற்றித் துளியும்
கவலைப்படுவதில்லை.

                           என்னங்க சில்லறை இருக்கா ? இல்லியா?

                           பேருந்து போய்க்கொண்டிருக்கையில்

                           எல்லாருமா ஆயிரம் ஐந்நுர்றா கொடுத்தா என்ன பண்றது?
கண்டக்ருக்குன்னு தேடி எடுத்துட்டு வருவீங்க போலருக்கு..நான் என்ன
பேங்க் ஆபிசரா.. அப்படியொரு பொழப்பு போட்டிருந்தாக்கூட  அங்கயும்
சில்லறைதான் கொடுப்பேன் போலிருக்கு..

                           ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


         நிகழ்வு 2


                                ஐம்பது வயதைத்தாண்டியவர் அவர்.  சிங்கா நல்லுர்ரைவிட்டு
பேருந்து புறப்பட்டு பல்லடம் வந்து டிக்காக நிறுத்தியபோது நிறுத்தியிருந்த
பேருந்தில் ஏறி நிற்காமல் ஆடிகொண்டிருந்தார்.

                               நன்றாகக் குடித்திருந்தார்.

                               எங்க போறய்யா நீ? பல்லில் சிக்கிக்கொண்ட போண்டாவின்
துகள்களை சிறுகுச்சியால் குத்திக்கொண்டே கண்டக்டர்,

                               காங்கயம் ஒண்ணு கொடுங்க ஐயா.. அத்தனை குடியிலும்
மரியாதையாகப் பேசினார்.

                               இடமிருக்கே உக்காரேன்..

                               வேண்டாம். துர்ரமா பயணம்போறவங்க உக்காரட்டும்..
பொண்டு புள்ளவ வரும்.. ஆடிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆட்டததிற்கும்
கல்யாண வீட்டில் வாசனை திரவியம் அடிப்பதுபோல போதை நெடி..
எல்லார் மூக்கின் முற்றத்திலும் நடனமாடியது,, யார் மீதாவது வாந்தி
எடுத்துடுவாரோ என்கிற பயம் வேறு எல்லார்க்கும் இருந்தது,

                               கண்டக்டர் டிக்கட் போட்டுவிட்டு வந்தார். அவரை
நிறுத்திவிட்டு ஆடிக்கொண்டிருப்பவர் கேட்டார்.

                                  ஐயா.. உங்களுக்கு எத்தனை வருஷம் சர்வீஸ்?

                                  ஏன் அதக் கேட்டு என்ன பண்ணப்போறே? எனக்கு பிரமோஷன்கீது கொடுக்கப்போறியா?

                                   சொலலுங்கய்யா..

                                   பதினைந்து வருஷமாச்சு.. என்றார் கண்டக்ட்ர்.

                                  எனக்கு முப்பத்தியேழு வருஷம் சர்வீஸ். குடிச்சுக்கிட்டே
யிருக்கேன். ஆனா ஒரு தடவகூட யார் மேலயும் வாந்தி எடுத்தது இல்ல,
அப்படித்தான் நான்.. அதானய்யா உங்களுக்கு டவுட்டு,, நானும் கிராம
சிப்பந்தியா இருந்தவதான் தாசில்தாரு ஆபிசுலே.. ஆனா வேலையில
கரக்ட் இருப்பேன். வேல முடிஞ்சவுடனே கடைதான்,, குடிதான்,,

                                   டிரைவர் உட்பட எல்லோரும் சிரித்துவிட்டோம்.

                                   காங்கேயம் வரும் வரை ஆடிக்கொண்டிருந்தார். ஆடியபடியே இறங்கிப்போனார். ஆனால் வாந்தி எடுக்கவில்லை.


நிகழ்வு 3


                     பேருந்தில் வரும்போது கரூர் தாண்டி சாலையோரம் ஆக்ரமிப்பு செய்திருந்தமையால் இடதுபக்கமிருந்த வீடுகள் ஒவ்வொன்றின் முகப்பும் இடிக்கப்பட்டிருந்தன.  அவற்றின் சுவர்களில் ஒரே விளம்பரம். கிருஷ்ணா
அரிசிக்கடை.  அவற்றை எழுதிய ஓவியரின் ரசனையாக இருக்கவேண்டும்
என்று நினைக்கிறேன்.  கிருஷ்ணா என்ற சொல்லில் உள்ள கி என்ற எழுத்தின்
தலையில் இரண்டு மயில் இறகுகளை வரைந்திருந்தார். கிருஷ்ணா என்ற சொல்லிற்கு அடிக்கோடிட்டதுபோல ஒரு புல்லாங்குழலையும் வரைந்திருந்தார்.


நிகழ்வு 3


                             நாட்டாமை போல மீசை வைத்திருந்தார். தலையில் கறுப்பு மை பூசியிருந்தார். மீசை முழுக்க வெள்ளை. இடது கையில் ஒரு தாளை பொட்டலம் போல சுருட்டியிருந்தார். வலது கையில் ஒரு சில்வர் துர்க்கு.
சூடான பட்டாணி சுண்டல்.. சூடா இருக்கு பட்டாணி சுண்டல்.. தரட்டுமா சார்.. தரட்டுமா ஐயா.. தரட்டுமா அம்மா சூடான பட்டாணி சுண்டல்.. என்றபடி
கத்திக்கொண்டே போக. வாசனை துர்க்கைத் தாண்டி பேருந்தில் தவழ்ந்தது.
நாலைந்துபேர்கள் வாங்கினார்கள். திறந்து பொட்டலமாக மடித்துக்கொடுக்க பட்டாணி சுண்டல் வாசனை வாங்கித் தின்னவேண்டும் என்று துர்ண்டியது.
துர்ண்டலில் சிலர் வாங்கினார்கள்.

                         அப்போது பேருந்து சிங்காநல்லுர்ரைவிட்டுப் புறப்படவில்லை.

                         சற்றுநேரத்தில் அந்த சுண்டல்காரர் இறங்கி எதிரில் இருந்து ஆவின் பால் கடைக்குப் போய் சுண்டல் துர்க்கை வைத்துவிட்டு நெற்றியின் வியர்வையைத் துடைத்தார் (இதுபற்றி சற்று விளக்கமாக கீழே தருகிறேன்)
பின்  கடையில் இருந்த சம்சாக்களில் இரண்டை எடுத்து,,

                             டீ சூடா போடுப்பா,, என்னா பசி என்றபடி சம்சாக்களைத்
தின்ன ஆரம்பித்தார்.

                            தின்று முடித்ததும் கடையிலிருந்த துண்டு பேப்பரை எடுத்து
கையை. வாயைத்துடைத்துக்கொண்டார்.

                                டீயை சாப்பிட்டு முடித்தார்.

                               எல்லாம் முடிந்ததும் தன் இடது கைப்பக்கம் வைத்திருந்த அந்த
(அவரின் சுண்டல் மடிக்கும் தாள் அது) தாளை எடுத்துப் பொட்டலம் போல
மடித்துக்கொண்டு

                             பசிக்கு சூடான பட்டாணி சுண்டல்,,, என்று குரலெழுப்பியபடியே
அடுத்த பேருந்திற்குள் ஏறினார்.

                         
                               அவரவர்க்கான தேவைகளுக்கும் சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும  தீர்வுகளுக்கும் எனப் பயணம் மேற்கொண்டாலும் சற்று
அதிலிருந்து விலகி சூழலைக் கவனித்தால் வாழ்க்கை சுவையானதுதான்,


                              0000000000000000000



                     சுண்டல்காரர் நெற்றி வியர்வையைத் துடைத்தார் என்று எழுதினேன் அல்லவா?

                       ஒரு படைபபாளியாக இருப்பதால்  அதை கதையில் சொன்னால் எப்படி கற்பனை செய்து எழுதுவேன் என்று யோசித்தேன்,

                         உங்களுக்கும் அந்தக் கற்பனை பகிர்வு,


                          கற்பனை   1

     
                           ஒரு கேள்விக்குறியை படுக்க வைத்ததுபோல் வலதுகையின்
நான்குவிரல்களை மடக்கி நெற்றியின் வியர்வையை விரல்களால்
விழுங்கி பின் அப்படியே தரையில் துப்பினார் அந்த சுண்டல்காரர்.

                        கற்பனை 2


                         மழைக்காலத்தில் இயங்கும் வைப்பரைப்போல விரல்களை
வைப்பர்களாக்கி நெற்றிவியர்வையைத் துடைத்து உதறினார். கலலடிபட்ட
மரத்திலிருந்து பயந்து பறக்கும் பறவைகளைப்போல அந்த வியர்வைத்
துளிகள் நாலாபக்கமும் சிதறின சுண்டல்காரரின் விரல்களிலிருந்து விடுபட்டு,

                          கற்பனை 3


                            தலையில எழுதிய எழுத்தின் மையொழுகுவதைப்போல
சுண்டலகாரரின் நெற்றியில் வியர்வை ஒழுகியது. வலதுகையால் துடைத்து
எரிச்சலோடு எறிந்துவிட்டு டீயை போடுப்பா என்றபடி அதே கையால
சம்சாவை எடுத்து வாயில் வைத்து பசியின் வேகத்தைக் காண்பிக்க ஆரம்
பித்தார்,

                                சந்திப்போம்.

                               

Tuesday, June 17, 2014

போதிமரக் கதைகளும் உபரியாய் ஒரு கவிதையும்.



    போதிமரக் கதைகளும் உபரியாய் ஒரு கவிதையும்


000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


                                                             ( 1 )



                                சோத்துல உப்புப் போட்டுத்தான திஙகற... பணம் வாங்கி
எத்தனை நாளாச்சு?
                                  பேசாமல் நின்றான்  ரவி. அவன் எதைப்பற்றியும் கவலைப்
படுவதில்லை. அவன் குடும்பமே அப்படிததான். ஊரெங்கும் கடன். தெருவில்
நின்று கடன்கொடுத்தவர்கள் கத்திவிட்டுப்போவார்கள். மானம். அவமானம்
இவற்றுக்கெல்லாம் கவலைப்படுகிறவர்கள் இல்லை.

                                 பேசப்பேச பேசாமல் கல்லைப்போல நின்றான்.

                                  எப்பத்தாண்டா தருவே?

                                   தந்துடறேன் அண்ணே..

                                   எனக்கு சோர்வானது. கிளம்பிவிட்டேன்.

                                   என்னா பணம் கொடுத்தானா?

                                    ,,,,,,,,,,,,,,,,,,,,,,

                                   உங்களதாங்க கேக்கறேன்.

                                    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

                                    அழுத்தம். அத்தனை அழுத்தம். ஆனா கொடுத்த கடனை
வாங்க துப்பில்லே.

                                     ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

                                    எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டுப் படுத்தேன். பேசினால்
விபரிதமாகும். அந்தப் பயலுக்குக் கடன்கொடுத்துவிட்டு  டாக்டருக்குப்
போய் வட்டிக் கட்டமுடியாது.

                                    0000000000000000000000000000



                                               மேய்தலும் கடித்தலும்


                                    காலையிலேயே வீட்டு வாசலில் நின்று கத்தினாள்
பரிமளா.  ஆண்பிள்ளை குணம்கொண்ட பெண் அவள்.

                                     ஏங்க.. உங்க நாயால என்னோட ஆடு செத்துப்போச்சு.

                                    என்ன சொல்றே?

                                     உஙக நாய் கடிச்சு என்னோட ஆடு அதுவும் குட்டி
செத்துப்போச்சு..

                                     அதுககு இப்ப என்ன பண்ணணுங்க்றே,,, ஊரு ஊராப்
போய் செடி வாங்கி வச்சா.. எங்க முளைக்கவுட்டுச்சு உன்னோட ஆடுங்க..
மேஞ்சு எல்லாம் போயிடிச்சி,, அப்ப என்ன சொன்னே?

                                     என் ஆட்டுக்கு வழி சொல்லுங்க..

                                     நான் எதுவும் செய்யமுடியாது.

                                     உன் நாய அடிச்சுக் கொல்றேன் பாரு.  மரியாதை இறங்கியது.

                                      தாராளமா செய்..

                                      சொன்னதுபோலவே செய்துவிட்டாள்.  பத்துவருடங்களாக
இருந்த நாய்.. திடீரென தலையில் ரத்தக் காயத்துடன் இறந்துகிடந்தது.

                                       கவலையாக இருந்தது.

                                       வீட்டுக் கொல்லைப்புறமே புதைத்தாயிற்று.

                                       நாலைந்து நாட்கள் கழித்து பரிமளத்தை ஆட்டோவில்
வைத்துக் கொண்டுபோனார்கள் மயங்கிய நிலையில்.

                                        என்ன ஆச்சுன்னு தெரியலே.. ஏதோ கையில கடிச்சிருக்கு..
அலட்சியமா வுட்டுட்டா அது வலிப்பு மாதிரி வந்துடுச்சி.. மயக்கமாயிட்டா..

                                        கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பது நாய்க்குப்
பொருந்தாது.

                                                      0000000000000


                                                   வேலை...


                                     உனக்கு இந்த வேலையும் கெடக்காது போலருக்கே

                                     எனக்குத் தெரியும்.

                                     அப்புறம் ஏண்டா இண்டர்வியுக்குப் போனே?

                                     இதுமாதிரி இண்டர்வியுகூட வந்து நாலு வருஷமாச்சுடா..


                                                000000000



                                  மூன்று மீன்கள் சந்தித்துக்கொண்டன ஒரு கூடைக்குள்

                                  ஒன்று ஆற்றுமீன்.

                                  இரண்டாவது குளத்துமீன்.

                                  மூன்றாவது கடல் மீன்.

                                  மூன்றும் உயிர்பிழைத்திருப்பது வாழ்வதற்கு. ஆனால்
அது யார் வாழ்வதற்கு என்பதுதான் சிக்கல்.

                                      மீன்களா? அல்லது அதை பிடித்தவனா?
அல்லது அதை தின்று செரிப்பவனா?

                                      மீன்கள் முடிவுசெய்யமுடியாது அவற்றின் வாழ்க்கையை,

                                      விற்பவனும் முடிவு செய்யமுடியாது,

                                      தின்று முடிப்பவன் தின்னாமல் இருந்தால் எதனையும்
யோசிக்கலாம்.

                                      நீளமான அகலமான ஆற்றில் வாழ்ந்ததுவே பெரிய
கொடுப்பினைதான். அந்த நினைவோடு என் வாழ்வை முடித்துக்கொள்கிறேன். ஆற்றுமீன்.

                                      நீ வாழும ஆறுகளைப்போல  எத்தனை ஆறுகள் வந்து
சேரும் கடல் அல்லவா நானிருநதது. என்னுடைய நினைவு பெரியது.
என்றது கடல் மீன்.

                                        கூடையை ஒருமுறை குளத்துநீரில் மூழ்கி எடுத்தான்
பிடிததவன். அந்தக் குறைந்த நீரைப் பயன்படுத்திக் குளத்தில் துள்ளிக்
குதித்த குளத்துமீன் சொன்னது.

                                        நமக்கான வாழ்க்கையை கடவுள் நமக்களித்திருக்கிறான். அதை யார் வாழமுடியும் நம்மைத்தவிர.

                                                0000000000000000000



                                                 உண்மையான தொண்டு
                                                 எதையும்றியாது
                                                 உண்மையான அக்கறை
                                                 எதையும் உளறாது
                                                 உண்மையான உழைப்பு
                                                 எதையும் எதிர்பாராது
                                                 உண்மையான அர்ப்பணிப்பு
                                                 எப்போதும் விலகாது,,

                                                 விலகல் என்பது விலக்கலின்
                                                 பயத்தில் உதிப்பதுதான்,

                                                                 0000                                              



                                

Wednesday, June 4, 2014

சூரியனின் வயது 91



                    என் தந்தையார் பெரியார். அண்ணா. கலைஞர் கருணாநிதி எனப் பற்றுக் கொண்டவர். என் சிறுவயதில் இவர்களைப் பற்றிச் சுவையாக கதையாக சொல்லி திராவிடப்பற்றை வளர்த்தவர்.. அபபுறம் என்னை எம்ஜிஆர் ரசிகனாக (இன்றுவரை) மாற்றி அவரின் ஒவ்வொரு படத்தையும் குறைந்த பட்சம் 5 முறைக்குக் குறையாமல் பார்க்க அழைத்துப்போனவர். இன்றைக்கும் எம்ஜிஆர் படங்கள் பாடல்கள் என்றால் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்க்கும் ஆர்வம் குறையாம்ல் இருக்கிறது. அதேசமயம் இன்றுவரை எந்தக் கட்சியின் உறுப்பினரும் இல்லையென்றாலும் கலைஞரின் இலக்கிய ஆற்றலின்மேல் உள்ள பற்று ஒருசிறிதும் குறையாமல் உள்ளது. 91 சகாப்தங்களை உருவாக்கிய ஆளுமை நினைக்கவே பிரமிப்பாக உள்ளது. அவரின் தமிழுக்குத் தலைவணங்கத்தான் வேண்டும். இன்றைக்கும் அவரின் வசனங்கள் எழுதிய பழைய திரைப்படங்களைப் பார்க்க அதில் விளையாடும் தமிழ் மீன்களை அள்ளிக் கொஞ்சவே மனது எண்ணுகிறது.


                                 சூரியனின் வயது 91



                        பெயரிலே திருவடக்கிய திருஆரூரின்
                        திருக்குவளை தன்னிலே இருபத்து நான்கினிலே
                        இனிய தமிழின் மூலவித்தாய் முகிழ்த்திட்ட முதல்தமிழே..

                        இயற்பெயராய் குருவின் பெயரைக்கொண்டவரே
                        இன்றைக்கு எல்லார்க்கும் குருவாய் நின்றவரே...

                        தமிழ்க்கடலில் கிடைப்பரிய பொன் அமிழ்தே
                        தமிழினத்தின் வாழ்விற்கு வாய்த்திட்ட கருணைநிதியே...

                        பதின்மூன்று வயதினிலே  சமுகத்தின் பழுதுநீக்க
                        படித்திடப் பள்ளியிலே உன் போராட்டம் பாடமாச்சு..

                        பயின்றிட்ட மாணவப் பருவமதில் மாணவநேசன்
                        என்னும் ஓர் இதழைத் தொடங்கிட்ட  பூந்தளிரே
                        மாணவ மன்றம் அமைத்து பாரெங்கும் பரந்திட்ட
                        குடிசைகளின் துயர்நீக்கத் துடித்திட்ட போராளியே,,

                         துண்டுதுண்டாய் ஒலித்த  உன் முரசொலிதான்
                         தொண்டுதொண்டு எனத் தேசமெங்கும் தமிழ்த்
                         தேசமெங்கும் அதிர்வூட்டி அறியாமை தனைவிரட்டி
                          நின்றிட்ட காட்சியெல்லாம் நீண்டுகிடக்கும் வரலாறாகும்..

                          என்மொழி தமிழ் என்னினம் தமிழினம் இதிலொன்றும்
                          மாற்றமில்லை எப்போதும் தமிழுக்கு ஏற்றமென்றும்
                          கொள்கை நெஞ்சிலேற்றி கொண்டாடிய வேளையில்
                          இந்தி இந்தியென  ஆடிய  ஆட்டத்தில் அதை
                          விரும்பாத உணவாய் திணித்திட்டவேளையில்
                          நாவினிக்க நற்றமிழ் சோறுண்ணும் வாயால் இந்தி
                          உண்ணேன் என்று அன்று நீ கண்ட சிறை
                         .அகிலத்தின் உச்சியில் அன்னைத் தமிழின் நெஞ்சில்
                          ஏற்றிவைத்த சுடர் அது.. துர்ய தமிழ் சுடரது,,,

                          அப்புறம்தான் இந்த அன்னைத்தமிழின் அணையாச்
                          சுடரை அருகிருந்து காப்பதற்கு ஏற்றவழி அரசியலென்று
                          உள்ளே வந்தாய் உள்ளேன் ஐயா என்றாய் போ
                          அண்ணன் உனக்குத் துணையென்று அனுப்பிவைத்தார்
                          பேரறிஞன் பெருந்தகையாளன் உலகமெங்கும் தன்
                          அறிவாலே உதித்திட்ட சூரியன் அண்ணாவென்னும்
                          அன்புப்பிடிக்குள் பிள்ளையானாய்.. தழுவிடத்
                          தம்பியானாய்... தமிழன் என்று சுவாசிக்குமிடமெல்லாம்
                          தலைவனாய்..

                           தமிழுக்குத் தொண்டாற்ற முதலானாய் தமிழன்னை
                           தமிழருக்கு முதல்வனாயிருந்திடு என்று வரமளித்தாள்
                           அப்புறமென்ன வெற்றிமேல் வெற்றிகண்டாய்..

                           ஆனாலும்.. இந்தத் தமிழினம் இன்பமுற் இரவுபகல்
                            துன்பமற்று சுகமாய் வாழ்ந்திட பட்டவைதான் எத்தனை
                            எத்தனை?

                            சதிகாரக் கூட்டங்கள்... புதைகுழிகள்...துரோகத்தின்
                            வீசல்கள்...காட்டாறுகள்.. கைப்பற்ற ஒன்றுமற்ற
                            நெருப்பு பொஙகிப் பரவும் காட்டாறுகள்..துவளவில்லை நீ
                            கற்பாறைகள் நிறைந்திட்ட பள்ளங்கள் மறைந்திட்ட
                            பாதாள வழிகள்... சிந்திய ரத்தத்துளிகள்.. செய்திட்ட்
                            தியாகச் செயல்கள்...ஒன்றையும் விடவில்லை நீ..
                            தமிழின் மேன்மைக்கு தளராது,, தண்ணீர் அருந்தாது
                            தவித்த தாகமொடு பட்ட துன்பங்கள் பலகோடி வரலாறு
                            ஒவ்வொன்றும் உன் பெயர் சொல்லும்,,

                             எதனைப் போட்டாலும் எத்தனை மூடி மறைத்தாலும்
                             எரித்து மேலெழும்பும் நெருப்பென பிரகாசம் காட்டி
                             புயலெனப் பாயுமிடத்துப் புயலெனப் பாய்ந்து
                             தென்றலாய் வீசுமிடத்துத் தென்றலாய் வீசி
                             மழையாய் பொழியுமிடத்து மழையாய் பொழிந்து
                             மாண்புறச் செய்தாய் மங்காத தமிழை உலகெஙகும்
                             செமமொழி எம்மொழி என்றைக்கோ என்று முரசொலித்து
                             நின்ற களத்தில் முதல்வீரன் நீதான்.. வெற்றிக்கனி பறித்திட்டு
                            தானுண்ணாத் தமிழினத்தாருக்குப் பங்கிட்டுப் பார்த்து
                             பரவசப்பட்டவனும் நீதான்..

                             உன் பணிகள் பற்றி நான் பாட என்னாயுள்
                             போதா எந்தப்பணியென்று தனித்து நான் சொல்வேன்
                             எல்லாப் பணியெடுத்தும் நீ தொடுத்த அம்பு மல்ர்களை
                             எப்படி சேர்ப்பேன்?  மலைப்பாய் இருக்கிறது மாமலையாய்
                             உயர்ந்து நிற்கும் உன் மகத்துவம் பாடவெனக்கு..

                             பேசும்போது ஒரு தமிழ் கவிபாடும்போது இன்னொருதமிழ்
                             வசனமாய் வார்க்கும்போது வாசமிகு தமிழ் உரைநடையில்
                             உள்ளத்தைக் கொள்ளைக்கொள்ளும் இன்னொருதமிழ்
                             நாடகமேடையில் நவரசம் துள்ளும் தமிழ் நற்றமிழ்
                             இலக்கியத்தை எழுதுகையில் இளமைத்தமிழ் இலக்கணத்தைப்
                             பிழிந்தெடுத்து ஊட்டுகையில் உவகைத்தமிழ் ஊருக்கெல்லாம்
                             நீதி தவறாமல் உழைத்த நீ உனக்குள்ளே நெஞ்சுக்கு நீதி
                             உரைக்கும்போது அறத்தமிழ் அற்புதத்தமிழ் மறத்தமிழ்
                             மாண்புறும் மானிடர்க்கு மகத்தான தமிழ் என்று வகை
                             வகையாய் தமிழுக்குச் சுவை வகைகாட்டியவன் நீ..

                             உன்தமிழை உலகம் பாடியது தமிழின் உலகம் நீயென்று
                             உண்ர்ந்து பாடியது.. இன்னும் உழைத்திடவேண்டுமென்று
                             நீயெண்ணும் நிலையைக் கடவுள்தான் பாடவேண்டும்..

                             அகல்விளக்காய் எரியத்தொடங்கி இன்றைக்கு
                             தமிழின் தேசமெங்கும் சூரியனாய் தகிக்கின்றாய்
                             தரணியெங்கும் தமிழின் மேன்மைக்குத் தகுதியாய்
                             மணிகள் கோர்க்கிறாய்  சகாப்தங்கள் 91 ஆனபோதும்...

                             உன் தமிழுக்கு வணக்கம்.
                             உதயசூரியனே தமிழின்  91 வது பருவமே
                             வணக்கம்.

                               ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

                       
                     

                        

Wednesday, May 14, 2014

மனம் திறந்து,,,



அன்புள்ள.


                    ஹரணி வணக்கமுடன்.

                   படைப்புலகில் இயங்கத் தொடங்கிய காலந்தொட்டு எந்த ஒன்றையும் தள்ளிப் போட்டதில்லை. எதைத் தொடங்கினாலும் அதனைக் குறித்த காலத்தில் முடித்தே பழக்கம். இந்நிலையில் கடந்த மூன்றாண்டுகளாக இது சாத்தியமற்றிருக்கிறது. ஒரு போராட்டம் போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

                         இதை எழுதுவதற்குக் காரணம் நிறைய பதிவிடவேண்டும் தரமாகப் பதிவிடவேண்டும் புதுமையாகப் பதிவிடவேண்டும் என்று முடிவு செய்து அதற்கெனக் குறிப்புக்களை எழுதி வைத்தும் தொடர்ந்து வெளியிட
முடியாமல் போகிறது.

                         கடந்த ஒரு மாதமாக கணிப்பொறியின் பழுது,

                         அதற்கு நேரம் ஒதுக்கமுடியாமை.

                        மேலும் தற்போது மே. சூன் ஆகிய இருமாதங்கள் கோடை விடுமுறை என்றாலும் அதற்குள் நிரம்பி வழியும் பணிகளின் இறுக்கம்.

                         ஐந்து புத்தங்களை எழுதித்தர கட்டாயம், அலுவலகச் சூழல்.

                         சில முக்கியமான கல்விசார் கூட்டங்கள்.

                         இந்த இரு மாதங்களில்தான் எல்லா இதழ்களுக்கும் கட்டுரை. கவிதை. சிறுகதைகளை நிரப்பும் தேவையும் உள்ளது.

                          இருப்பினும் இதையும் மீறி வலைப்பக்கத்தில் எழுதவேண்டும என்பது நெருப்பாக இருக்கிறது.

                           இதன் மூலம் நான் வேண்டுவது, எப்படியும் விட்டுவிட்டாவது பதிவுகளை இடுவது என்பது உறுதியானது. எனவே என் வலைப்பக்கம் வந்து கருத்துரை வழங்கும் சகோதர சகோதரிகள் எப்போதும் போல இதனைப் பொறுத்து வந்து பார்வையிடவேண்டும் என்பதுதான், படைப்பின் மகிழ்வையும் அதற்கிணையாக உங்களின் கருத்துரையும் என்னை மேலும் தொடர்ந்து இயங்க வைக்கும்.

                               நன்றிகள் பல.

                              அன்புடன் ஹரணி.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


                  இம்மாத இரு மகிழ்ச்சியான செய்திகள்.


                   1. என் நத்தையோட்டுத் தண்ணீர் கட்டுரைத் தொகுப்பிற்கு முதல்பரிசு
                       சேலம் அருணாச்சலம் அறக்கட்டளை வழங்குகிறது. பரிசு
                       ரூ. 10000 - விழா இம்மாதம் மூன்றாம் வாரத்தில்.

                   2, என்னுடைய சிறுகதை புத்தகம்  செல்லாத நோட்டு - கரூர் சிகரம்
                       இதழின் சார்பில் முதல்பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 11.5.2014
                       அன்று சான்றிதழ். கேடயம். பரிசுத்தொகை ரூ.3000 வழங்கப்பட்டது,


000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000



                                        ஒரு சிறுகவிதை


                                        காலத்தின் கட்டாயத்தில்
                                        தானுதிர்க்கும் சருகுகளிடம்
                                        வழியனுப்பலின் அழுகையை
                                        மரம் மௌனமாய் சொல்ல
                                        அதை சங்கீதமாக்குகிறது
                                        காற்று
                                        அடுத்தவரின் துயரில்
                                        ஆறுதலைச் சங்கீதமாக்கும்
                                        காற்று அருவமற்றிருக்கிறது
                                        என்பதை உலகிற்குச் சொல்ல
                                        சருகுகள் அதை
                                        ஆமோதிக்கின்றன
                                   
                                         00000000000000

                                         சந்திக்கலாம்.                ஹரணி.                                      
                                     









                    

Saturday, April 5, 2014

யார் - ஒன்று




                            முதலில் அவன் ராணுவத்தில்தான் பணியாற்றிக்கொண்டிருந்தான். படிப்பறிவு இல்லாதவன். உடல் வலிமையின் அடிப்படையில் அவனுக்கு அந்தப் பணி கிடைத்திருந்தது.

                           பணியை சிறப்பாக முடித்து குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்று தன்னுடைய சொந்தக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தான்.

                          அவனுடைய கிராமம் பண்பாடு மிகுந்த கிராமம். மக்கள் ஒருவருக்கொருவர் அன்புகொண்டு வாழ்ந்திருந்த கிராமம்.

                          அந்தக் கிராமத்தைச் சுற்றி காடு இருந்தது,

                         அந்தக் காட்டில் சில விலங்குகள் இருந்தன.

                         அவற்றால் சில தொந்திரவுகளும் இருந்தன.

                         எனவே காட்டு விலங்குகளிடமிருந்து மக்களையும் வீட்டு விலங்குகளையும் காக்கின்ற பொறுப்பில் அவன் இருந்தான். எந்தப் பிரச்சினை என்றாலும் ஓடிப்போய் உதவுவான்.

                         அவன் கையில் எந்த ஆயுதங்களும் இல்லாமல் சுற்றித் திரிவான்.  அவனுக்கு விலங்குகள் குறித்த எந்தப் பயமும் இல்லை.

                           மனத்துணிவும் உடல் வலிமையையும் அவன் குறையாது பார்த்துக்கொண்டான்.

                           அடிக்கடி ஊர்க்கூட்டம் நடக்கும். எல்லோரும் கலந்துகொள்வார்கள். அவனும் கலந்துகொள்வான்.

                            அப்படியொரு சமயம் நடந்த கூட்டத்தில் முக்கியமான பிரச்சினை குறித்து தீவிரமாக எல்லோரும் கலந்து பேசிக்கொண்டிருக்க இவன் எழுந்து தன்னுடைய கருத்தைச் சொன்னான்.

                            அப்போது இவனைத் தடுத்து

                            யேய்.. என்ன இது நீ கருத்து சொல்றே? நீ படிக்காதவன். உனக்குக் கருத்துச் சொல்ல எந்த உரிமையும் இல்லை. தவிரவும் உன்னுடைய கருத்தையும் யாரும் ஏற்பதாக இல்லை, நீ உடல்வலிமை மிக்கவன். எனவே அந்தளவில் மட்டும் உன் பணிகளை இந்தக் கிராமத்திற்குச் செய்தால் போதும் என்று உட்கார வைத்துவிட்டார்கள்.

                          மனது வருத்தமாகிப்போனது இவனுக்கு.

                          படிக்காமல் போய்விட்டோமோ என்கிற வருத்தம் மேலோங்கியது. எனவே முடிவுசெய்து அந்தக் கிராமத்தில் சிறுவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஓர் ஆசிரியரிடத்துப்போய்  அவரை வணங்கி.

                         ஐயா.. என்னை எல்லாரும் படிக்காதவன்னு சொல்றாங்க. உன் கருத்தைக் கேட்கமுடியாதுங்கறாங்க. எனவே நீங்க எனக்கு படிப்புச் சொல்லிக் கொடுங்க.. நான் படிக்கிறேன் என்றான்.

                        ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.

                         எருமை மாட்டுப் பயலே... படிக்கப் போறியா? இது சின்னப் பசங்க படிக்கிற இடம்.. உன்னைமாதிரி தடிமாடடு ஆளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்க முடியாது. இந்த வயசுல உனக்குப் படிப்பும் வராது.. போ..மாடு மேய்.. மக்களைக் காப்பாத்து.. வந்துட்டான் படிக்க.. என்றபடிசிரிக்க எல்லோரும் சிரித்தடங்கினார்கள்.

                              மனம் வருத்தப்பட திரும்பி வந்தான்.

                              சில நாட்கள் கழிந்தபின்னர் ஒருநாள் அந்த ஆசிரியர் பணியை முடித்துவிட்டு காட்டுவழியே தன் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த அவனைக் கவனித்தார்.

                                தெரிந்தவன்தான் என்று எண்ணியபடி நட்ந்தர்ர்.

                                சட்டென்று அவரின் எதிரே வழிமறித்து நின்றான். அவன் கையில் கத்தி இருந்தது.

                                 நடுங்கிவிட்டார் ஆசிரியர்.

                                 பாடம் சொல்லிக் கொடுக்கமுடியாது என்றதும் நம்மைக் கொல்ல வந்திருக்கிறான் போலும் என்றெண்ணிய  ஆசிரியரின் உடல் நடுங்கியது பயத்தால்.

                                  என்னைக் கொன்னுடாதப்பா என்றார் பயத்தில்.

                                   அவன் சொன்னான்.

                                  எனக்குப் பாட்ம் சொல்லிக் கொடுக்கமுடியாதுன்னு சொல்லீட்டிங்க... எனக்கும் படிக்க ஆசைஇருந்தும் படிக்கமுடியல,, யாரும் என்னோட கருத்தை மதிக்கறதா இல்ல.. இனி நான பேசி என்ன பலன்? அதனாலதான் ஆசிரியர் உங்க முன்னாடி இந்தக் கத்தியால என்னோட நர்க்கை அறுத்துக்கப் போறேன் என்றான்.

                                   ஆசிரியர் அதிர்ந்துபோனார்.. இரக்கம் வந்தது. அவனின்
படிப்பு ஆர்வம் புரிந்தது, சரி.. வேண்டாம் இந்த விபரீதச் செயல். உனக்குப் பாடம சொல்லிக் கொடுக்கறேன் என்றார்.

                                    மகிழ்ச்சியானான்.

                                    அதற்குப் பின் அவன் அந்த ஆசிரியரிடத்து ஒன்பது ஆண்டுகள் தீவிரமாகக் கல்வி கற்றான்.

                                    சிறந்த அறிவாளியும் ஆனான்.

                                    அவன்தான்

                                     நன்னுர்ல் எனும் இலகக்ண நுர்லுக்கும் திருக்குறளுக்கும் மிகச் சிறந்த  உரை எழுதிய

                                         இராமானுசக் கவிராயர் அவர்கள்.

                                       அடுத்த யாரில் சந்திக்கலாம்.

                                                                                                                தொடரும்.
                               

Wednesday, April 2, 2014

யார்?




                   யார் எனும் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதத் திட்டமிட்டிருக்கிறேன்.

                   வெள்ளிக்கிழமைவரை பொறுத்திடுங்கள்.

                    இலக்கியம் சார்ந்த சுவையான பதிவுகள் அவை.

                    ஒரு முன்னோட்டம்


                                 அந்த அட்ர்ந்த காட்டின் வழியாக அந்த ஆசிரியர் வீடு
திரும்பிக்கொண்டிருந்தார்.

                                 அப்போதுதான் அவனைப் பார்த்தார்.

                                 நன்கு  தெரிந்தவன்தான்.

                                அவரை வழிமறித்து நின்று கையில் கத்தியைப் பிடித்திருந்தான்.

                                ஆசிரியருக்கு முகம் வேர்த்தது. குத்திக் கொன்றுவிடுவானோ
என்று.

                                ஆனால் நடந்தது வேறு.

                                 வெள்ளிக்கிழமை சந்திக்கலாம் (வேலைப்பளு காரணமாக,,,
பொறுக்கவும்)


          

Sunday, March 30, 2014

சில சந்திப்புக்கள்.




                        சிலசமயம் சில சந்திப்புக்கள் எதிர்பாராமல் நிகழ்ந்துவிடுவது
உண்டு.

                          சில சந்திப்புக்கள்.

                         
                          காலை  6.30 மணியளவில்  மயிலாடுதுறை ரயில்நிலையத்தில்
காத்திருந்தபோது சக்கர நாற்காலியில் ஒருவரை அழைத்துவந்தார்கள். ஒருகணம் தடுமாறி அட மனுஷ்யப்புத்திரன் என்று உடனே எழுந்து அவருக்கு வணக்கம் செலுத்து வணக்கம் சார்... நான் ஹரணி என்றவுடன் முகம் மலர்ந்து நல்லா இருக்கீங்களா? என்றார். எங்க சார் இங்க என்றேன். ஒரு நிகழ்வு என்றார். அத்துடன் பேச்சு முடிந்து அழைத்துக்கொண்டுபோனார்கள். என் மனதிற்குத் தோணியது பார்த்து அழைச்சுட்டுப் போங்கப்பா.. இந்த இலக்கிய உலகின்  முக்கியமான ஆளுமை என்று சொல்ல. அழைத்துக் கொண்டு வநத்வர்களுக்குத் தெரியாதா என்ன? இருந்தாலும் நமக்குப் பிடித்துப்போனவர்களைப் பார்க்கும்போது தோணுவதை என்ன செய்யமுடியும்?

                      உயிர்மை இதழும் மனுஷ்யப்புத்திரன்  கவிதைகளும் எப்போது நினைத்தாலும் மனத்தை நிறைவாய் மழையாய் நினைத்து ஈரப்படுத்து
கின்றன.


                         கடந்த வியாழக்கிழமை இரவு இதே மயிலாடுதுறை சந்திப்பில் வழக்கமான ரயிலைத் தவறவிட்டுக் காத்திருந்தபோது நீண்டநாள் இலககிய நண்பர் திரு இரா.இளங்கோவை சந்தித்துப் பேசிக்கொண்டு பயணித்தோம். இல்க்கியப் புதுப்பித்தல் அது. இளங்கோ அற்புதமான எழுத்தாளன். எழுதுங்கள் என்றேன்.

                           ஒரு நிகழ்விற்காகத் திருச்சி சென்றிருந்தபோது மிகநெருங்கிய நண்பர்கள் இருவர். ஒருவர்  முனைவர் அலிபாவா. இன்றும் மாறாத அதே அன்புடன் அதே இளமையுடன் இருபதாண்டுகளுக்கு முன்பு பார்த்த முதல் சந்திப்புபோலவே. கூடவே அவருடன் அவருடைய நண்பர் முஜ்பூர் ரஹ்மர்ன். என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி உயிர்க்குடிலை நினைவுப்படுத்தி மறக்க முடியாதது என்றார்.

               
                         இந்த சந்திப்பில் என்ன சுவாரஸ்யம் என்று கேட்கலாம்.

                         ஆனாலும் ஏதோ ஒரு  மனநிறைவு ஏறப்பட்டது சந்தித்த வேளையில். சிந்திக்கவேயில்லை. பகிர்ந்துவிட்டேன்.


                       

                     

Friday, March 28, 2014

தி.க.சி. மூன்றெழுத்து இமையம்




               திகசி....

               இந்தப் பெயரை அறியாதவர் இலக்கிய உலகில் பிறக்காதவர்.

               எழுத்துலகின் இமையம்.

               உயர்ந்த எழுத்து மட்டுமல்ல உயர்ந்த மனமும் கொண்ட படைப்பாளி.

               நீண்ட ஆயுள் கொண்ட எழுத்து.

               நிறைய படைப்பாளிகள் தமிழில் உண்டு. ஓரிரு எழுத்துக்கள்
எழுதி பிரசுரமான படைப்பாளியையும் மதிக்கும் மனம் நானறிந்தவரை
இருவருக்கு மட்டுமே உண்டு.

                    முதல் ஆளுமை   வல்லிக்கண்ணன்
                    இரண்டாவது ஆளுமை திகசி

                 முன்னவர் முன்பும் பின்னவர் பின்புமாக நம்மிடமிருந்து
விடைபெற்றுக்கொண்டனர்.

                 கண்களில் சோகம் எரிமலையர்ய் வெடித்து நிற்கிறது.

                 இதுவரை நான் முகம் பார்த்ததில்லை நேரில் ஆனால் பலமுறை
இதழகளில் பார்த்ததுண்டு.

                   என் படைப்புக்களை அனுப்பினேன்.

                   இரண்டு அஞ்சல் அட்டைகளில் எனக்குக் கடிதம் எழுதிய தகப்பன்
அவர். இப்படியெல்லாம் இளைய படைப்பாளிகளைக் கட்டிக்கொள்ளும்
கடவுள்தன்மை. தகப்பன் திகசியைப் போல வல்லிக்கண்ணன் போல இனி
வருமா?

                  எப்படி வாய்த்தார்கள் இவர்கள் இத்தகைய எழுத்துலகிற்கு.

                  பட்டினத்தார் செர்ன்னது போல எப்படி எரிதழல் மூட்டமுடியும்?

                  அழுதுகொண்டிருக்கிறேன் அந்த மாமனிதனுக்காக மனித நேயம்
கொண்ட தகப்பனுக்காக.

                      அவரின் மிகமிகமிக உச்சமான படைப்பு. அற்புதப் படைப்பு.
இன்றைக்கும் அதிர வைக்கிற படைப்பு. ஒன்றே ஒன்றுதான்

                                                அது.
                                                அது.



                                        வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி....


                                       இதயக்கமலத்தால் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

Tuesday, March 18, 2014

பிடித்தது



                    இன்று ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் பள்ளியில் பணியாற்றுகிறார். அவர் எழுதிய பல நுர்ல்களை என்னிடத்தில் அன்பளிப்பாகத் தந்தார். ரயிலில் பயணிக்கையில் படித்தேன். சில பிடித்திருந்தன. உங்களின் பகிர்விற்கும்.

         அவரின் இயற்பெயர் கோ, பெரியசாமி
         புனைப்பெயர்  மருதம் கோமகன்

        அவர் புத்தகங்களின் தலைப்பே கவிதைகள் போல.

                                மனவயல் (வரப்புகளுக்கு உள்ளே மட்டும் அடங்கிவிடுவதில்லை)

                                இதழ்த் துர்ரிகை (கவிதைகள்)

                                இத்தொகுப்பில் சில பிடித்த கவிதைகள்

                                      காதல் பயிரை
                                     மேய்ந்து அழிக்கிறது
                                      சாதி எருமை

                                     உனது
                                     விழிமழையில்
                                     கரைந்துபோயின
                                     என்
                                     மன அழுக்குகள்...

                                   மனச்சிறகுகள் (கவிதைகள்)

                                   இத்தொகுப்பில் பிடித்த சில கவிதைகள்

                                   நான் சொல்வதெல்லாம் உண்மை
                                   உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை
                                   கேட்டுக் கேட்டுப் புழுங்கியது கீதை,,

                                   மாடுகளை மேய்த்த காலம்
                                   காலமாகிப்போனது இன்று
                                   நாய்கள் மேய்க்கும் காலம்

                                   பிறந்த மேனியாய்
                                   தெருவிற்கு வந்தபிறகு
                                    எதற்கு
                                    மாடுகளுக்குக் கொம்புகள்?

                                   நிறைந்தது உண்டியல்
                                   பசித்தது வயிறு
                                   கம்பிகளுக்குள் கடவுள்

                       

                                   
                    

Saturday, March 15, 2014

கவிதை




                                                         எப்படியும் வாழத்தானே வேண்டும்....


                          விருப்பமில்லாமல்தான்
                          கலைத்தாளாம்
                          நான்குமாதக் கருவைக் கலைப்பது
                          கடினமாகத்தானிருந்தது
                          ஒருசேர உடலுக்கும்
                          மனத்திற்கும்....

                           அம்மாவைப் பார்த்துவிட்டு
                           வருகிறேன் என்று விட்டுவிட்டு
                           வந்தவன்தான்...

                           ஒவ்வொரு பாக்கிக்காய்
                           ஒவ்வொருத்தரும் வாசலில் கூவ
                            பொறுமையாய் பதில் சொல்லிக்
                           கொண்டிருந்தேன் அம்மாவைப்
                            பார்க்கப் போயிருப்பவன் வந்துவிடுவான்
                           பொறுங்கள் என்று...

                            பொறுத்தவர்கள் திரும்பிப்போனார்கள்
                            பொறுக்காதவர்கள் கத்திக்கொண்டிருந்தார்கள்..

                            எனக்குக்கூட நாலுமாசம் வாடகை பாக்கித்தான்
                            என்ன பண்ணறது..தம்பி ஊருக்குப் போயிருக்கு
                             உங்களுக்கு வாவு வழி பண்ணத்தான்
                            வயித்துல சுமந்துகிட்டிருக்கிறவகிட்ட
                            கத்தாதீங்கப்பா...

                            உரிமையாகப் பேசிவைத்தாள் வீட்டின்
                            உரிமையாளினி.. ஆறுதலாக இருந்தது.

                            அடுத்தநிமிடம்  கைப்பேசியில் வந்தது
                            அம்மாவீட்டுக்குப் போனவன் அப்படியே
                           போய்விட்டான் நெருப்பு மூட்டியென்று..

                             எல்லாமும் கலைந்துவிட்டது
                             மிச்சமாய் இருக்கிற பிள்ளைகள் போதும்
                             இன்னும் இம்சைப்பட வயிற்றிலிருப்பதை
                             வரவழைக்கவேண்டாம்..

                             கலைத்துவைத்த பெண் மருத்துவர்
                             உடம்ப பாத்துக்கம்மா என்றார் அன்பாய்
                             உடம்பைப் பார்த்துக்கொள்வது எளிதுதான்
                             ஆனால் கலைந்துவிட்ட மனத்தை...

                                                     0000000000000

Saturday, March 8, 2014




                                                நீயின்றி எதுவுமில்லை பெண்ணே........



                                 ஆயிரம் இன்னல்கள் உனக்கிங்கு
                                 இழைத்தாலும்
                                 நீயின்றி எதுவுமில்லை பெண்ணே....

                                  உயர்திணை என்று உலவுகின்ற
                                  எவ்வுயிரும் உனது கருவறையின்
                                 விலாசத்தில்தானே தொடங்குகின்றன..

                                  பெண்ணற்ற எதுவும்    களரென்று
                                  உரைத்திட்ட பாவரிகள் என்றும் அழிவறியா
                                  அமிழ்தம்தானே..

                                  கல்லிற்கு உயிர்  வழங்கவும்
                                  மண்ணிற்கு மணமூட்டவும்..
                                  வறண்ட   மனமெதுவாயினும்
                                  ஈரம் இசைக்கவும் வாழ்வின் ஒவ்வொரு
                                  அணுவிலும் இயக்கமும் நீயின்றி எதுவுமில்லை
                                  பெண்ணே...

                                   தாயாக நினைக்கிறேன்
                                   தமக்கை உறவின் விரிவாக நினைக்கிறேன்
                                   தளர்வுறா வாழ்வின் எல்லைவரை
                                   என்னுயிரை காத்துநிற்கும் மனம் இனிக்கும்
                                   மனைவியாய் நினைக்கிறேன்     எங்கேனும் அமைந்துவிட்டால் நல்ல                                                                                                                                                                                               தோழியாயும்
                                                                                     தக்க வைக்கிறேன்
                                   எதுவாயினும் முழுமையென்பது
                                   பெண்மை ததும்புவதால்தானே

                                   ஒவ்வொரு மனித வாழ்விலும்
                                    பன்முகமாய் படர்ந்திருக்கும்
                                    உன்னை
                                    மனம் நிறைய மணத்துடன்
                                    மாறாத அன்புடன்
                                    வணங்குகிறேன் பெண்ணே.... வாழியவே
                                    என்றைக்கும் நிலைத்திருக்கும்
                                    இயற்கையின் வடிவாய்...

                                   00000000000



                                    வீர வணக்கங்கள்...


                                    ஔவையார்
                                    வெள்ளிவீதியார்
                                    ஜீஜீபாய்...
                                    ஜான்சிராணி
                                    அன்னை தெரசா
                                    அன்னை இந்திரா பிரியதர்ஷினி
                                    அன்னை கஸ்துர்ரிபாய்
                                    இப்படியாக எல்லோருக்கும்..


                                    00000000000000



                                     உலகின் வடிவம் பெண்
                                     உயிரின் வடிவம் பெண்
                                     இயற்கையின் வடிவம் பெண்
                                     இயங்கும் வடிவம் பெண்
                                     பெருமைமிகு பெண்
                                     போற்றுவோம்..


                                     00000000000
                                     

Thursday, March 6, 2014


வணக்கம்


                     இவ்வாண்டு இப்போதுதான் வர முடிந்தது.

                     கணிப்பொறியை ஒரு நிமிடம் கூடப் பார்க்கமுடியாத சூழல்.

                     இன்னும் பணிகள் விடவில்லை.

                     இருப்பினும் வந்திருககிறேன்.

                     எப்போதும் போலவே உங்களின் அன்பு வேண்டி


                    0000000000000000000000000000000


                    இந்த வாரம் விகடனில் வந்த கவிதையிலிருந்து தொடங்குகிறேன்.



                    சொற்பறவையின் முதலொலி 


                    எங்கேனும்
                    முகமறியாமல் கேட்கும்
                    பறவையின் மெல்லொலியில்
                    நம் மிருவருக்கிடையிலான
                    காதலின்
                    முதல் சொல்லை
                     புதுப்பித துக்கொள் கிறேன்
                     கடைசிப பேருந்தின் ஒலி கரைந்துவிட்ட
                    இருளின் அமைதியில் காத்திருக்கிறேன்
                    உன் கைபபேசியின் கூடுடைத்து வரும்
                    சொற்பறவையின் முதலொலியைக்
                    கேட்க.

                     ( நன்றி : ஆனந்த விகடன்  12.3.2014)


------------------------------------------------------------------------------------------------


                       என்

                       நத்தையோட்டுத் தண்ணீர்

                       நூலுக்கு
                       சேலம் அருணாசலம்
                       அறக்கட்டளைச் சார்பில்
                       சிறந்த நூலுக்கான
                       முதல் பரிசு
                       கிடைத்துள்ளது .


                        00000000000


                     

Sunday, November 17, 2013

அலைகிறது மனம்.....



                   அலைகிறது மனம்.....


                                   எப்பவாவதுதான் கட்டுப்படுகிறது
                                  அதிலும்
                                  ஆயிரம் நிபந்தனைகளைக்
                                  கையொப்பமிட்டு வாங்கிக்
                                  கொள்கிறது
                                  யாருமறியாமல்
                                  எப்பவாவது என்பதுகூட
                                  அப்படிப் பழகிக்கொள்ள
                                  வைத்திருக்கிறது
                                  மனம்...

  /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


                      அலைகிற மனத்தினுர்டாக,,,,



                                  ஒவ்வொரு
                                   மழைக்காலத்திலும்
                                   அப்பா பழைய எங்கள் ஓட்டுவீட்டில்
                                   ஒழுகுகிற இடங்கள்தோறும்
                                   பாத்திரம் நகர்த்தி
                                   விடியவிடிய துர்ங்காமலும்
                                  மழைவிட்டதும்
                                   துர்ங்க எண்ணும்போது
                                  விடிந்துவிடுவதுமான
                                   தருணங்கள்
                                  அப்பா இறந்தபின் கிடைத்த
                                  சம்பள நிலுவையில் அம்மா
                                  ஓட்டுவீட்டை மாடிவீடாக்கி
                                  மழையைத் தடுத்தபோதிலும்
                                  மனதைத் தடுக்கமுடியவில்லை
                                  மாடிவீட்டைப் பார்க்கும்போதெல்லாம்...

                    000000000000000000

                                      இராஜராஜசோழன்
                                      சதயவிழாக் கொண்டாட்டத்தைவிட
                                      விழாவிற்காக
                                      அவனைத் தங்கள் ஜாதியென்று
                                      சுவரொட்டிகள் ஒட்டி
                                      கொண்டாடும் அட்டகாசம்
                                      அதைவிட பெரிய விழாவாக....


                0000000000000000000000000



                                        கொட்டித் தீர்க்கிற மழையில்
                                        எங்கும் நகரவிடாமல்
                                        இருக்கிற தருணங்களில்
                                        மனதில் கொட்டித் தீர்க்கிறது
                                        பெருமழையாகத் தடுக்கமுடியாமல்
                                        சாலையில் ஓடும்
                                        108 ன் ஒலி காதுக்குள்
                                        ஓடும்போது....


   00000000000000000000000000000000000000000000000000000000


                                               செய்திதான்

                                               தேளாகக் கொட்டுகிறது
                                               நெடியேறி நிற்கிறது

                                               மழையிருட்டில்
                                               அறுந்துவிழுந்த மின்சாரக்
                                               கம்பிமிதித்து அலறிய
                                               30 வயது இளையபிள்ளையையும்
                                               பிள்ளையலறல் கேட்டு
                                               ஓடி வந்த 50 வயது,,,,,
                                               விழுந்த மகனைத் துர்க்கிய
                                               வேளையில் அவரும் துக்கமானதை..
                                               இருபிணங்களும்
                                               எடுததுச் செல்லப்பட்டுவிட்டன
                                               என்கிற செய்திதான்,,,

                                                கண்ணெதிரில் வீட்டருகில்
                                                கணவரும் கண்வளர்ந்த பிள்ளையும்
                                                கரைவார்கள் காலக்கணக்கில்
                                                என்றெதிர்பாராத அந்த தங்கைக்கு
                                                யர்ர் அமைதியொளி ஏற்றுவர்...

                                                மாட்சிக்குரியோரே
                                                ஆட்சிக்குரியோரே
                                                மழைவராப் பகலில்
                                                அறுந்துவிழா பழுதுநீக்கிட
                                                ஆவன செய்வீர் அல்லலுயிர்
                                                காப்பீர்...கைகூப்பி வேண்டுகிறோம்
                                                வேறென்ன செய்திடவியலும்?

 0000000000000000000000000000000000000000000000000000000000

                                                Commonwealth
                        Human Health
                                                           ஆகட்டும்,,,


000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000