Saturday, May 11, 2013

தொட்டிமீன்களின் நன்றி...



   அன்புள்ள...

                    உறரணி வணக்கமுடன்.

                    தொட்டிமீன்கள் தொடர் எழுதுவதற்கு முன்பு சற்று யோசித்தேன். இதுபோன்ற தொடர்களை வாசிக்கிற பொறுமை இருக்குமா என்று. இருப்பினும் இதுபோன்ற தொடர்களை எழுதுவது என்கிற உறுதி மட்டும் வந்திருக்கிறது.

                        மொத்தம் 10 தொடர்களைத் திட்டமிட்டிருக்கிறேன்.

                        அதற்கு முன்பாக முதல்  தொடரான தொட்டி மீன்களை வாசித்துக் கருத்துரைத்த அன்புள்ளங்கள்.

                          1. திருமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
                          2. திருமிகு வெங்கட் நாகராஜன் அவர்கள்
                          3. திருமிகு துரை செல்வராஜ். துபாய். அவர்கள்
                          4. சகோதரி ராஜராஜேஸ்வரி அவர்கள்
                          5.சகோதரி கீத மஞ்சரி அவர்கள்
                          6. திருமிகு கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
                          7. திருமிகு மோகன்ஜி அவர்கள்
                          8. சகோதரி தமிழ்ச்செல்வி அவர்கள்
                          9. திருமிகு செல்லப்பா யாக்யசாமி (பெயர் சரியா ஐயா)

             ஆகிய உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

             உங்கள் ஒவ்வொருவரின் கருத்தும் என்னை சிந்தனைக்குள்ளாக்கியது. அடுத்தடுத்த தொடர்கள் எழுதும்போது இன்னும் பல சோதனை முயற்சிகளை செய்யும் துணிவைத் தந்திருக்கிறது.

                  என்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களை வாசிக்கிறேன். அவர்களின் வாழ்விலிருந்து என்னை வெகுவாகப் பாதிப்பதை தீர்வு காணப்படாததைக் காண்கிறேன். அதற்கு என்து படைப்புலகில் ஒரு முடிப்பைத் தருகிறேன். மற்றதை சமுகம் தீர்மானிக்கட்டும்.

                    நனறிகள் பல மீண்டும். 

Friday, May 3, 2013

தொட்டி மீன்கள்.....குறுந்தொடர்.....6


                      தொட்டி மீன்கள்....குறுந்தொடர்....6



                 லோகநாதன் அழுது அவள் பார்த்ததில்லை. வழககம்போல வாசலைத் திறந்தவள் படியினில் ஓர் உருவம் மயங்கிக்கிடப்பதைக் கண்டு பயந்துபோய் அருகே போகப் பயந்து நின்றாள். நெடுநேரம் அவன் எழும்பவேயில்லை என்றதும்தான் அவனருகே போய் குனிந்தாள். குப்பென்று மூக்கில் வந்து அடித்தது குடிவாடை. சட்டென்று நிமிர்ந்துகொண்டாள். அப்போதுதான் கவனித்தாள் கூடவே ரத்த வாடையையும். படியில் மோதி விழுந்திருந்ததால் அவன் நெற்றியிலும் அடிபட்டு ரத்தக்கசிவாகியிருந்தது. உடனே அப்படியே அவனை உள்ளே இழுத்துப்போய் கூடத்தில் கிடத்தினாள்.

                     அவன் மயக்கம் தெளிந்தபோது அவளுக்கு நன்றி சொன்னான்.

                     அன்று முழுவதும் அங்கேயே தங்கினான்.

                     இப்படித்தான் ஆரம்பித்த பழக்கம். நெருங்கிய பழக்கமானது. எவனையோ நம்பி ஏமாந்து. கணவன் என்கிற பெயரில் அவன் இவளை பல பேருக்கு பலியிட்டது. கடைசியில் ஒரு பெண் குழந்தையோடு ஊரைவிட்டு ஒடிவந்தது வரை எல்லாவற்றையும் இவனிடத்தில் சொல்லி அழுதாள். இவனும் தன்னிலை விளக்கம் தர. காயம்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் உறவு ஆனார்கள்.

                    ஆனால் அவளின் நோக்கம் முழுக்க பணத்தையே மையப்படுத்தியிருந்தது. அவள் எந்த ஆணையும் நம்பத் தயாராக இல்லை. எதுவாக இருந்தாலும் அவள் ஐயத்தின் அடிப்படையிலேயே அணுகினாள். லோகநாதனுக்கு ஒரு நிரந்தர வேலையிருக்கிறது என்று தெரிந்தவுடன் கணிசமாக அவனிடததில் தேத்திவிடலாம் என்று கணக்குப் போட்டிருந்தாள். அதற்காகத்தான் அவனுக்குப் பெண் பார்க்கிறார்கள் என்று அவன் குடிபோதையில் உளறியதும் ஒரு கச்சேரியை தெருசிரிக்க அரங்கேற்றிவிட்டு வந்தாள்.

                    ஆனால் நினைப்பதுபோல் எதுவும் நடப்பதில்லையே.

                    அதற்கு எதரிடையாகக் காயம்பட்ட லோகநாதனைப் பார்க்க அவளுக்குப் பரிதாபமாக இருந்தது. நன்றாகப் படித்தவன். அதிலும் தங்க மெடல் வாங்கியவன் நிலை மாறியிருக்கிறது. படித்தவன் என்றதுமே அவனிடத்தில் அவளுக்கு ஓர் அச்சம் வந்தது. முன்புபோல் எளிதாக அவனை நெருங்கப் பயந்தாள். காரணம் தெரியவில்லை அவளுக்கு.

                     அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

                     லோகநாதனிடத்தில் தெளிவாகப் பேசினாள்.

                     உன்கிட்டப் பேசணும்யா... நான் சொல்றத கேளு...நேத்துவரைக்கும் நடந்தத கெட்டக் கனவா நினைச்சி மறந்துடு...எல்லார் மேலயும் தப்பு இருக்கு. ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்றதுலே எதுவும் மாறப்போவது இல்லே... என்னோட வாழ்க்கை சீரழிஞ்சதோட இருக்கட்டும்... எங்காச்சும் ஒரு வேலை செஞ்சு நானும் எம்புள்ளயும் வயித்தக் கழுவிக்குவோம்.. நீ நல்லா படிச்சவன்யா.. உன்னைப் பங்கப்படுத்த எனக்கு மனசு வரலே.. எல்லா ஆம்பிள்ளயும் ஒழுங்கானவன் இல்லதான்.. யாரையும் இனிமேலும் நான் நம்பமாட்டேன்.. என் வாழ்க்கையை சீரழிச்சது உன்னோட இனந்தான்.. ஆனாலும் எனக்கு மனசு வரலே... யாருக்கோ தகப்பன் தெரியாம பொறந்தாலும் உன்னோட தகப்பன் தன் பிள்ளையா உன்னை வளர்த்திருக்கான்.. எப்படிப்பட்ட பெருந்தன்மையான மனுஷன்... உன்னோட ஆயி ஒழுசலா இருந்தும் அதைக்காட்டிக்காம அந்த சத்தியபுருஷன் உனக்குத் தகப்பனா இருந்துட்டுப்போயிருக்காரு.. அவரு சாமிதான்.. உன்னோட குல தெய்வய்யா..நான் உன்னைவிட்டுப் போயிடறேன்.. வழிச்செலவுக்குப் பணம் கொடு... ஆனா ஒரு கோரிக்கை வக்கிறேன்... நீ யாராச்சும் ஒரு நல்லா பொண்ணாப் பாத்துக்  கட்டிக்க அவள நல்லா வசசுக்க.. உன்னோட வம்சம் தழைக்கணும்யா..  ஏன்னா நீ நல்லவன்தான்... ஏதோ போறாக்காலம் என்னன்மோ நடந்துடுச்சி... திருந்தி நட... என்னோட வாழ்ந்ததயும் கெட்டக் கனவா நினைச்சுக்கோ.. உனக்கு மனசுக்குப் புடிச்சவள நீயா பாரு.. உண்மையப் பேசு.. உன்னைப் புரிஞ்சுக்கிட்டவ வருவா.. நான் புரிஞ்சுக்கிட்டமாதிரி.. எனக்கே இனிமே எங்காச்சும் உழைச்சுச் சாப்பிடணும்னு ஆசை வருதுய்யா...

                         லோகநாதன அவளை முதன்முறையாக ஒரு பெண்ணாகப் பார்த்தான்.

                         கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொன்னான்.

                        உன்னை என்னிக்கும் மறக்கமாட்டேன்.. எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சு ஒரு பொண்ணு வந்தா..எனக்குக் குழந்தைப் பொறந்தா.. அது பொம்பளப்புள்ளயா பொறக்கணும்.. அதுக்கு உன்னோட பேரத்தான் வைப்பேன்.. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் வாழப்போறப் புது வாழ்க்கைக்கும் நீதான் காரணம்.. என் உயிர் இருக்கறவரைக்கும் மறக்கமாட்டேன்.. சாயங்காலம் வரேன்.. கடைத்தெருவுக்குப் போய் உனக்கும் உன் புள்ளக்கும் கொஞ்சம் துணிமணிங்க எடுததுத் தரேன்.. பணமும் தரேன்.. ரெண்டுபேருமே நல்ல வாழ்க்கை வாழ்வோம்.. அவங்கஅவங்க வழியிலே..

                           லோகநாதன் வீட்டிற்கு வந்துவிட்டான்.

                           மனது அதிகாலை குளம்போல சலனமற்று அமைதியாக இருந்தது,

                           அவன் மனத்தில் ஒரு முடிவு எடுததிருந்தான்.

                          0000000


                          சங்கரியின் சகோதரிகள் பக்கத்து வீடுகளுக்குப் போயிருந்தார்கள். சாரதா கூடத்தில் உட்கார்ந்து இருந்தாள். வெளியே போய்விட்டு வந்த கோபாலன் கையிலிருந்து பையைக் கீழே வைததுவிட்டு..சங்கரி கொஞ்சம் தண்ணீ கொடும்மா என்றான்.

                        எடுததிட்டு வரேம்பா என்றபடி எழுந்துபோனாள் சங்கரி.

                        என்ன பை இது என்றாள் சாரதா.

                         பழங்கள் வாங்கிட்டு வந்தேன் உனக்குததான். டர்க்டர் நிறைய சாப்பிடணும் பழங்களன்னாரு.. அதான்..

                        எதுக்குங்க? எனக்கு ஒண்ணுமிலலீங்க.. எல்லாம் சரியாயிடிச்சி...

                       எல்லாம் சரியாகணும் சாரதா என்றான் கோபாலன்.

                       சங்கரி கொடுத்த தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு டம்ளரைக் கீழே வைத்தான்.

                       சங்கரிய பத்திதானே சொல்றீங்க?

                     ஆமாம் சாரதா.. சேர்த்து வச்ச நகையும் அடகுக்குப் போயிடிச்சி.. அத எப்ப மீட்கப்போறேன்னு தெரியல்லே.. கூடுதலா வேற நகை சேர்க்கணும்.. என்ன பண்ணப்போறேன்னு தெரியாம கலக்கமா இருக்கு.. கவலையாவும் இருக்கு..

                    வேண்டாங்க.. விடுங்க.. சங்கரி கொண்டுவர்ற சம்பளத்தை இனி தொடவேண்டாம்.. அத சேமிப்பா வச்சிடுங்க.. அந்தப் பணமே இல்லன்னு நெனச்சுக்குவோம்.. சமாளிப்போம்.. நிச்சயம் ஒரு வழிய அடச்சா ஆண்டவன் இன்னொரு வழிய அகலமா திறந்து வப்பாரு.. நம்பிக்கையோட இருப்போம்.. நாம யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யலே...நமக்கு நிச்சயம் கெடுதல் நடக்காது.. எல்லாமும் ஏதோ நன்மைக்குத்தான்.. நம்பளோட மனசு தெரிஞ்ச ஒரு மனுஷன் நிச்சயமா வருவான்.. அவன் மருமகனா மட்டுமில்லே,, நல்ல மகனாவும் இருப்பான்.. திக்கத்தவங்களுக்குத் தெய்வந்தாங்க துணை..  யாரையும் நம்பவேண்டாம்.. எதையும் நினைக்கவேண்டாம்.. தெய்வத்தை நினையுங்க.. அந்தக் காமாட்சிய நினையுங்க.. காமாட்சி கண்கலங்க விடமாட்டா.. கைகொடுப்பா... அவளுக்கு எல்லாமும் தெரியும்.. அவதான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டிருக்கா.. அவ அனுப்புவா பாருங்க.. என்றாள் சாரதா தெளிவாக.

                         எதுவும் பேசாமல் ஒரு அமைதி நிலவியது.


                           00000


                       லோகநாதன் ஒரு முடிவு எடுத்திருந்தான். இனி எந்தச் சூழ்நிலையிலும் தயங்காமல் யாராக இருந்தாலும் தன்னுடைய எல்லா உண்மைகளையும் சொலலிவிடவேண்டும். அதற்குச் சமம்தித்துப் பெண் கொடுத்தால் கொடுக்கட்டும்.

                      உண்மைபேசியவ்ர்கள் அழிந்ததாக வரலாறு இல்லை.

                     சத்தியத்தின் செயல்களுக்கு எப்போதும் ஒரு வேகமும் மதிப்பும் உண்டு. அது எப்போதும் சத்தியமாகவே இருக்கும். நெருப்பைப்போல.

                       வருகிற பெண்ணிடம் எந்த எதிர்பார்ப்பும வேண்டியதில்லை. தனக்கென்று அவள் மனைவியாக உறுதிப்பட்டுவிட்டால் அவளுக்கு எல்லா நகைகளையும் தானே செய்து போட்டு மனைவியாக்கிக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தான் தீர்க்கமாக. கடைசிவரை அவளைத் துணைகொண்டுதான் இந்த புதுவாழக்கைப் பாதையில் பயணிக்கவேண்டும் என்றும் உறுதியாகத் தீர்மானம் செய்துகொண்டான்.

                        சொர்ணத்தாயைக் கூப்பிட்டான்.

                        பயந்துகொண்டே வந்தாள்.

                        எனக்குப் பொண்ணு பார்க்கப்போனியே அந்த வீட்டு முகவரிய கொடு..

                        எதுவும் பேசாமல் கொடுத்தாள்.

                        அவளிடததில் சொன்னான்.  எனக்குப் பொண்ண நானே பாத்துக்கறேன். நீ பாக்கவேண்டாம். நல்லபடியா சொல்றேன். கேட்டுகக. மீறீ பாத்தே அப்புறம் நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்..

                       கோபாலனின் முகவரியை ஒருமறை மனதில் மனனம் செய்துகொண்டான்.  அவர்கள் வீட்டிற்குப்போய் உண்மையை சொல்லவேண்டும். வேறு எங்காவது நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துக்கொள்ளுங்கள்.. என்னோட அம்மா சொன்னது எலலாம் பொய். நான இப்படிப்பட்டவன் என்று உண்மையைச் சொல்லி என்று முடிவெடுத்தான்.

                         கிளம்பிக் கோபால் வீட்டிற்குப் போனான்,

                         கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தான்.

                          கதவைத் திறந்தாள் சங்கரி  யார் வேணும்?

                          கோபாலன் சார் இருக்காரா?

                          அப்பாவா? இருக்காங்க உள்ள வாங்க..

                           இருந்த ஒரு நாற்காலியை எடுத்துப்போட்டார்கள்.

                           நர்ன் சொர்ணத்தாயியின் மகன் லோகநாதன்.. என்றதும் அவர்கள் முகம்மாறியதைக் கண்டும் அவன் தொடர்ந்து பேசினான். எல்லாவற்றையும் ஒளிவு மறைவு இலலாமல் திறந்துகொட்டிவிட்டு எழுந்தான்..

                            என்னாலயும் என்னோட அம்மாவாலும் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன்..மன்னிச்சிடுங்க..

                              எழுந்து வாசல் நோக்கிப்போனவனைக் கூப்பிட்டாள் சாரதா..

                              மாப்பிள்ளைத் தம்பி ஒரு நிமிஷம் நில்லுங்க...

                                                 (நிறைந்தது)







அடுத்த குறுந்தொடர்...........   ஜால்ரா....

                           .


Wednesday, May 1, 2013

தமிழின் அணையாவிளக்கு.....பாவேந்தம்...



                      இந்தச் சிறு கட்டுரையை நான் 29.04.2013 அன்று எழுத எண்ணியிருந்தேன். மனதுக்குள் எழுதிவிட்டு பிறகு பதிவிடலாம் என்று இன்று  பதிவிடுகிறேன்.

                       மேற்குறிப்பிட்ட நாளில்தான் 1891 ஏப்ரல் 29 புதன் இரவு 10.15 மணிக்கு புதுவையில் பாவேந்தர் பாரதிதாசனார் தமிழுக்குப் புதையலாகக் கிடைத்தார்.

                       தமிழ் படிக்க வருவதற்கு முன்னரே அப்பாவால் திராவிட இயக்கமும் திராவிட இயக்கத் தலைவர்களும் அறிமுகமான சூழலில் பாவேந்தரையும் அவரது கவிதைகளுடன் அறிமுகம் செய்துவைத்தார். 10 வது படிக்கிறபோது பாரதியையும் பாவேந்தரையும் திருக்குறளையும் முதன்முதலாகப் பொருள் புரிந்தும் புரியாமலும் வாசித்து மறந்த காலக்கட்டமது.

                       அப்புறம் பாவேந்தரை ஆழமாக பல சான்றோர்களின் பேச்சைக் கேட்டபிறகு வாசிக்கவேண்டும் என்கிற அவசியத்தையும் கடமையையும் பொறுப்பையும் எனக்கு உணர்த்தியது.

                        அவருடைய பிறந்த நாளில் பாவேந்தர் பாரதிதாசனர் பற்றி இச்சிறு கட்டுரையை என்னுடைய கடமையாக எண்ணி உங்களின் சிலநிமிடச் சிந்தனைகளுக்குப் பரிசாக அளிக்கிறேன்.

                       தமிழ்த்தாயின் இரு கண்களாகப் பாரதியாரும் பாரதிதாசனும்.

                       பாவேந்தரின் வாழ்க்கை வரலாற்றை அவரது புதல்வர் மன்னர்மன்னன்  கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல் என்ற நுர்லாக எழுதியுள்ளார். பாவேந்தரின் 54 ஆண்டுகால வாழ்வைச் சொல்ல 20 ஆண்டுகள் உழைத்தேன் என்று அந்நுர்லில் குறிப்பிடுகிறார் மன்னர்மன்னன் அவர்கள்.

                     சுப்புரத்தினம்  என்ற  தனது பெயரை பாரதியாரைச் சந்தித்தபின் அவருடைய கவியாளுமையில் தன்னைப் பறிகொடுத்து பாரதிதாசனாக மாற்றிக்கொண்டார். இருவருடைய சந்திப்பு எப்போது நிகழ்ந்தது என்பது குறித்து நிறைய ஆய்வு விவாதங்கள் உள்ளன.

              இருப்பினும் பாரதிதாசன் வாழ்வில் நடந்த இருபெரும் முக்கிய நிகழ்வுகளாக அவர் பாரதியாரைச் சந்தித்த நிகழ்வையும் தந்தை பெரியாரைச் சந்தித்ததையும் வரலாற்று நிகழ்வுகளாகக் குறிப்பிடுவார்கள். இந்நிகழ்வுகள் பாவேந்தர் வாழ்வில் பல மாற்றங்களை நிகழ்த்தியவை எனலாம்.

                    பாரதியைப் பின்பற்றி அரசியல் விடுதலை. சமுக ஏற்றத்தாழ்வு ஒழிதல் வேண்டிப் பின்னர் சமுகச் சீர்திருத்தம் என்பதை முதன்மையாகவும் கொண்டு பாடல்களை இயற்றினார்.அதன்பின்னர் சுயமரியாதை இயக்கத்தின்பால் கொண்ட ஈர்ப்பால் அவரது படைப்புலகம் அதன் வழியாகவே மையங்கொண்டது. தாய்மொழிக்கல்வி. பெண்ணுரிமை. முடப் பழக்கவழக்கம் ஒழிப்பு அனைவருக்கும் கல்வி அனைவரும் சமம் என அவரது கவிதைகள் அமைந்தன.

                சில முக்கிய நிகழ்வுகள்

                1929 குடிஅரசு ஏட்டில் குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதற்பாடல் எழுதியது.

                1933  இல் மா.சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடந்த நாத்திகர் மாநாட்டில் நான் ஒரு நிரந்தரமான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திட்டது.

                 1935 ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டல்ம் தொடக்கம்.

                  1937 புரட்சிக்கவி வெளியீடு.

                  1938 பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுதி வெளியீடு.

                   1942 குடும்ப விளக்கு 1. 1944 குடும்ப விளக்கு 2 1948 குடும்ப விளக்கு 3
                   1950 குடும்ப விளக்கு 4. 5 வெளியிடு.
                    1955 புதுவை சட்டமன்றத்தொகுதியில் வெற்றிபென்று அவைத்தலைமை.
                    1959 பாரதிதாசன் நாடகங்கள்
                     1964 இல் ஏப்ரல் 21 இல் இயற்கை எய்துதல்..

                   எல்லா நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ள அவரது கவிதைத் தொகுதி நுர்லில் ஆண்டுவாரியாக அச்சிடப்பெற்றுள்ளது. ஆர்வமும் தேடுதலும் கருதி சிலவற்றை மட்டும் சான்றாகக் கொடுத்துள்ளேன்.

                       பாரதிதாசனைத் தேடிப் படிக்கவேண்டும்
 
                      ஒருமுறை வாசிக்கவேண்டும்.

                      எனக்கு நிரம்பப் பிடித்தது குடும்ப விளக்கு என்னும் நுர்ல்.

                      என்றைக்கும் அழியாக குடும்பத்தின் நல்ல இல்லறத்தின் மேன்மையை உணர்த்துவது அது. உடலைத் தாண்டி மனதால் வாழ்வது என்கிற உன்னதத்தை வெளிப்படுத்துவது.

                       சுருக்கமாகச் சொன்னால் பாவேந்தர் ஒரு நீண்ட கடல்.

                      அதை நதியளவுகூட சுருக்கமுடியாது.

                       நான் சிறுஓடையாகக் காட்டியிருக்கிறேன் அவ்வளவே.

                       சான்றாகத் தமிழின் இனிமை எனும் அவரது கவிதை


                     கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
                     கழையிடை ஏறிய சாறும்
                     பனிமலர் ஏறிய தேனும் -காய்ச்சப்
                     பாகிடை ஏறிய சுவையும்
                     நனிபசு பொழிந்திடும் பாலும் - தென்னை
                     நல்கிய குளிரிள நீரும்
                     இனியன என்பேன் எனினும் - தமிழை
                     என்னுயிர் என்பேன் கண்டீர்...

                     பொழியிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
                     புனலிடை வாய்க்கும் கலியும்
                     குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை
                     கொட்டிடும் அமுதப் பண்ணும்
                     குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
                     கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்
                      விழைகுவ னேனும் தமிழும் - நானும்
                     மெய்யாய் உடலுயிர் கண்டீர்....
   
                      பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
                      பக்கத் துறவின் முறையார்
                      தயைமிகு உடையாள் அன்னை - என்னைச்
                      சந்ததம் மறவாத தந்தை
                      குயில்போற் பேசிடும் மனையாள் - அன்பைக்
                      கொட்டி வளர்க்கும் பிள்ளை
                      அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்
                      அறிவினில் உரைதல் கண்டீர்...

                      நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
                      நிறையக் குளிர்வெண் ணிலவாம்
                      காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
                      கடல்மேல் எல்லாம் ஒளியாம்
                      மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
                      மலைகளின் இன்பக் காட்சி
                      மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
                      விந்தையை எழுதத் தரமோ?

                      செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
                      தேக்கிய கறியின் வகையும்
                      தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
                      தயிரோடு மிளகின் சாறும்
                      நன்மது ரஞ்செய் கிழங்கு - காணில்
                     நாவிலி னித்திடும் அப்பம்
                     உன்னை வளர்ப்பன தமிழா- உயிரை
                     உணர்வை வளர்ப்பது தமிழே...


                    பாவேந்தம் போற்றுவோம்.
                     



             

             

           

                     

தொட்டிமீன்கள்....குறுந்தொடர்....5



                   தொட்டி மீன்கள்......குறுந்தொடர்......5



                        தொண்டை வறண்டுபோய் நெடுநேரம் தாகத்துடன் அலையும்போது குளிர்ந்த தண்ணீரும் மோரும் கிடைத்தால் அந்த சுகத்தை சொல்லால் விவரிக்கமுடியாது,,,

                         அப்படியே களைத்துப்போய் உட்கார எண்ணும்போது குளிர் ஊட்டப்பட்ட அறையில் அபப்டியே சரிந்து உறங்க வரும் உறக்கம் கோடிக்கணக்கான சுகங்கள்..

                             நெடுநேரம் கழிக்கமுடியாமல்  அப்புறம் தனியான இடத்தில் யாரும் இடையூறு செய்யாதநிலையில் சிறுநீர் கழிக்கும் நிம்மதிக்கு எதையும் தரலாம்..

                              இன்னும் பத்துநிமிடத்தில் ரயில்வே நிலையத்திற்குள் புகுந்து,, டிக்கெட் எடுக்கப்போய் அங்கேயிருக்கும் சற்று நீண்ட வரிசையில் படபடத்து.. டிக்கெட் வாங்கிக்கொண்டு அவசரஅவசரமாய் மூச்சிறைக்கப் போய் ரயில் பெட்டியில் ஏறும்போது நமக்கென்று காத்திருந்தது போல கிடைக்கும் இருக்கையில் உட்கார்ந்து மூச்சுவாங்கும்போது பேசமுடியாது,, ரயில் புறப்பட்டதும் வெளியிலிருந்து சன்னலின் வழியாக உள்ளே நுழைந்து முகத்தில் தடவிப்போகும் காற்றை அனுபவிக்கும்போது கிடைக்கும் நிதானம்...

                              இவை அவ்ஸ்தையோடு கூடிய அற்புத சுகங்கள்..

                              அனுபவிக்கும் அந்தத் தருணம்வரை மனசும் உடம்பும் படும்பாடு இருக்கிறதே...

                                 அப்படித்தான் பட்டார்கள்.

                                 எல்லாவற்றிற்கும் நிம்மதியாய் சாரதா மீண்டுவிட்டாள்.

                                 கண்களைத் திறந்து முதலில் பார்த்தது அந்த ஐசியு வார்டில் இருந்த ஒரு சிரிக்கும் குழந்தையின் புகைப்படத்தை.. அப்புறம் சற்று தள்ளியிருந்த அன்னை தெரசாவின் அமைதியான புன்னகை தவழும் முகத்தை.

                                 எப்படிம்மா இருக்கே?

                                 கேட்ட மருத்துவரின் முகத்தைப் பார்த்து மெல்ல உதடுகளைத் திறந்தாள் சாரதா,

                                   நன்றி டாக்டர்.. நல்லாயிருக்கேன். என் பிள்ளங்க எங்கே?
அவரு எங்கே?

                                  எல்லாரும் வெளியே காத்துக்கிட்டிருக்காங்கம்மா,,,

                                  கதவு திறந்ததும்தான் தாமதம்,, உள்ளே ஓடிவந்தார்கள்  சங்கரியும் கோபாலனும்,,

                                    இருவரையும் பார்த்து கலங்கினாள் சாரதா.

                                   இருவரும் சாரதாவைப் பார்த்து அழுதார்கள் வாய்விட்டு

                                   என்னம்மா... இது... நீயில்லாம நாங்க ஏதும்மா?  என்று சங்கரி அழுதாள்.

                                  நீ அவ்வளவு சீக்கிரம் போகமாட்டேடி... இந்தப் பாசக்காரப் பைத்தியக்காரனைக் குணப்படுத்தாமப் போகமாட்டே... நிறைய இந்தப் புள்ளங்களுக்குப் பாடுபடணும்டி... கடைசிவரைக்கும் இதுங்கள கரைசேத்த்துடடு ஓய்ஞ்சுப்போய் இருக்கறப்ப சட்னு ரெண்டுபேரும் ஒரே நாள்ல கிளம்பிடணும்...சரியா... இனிமே இதுமாதிரி பயமுறுத்தாதே... விளையாட்டுக்கூட பயமுறுத்தாதே... ரொம்பப் பயந்துட்டேண்டி... சாரதா கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அரற்றிக்கொண்டிருந்தார் கோபாலன்..

                                 சாரதாவை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார்கள்.

                                வாசலில் அவளின் மற்ற இருபெண் பிள்ளைகளும் அம்மா... என்றபடி ஓடிவந்து சாரதாவைக் கட்டிக்கொண்டன.

                                 காட்டுக்குள் வழிதவறிய பெண் மான் ஒன்று சிங்கங்கள் துரத்த ஓடிஓடி... அப்புறம் தப்பியதோடு தன்னுடைய கூட்டத்தை வந்து சேர்ந்ததுபோல தன்னுடைய வீட்டிற்குள் நுழையும்போது உணர்ந்தாள் சாரதா.

                                     சங்கரி சாமி விளக்கை ஏத்து... என்றாள்.

                                     சங்கரி கொல்லைப்புறம் போய் முகம். கை. கால்கள் கழுவி வந்து விளக்கேற்றினாள்.

                                      சாரதா நான் குளிக்கணுங்க... என்றபடி கொல்லைப்புறம் போய் மெதுவாக சங்கரி உதவியுடன் குளித்துவிட்டு வந்தாள். நேராக சாமிப் படத்திற்கு முன்நின்று காமாட்சியம்மன் புகைப்படத்தைப் பார்த்து சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு நின்றாள். பின் திருநீறும் குங்குமமும் இட்டுக்கொண்டு வந்து அப்படியே தரையில் உட்கார்ந்து எல்லோரையும் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தாள்.

                                     ரொம்ப படுத்திட்டேனா?

                                     பழைய சாரதாவாகியிருந்தாள் அந்த நிமிடம்..


                                      0000000


                                   லோகநாதன் கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தான்.

                                    சற்று நேரம் கழித்துக் கதவைத் திறந்தாள்.

                                     இவனைப் பார்த்ததும் எதுவும்  பேசவில்லை. உள்ளே போனாள். பின்தொடர்ந்து உள்ளே நுழைந்தான். அவளின் குழந்தை சற்று தள்ளி கூடத்தின் ஓரமாய் துர்ங்கிக்கொண்டிருந்தது.

                                     நாற்காலி எடுத்துப்போட்டாள்.

                                     நாற்காலியைத் தள்ளிவிட்டு  தரையில் உட்கார்ந்துகொண்டான். அவள் சற்று தள்ளி எதுவும் பேசாமல் நின்றுக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

                                     சட்டென்று அழ ஆரம்பித்தான்.

                                    அவள் இதை எதிர்பார்க்கவில்லை.

                                    அதிர்ந்துபோனாள். உடனே பதறியபடி அவனருகே  போய் உட்கார்ந்து என்னாச்சுய்யா? எதுக்கு இப்படி அழறே? என்றாள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு.

                                     இன்னும் கேவிகேவி அழ ஆரம்பித்தான். அழுகை அதிகரித்தது.

                                      எதுக்குய்யா அழறே...நான் உங்க வீட்டுக்கு வந்து கத்தினேன்னா,,, என் நிலைமையை நினைச்சுப் பர்த்தீங்களா?

                                        இல்லையென்று தலையாட்டினான்.

                                        அப்புறம் என்னன்னு சொல்லுய்யா.. எதுக்கு அழறே?  எதாச்சும் வேற பிரச்சினையா,,, என்னால பிரச்சினையா?... எனக்கும் என் புள்ளக்கிம் ஒரு வழிய சொல்லு நாங்க உன்னை விட்டுட்டுப் போயிடறோம்,, என்று உடன் அவளும் அழுதாள்.

                                         லோகநாதன் அழுகையை நிறுத்தினான்.

                                          இல்லே.. ஸ்வேதா...நான் எப்படி வாழணும்னு ஒரு கொள்கை வச்சிருந்தேன். அதுக்கான வழியிலே ஒழுங்காப் போயிட்டிருந்தேன். எதிர்பார்த்தது எப்பவும் நடக்காதும்பாங்க... ஆனா கிடைச்சத ஏத்துக்கணும்பாங்க.. ஆனா இது எதுவும் நடக்கல்லே,, எதிர்பார்த்ததுபோல நடக்கும்,, சரின்னு போன்னா,, அது வேற மாதிரி சகதிக்குள்ள தள்ளிவிட்டமாதிரி செஞ்சுட்டுப்போயிடும்... எங்கப்பா இறக்கற வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லே... அந்த ராத்திரிய என்னால மறக்கமுடியாது ஸ்வேதா..

                                           எந்த ராத்திரி?

                                           எங்கப்பா இறந்துபோறதுக்கு ஒரு வாரத்துக்கு முந்திய தினம். அன்னிக்கு சங்கடஉறர சதுர்த்தி.. எல்லோரும்  துர்ங்கிப் போயிருந்தாங்க...அப்பா மட்டும்தான் துர்ங்காம இருந்தார்...ரூமுக்குள்ளே போனேன். அப்பா ஒருமுறை என்னைப் பார்த்தார். அந்தப் பார்வை வழக்கமான பார்வையா இல்லே..

                                      அதற்குமேல் பேசமுடியாமல் லோகநாதன் அழுதான்.

                                     அவளுக்கும் என்னவோ போலிருந்து அவனது அழுகை. நாம் அவன் வீட்டுக்குப் போய் தெருவில் நின்று கத்தி அவமானப்படுததியது அவனை ரொம்பக் காயப்படுத்திவிட்டது போலும்..தன்னை நினைத்துப் பார்த்தாள். அருவருப்பாக இருந்தது. இப்படியொரு வாழ்க்கை தனக்குத் தேவையா என்று நினைத்தாள். பேசாமல் எதையாவது தின்றுவிட்டு இறந்துபோய்விடலாம் என்று தோணியது. ஆனாலும் அவளும் விரும்பி வரம் வாங்கி வந்த வாழ்க்கை இதுவல்ல.. எல்லாமே தலையெழுத்துதான்.. பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த தன்னுடைய பெண்ணைப் பார்த்தாள். அவளுக்காக வாழவேண்டிய கட்டாயத்தை எண்ணி மறுபடியும் அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது. துடைததுக்கொண்டு அவன் தோளைத் தொட்டு உலுக்கி

                                   சொல்லுய்யா... மனச தளரவிடாதே,,, நானிருக்கேன்.. என்றாள்.

                                   அந்த இரவில் அவனுக்கும் அப்பாவுக்கும் நிகழ்ந்தஉரையாடல் மனக்கண் முன்னே ஒரு திரைப்படத்தில் உச்சக்கட்ட காட்சிபோல ஓடத்தொடங்கியது.

                                      வாப்பா லோகு உக்காரு...

                                      என்னப்பா துர்ங்கலியா? என்றான்.

                                      இல்லேப்பா. இனிமே நிரந்தர துர்க்கம்தான். அதுக்கான நேரம் வந்துடிச்சி. பதட்டப்படாதே சில உண்மைகளை நாம ஏத்துக்கத்தான் வேணும்.. என்னோட உடம்பு பத்தி எனக்குத் தெரியும்... ஆனாலும் அதுக்குள்ள உன்கிட்டே சில விஷயங்களைப் பேசிடலாம்னு நினைக்கிறேன்..

                                     சொல்லுங்கப்பா... என்றான்.

                                     இன்னிவரைக்கும் உன்மேல வச்ச பாசம் உண்மையானது. மாசு மருவற்றது. ரொம்ப ஒழுக்கமா உன்னை வளர்த்திருக்கேன். உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.. உனக்கான வாழ்க்கையை நீ தேர்ந்தெடுத்துக்க. உங்கம்மா அமைச்சுகொடுகக்ற வாழ்க்கை உனக்கு வேணாம்.. அவளோட நான் 56 வருஷம் குடும்பம் நடததியிருக்கேன். ஆரம்பத்துலே தெரியலே.. ஆனா இன்னிவரைக்கும் அவளோட வாழ்ற வாழ்க்கை ஒரு நடைப்பிணமான வாழ்க்கை. மனசொத்து வாழ்ந்த்து எலலாம் போச்சு. அவ நல்லவ இல்லை.

                                      என்னப்பா சொல்றீங்க? அதிர்ந்துபோனான்.

                                      ஆமாப்பா.. யார்கிட்டயாவது சொல்லாமப் போனா மனசு ஆறாது. காலம் முழுக்கப் பாவம் செஞ்சவன் சாவறப்பவாவது விமோசனம் தேடணும்.. பரிகாரம் செய்யணும்..உன்கிட்ட சொல்றதுகூட பரிகாரம்தான்..

                                      அதிர்ச்சியிலிருந்து மீளாமல அப்படியே அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தான் லோகநாதன்.

                                      அடுத்த பெரிய குண்டை அவன்மேல் போட்டு வெடிக்கச் செய்தார்.

                                      ஆரம்பத்துலே தெரியலே... வருஷாவருஷம் திருவையாத்துலே நடக்கிற ஏழுர் திருவிழாவுக்கு போவா. அத்தனை பக்தியோட இரவெல்லாம் ஏழுரும் சுத்துவா. அதை பக்தின்னு ஏமாந்துபோனேன். பின்னாடிதான் தெரிஞ்சது அது பத்தி வேறு சுகத்துக்காக அலையறான்னு.. என்னால எதுவும் செய்யமுடியல்லே.. ஊருக்குத் தெரிஞ்சா மானம் மரியாத எல்லாம் போயிடும். அப்படிப்பட்ட குடும்பத்துலே பொறந்தவன் நான். அப்படி அவ நடந்துக்கிட்ட முறையிலேதான் நீ பொறந்தே.. அன்னிக்கு அவள தொடறத விட்டுட்டேன். ஊரு ஒப்புக்கு புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்தோம்.. ஆனா அவ அதைப்பத்தி கவலையே படலே,,, உடம்புல வலு வத்துனப் பொறவுதான் விட்டா... ஆனாலும் உன்னை என் ரத்தமாக நினைச்சுதான் இத்தனை வயசு வரைக்கும் வளர்த்தேன்.. ரொம்ப ஒழுக்கமா வளர்ந்தே. என் சொத்துல முதல் பாகம் உனக்குத்தான். அதை நல்லபடியா வச்சுக்க. உனக்கான வாழ்க்கைய நீ தேடிக்க... உன்னை நம்பி வர்றவ நல்லவளா இருக்கணும்.. அவ உனககாகவும் நீ அவளுக்காகவும் வாழணும்.. அதான் வாழ்க்கை.. சாவும்போது நிம்மதியா சாவணும்... எதையும் காட்டிக்காதே.. எப்போதும்போல இரு...இது என் மேல சத்தியம்.. என்று சத்தியம் வாங்கினார்.

                                 லோகநாத்னுக்குள்  பொங்கிப் பொங்கி வழிந்தது ஆற்றாமை.

                                 நான் யாருக்கோ பிறந்தவனா?

                                 அடக்கடவுளே...

                                 எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று கனவு கண்டிருந்தேன். அப்படியே அபபாவைக் கட்டிக்கொண்டு அழுதான்.

                                அப்பா அவன் தலையை வருடிக்கொடுத்தார்.

                                அப்பா சொன்னார்..

                                 இதை சொல்லாம விட்டா உன்னோட அம்மா உன் வாழ்க்கையை சிதைச்சிடுவா.. எனக்குத்தெரியும்.. அவ உடம்பால தளர்ந்து போயிருக்கிறா.. ஆனா மனசால அவ அப்படியேதான் இருக்கா... மூர்க்கனும் முதலையும் கொண்டது விடான்னு படிச்சிருக்கேன்.. அவ அபபடித்தான்.. நீ உன்னப் பாத்துக்கோ.. நல்லா இரு...

                                     உள்ளம் முழுக்க துயரம் அடைக்க நெஞ்சடைத்து வாய் பேசமுடியாமல் கண்ணீர் வழிய வெளியே வந்தான்.

                                     அவனிடத்தில் பேசிய ஏழாம் நாள் இறந்துபோனார்.

                                    எல்லாக் காரியங்களையும் செய்தான்.

                                    காட்டுக்குப் போய்விட்டுவந்த அன்றைககு இரவு சொர்ணத் தாயி புலம்ப ஆரம்பித்தாள்.

                                    சந்தனப்பொட்டு வச்ச மகராசன்..
                                    சத்தமிலலாமப் போனாரே
                                    தவிச்சு நிக்கறேன்..
                                    தாமர இல தண்ணீரா நான்
                                    ஒட்டாம ஒடுங்கறேனே...
                                    வாழ்ந்தத நினைப்பேனா மனுஷன்
                                    வாசனையை நினைப்பேனா
                                    கள்ளிச் செடியாட்ட்ம் கனமான
                                   முள்ளாட்டம் வாழ்ந்தேனே,,,
                                     என் ராசா...தேசமெங்கும்
                                    என் கதைதான் ஓடுமய்யா...

    லோகநாதனுக்குப் பொங்கி வந்தது அவளைப் பார்க்க. ஒப்பாரியைக் கேட்டதும் உடைந்தான். எழுந்தான். போய் அவள் முகத்தை நோக்கி ஓர் உதைவிட்டான். அப்படியே அய்யய்யோ என்றபடி மல்லாக்க விழுந்தாள்.

                                     எல்லோரும் அதிர்ந்தார்கள்.

                                     வெறி புடிச்ச சிறுக்கி... நடிகக்றியா? வாய மூடு... கொன்னு புதைச்சிடுவேன்.. களவாணி முண்ட... மறுபடியும் அவள் இடுப்பில் மிதித்தான்.

                                       அலறி நடுங்கினாள் சொர்ணத்தாயி. அவள் இதை எதிர்பார்க்கவில்லை.

                                      அய்யய்யோ இதை கேக்க நாதியில்லியா? செத்தும் எனக்கு கொள்ளி வச்சிட்டானே.. பாவி...

                                       என்னப்பா இது லோகு?  விடு.. உன் அம்மா அவ.. எதுக்கு இப்படி முரட்டுத்தனமா நடந்துக்கறே...?  எதுவாயிருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.

                                    இல்ல மாமா.. இவ திருட்டுச் சிறுக்கி மாமா.. எங்கப்பா சத்தியவான் மாமா.. அப்படிப்பட்ட மானஸதனுக்கு இவ சாபக்கேடு மாமா...

                                       சொர்ணத்தாயி ஒடுங்கினாள் சுவரோரம்.

                                        சட்டையை மாற்றிக்கொண்டு கிளம்பினான். அதுவரை குடிக்காதவன் உள்ளே போனான். முட்ட முட்டக் குடித்தான். பழக்கமில்லையாதலால் தடுமாறினான். ஏதோ ஒரு வீட்டு வாசலுக்கு வரும்போது மேலும் நடக்கமுடியாமல் போதையேறி அப்படியே அந்த வீட்டு வாசலில் மயங்கி விழுந்தான்.

                                         நினைவு கலைந்தான். உன் வீட்டு வாசல்ல அப்ப விழுந்ததுதான் என்று மறுபடியும் அழுதான்.

                                       அவளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

                                       எப்படிப்பட்டவன்.அவனை அப்படியே இறுக அணைத்துக் கொண்டாள்.

                                       மறுபடியும் கேவினான்.

                                      கேவியபடியே  சொன்னான் அவளிடம்..

                                     நான் எப்படி வாழணும்னு நினைச்சேன் தெரியுமா,,,?  படிப்புல நான் கோல்ட் மெடல் வாங்கினவன்.. காலேஸ் பர்ஸ்ட் தெரியுமா-. எல்லாம் போயிடிச்சி... என்னோட அம்மா ஒழுக்கமிலலாதவ.. அவளால எப்படி எனக்கு நல்ல வாழ்க்கை அமையும்.. அதான் அப்பா வேணாம்னு சொல்லிட்டாரு... உண்மையிலே எவ்வளவு பெரிய மனுஷன் அவர்... யாருக்கோ பொற்ந்த என்னை கடைசிவரைக்கு மகனா வளர்த்து எனக்கும் வாரிசு உரிமை கொடுத்து..சொத்து கொடுத்து...அந்த சத்தியவானுக்கு புள்ளயா பொறக்க முடியாமப்போச்சே.. என்று மறுபடியும் புலம்பியடியே வாய்விட்டு அழ ஆரம்பித்தான்.

                             அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பிப்போய் பார்த்தான். அவனை விட்டு தள்ளி நின்றாள். ஏனோ அவனை நெருங்க அவளுக்குப் பயமாக இருந்தது. அச்சப்பட்டாள் முதன்முறையாக அவனைப் பார்த்து. ஒருமுறை திரும்பிப் பாயில் படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் தன்னுடைய மகளையும் பார்த்துக்கொண்டாள். அவளுள் மேலும் அந்த பயம் படமெடுத்தாடியது.

                                                                                                    (மீன்கள் துள்ளும்)

                             

                                       

                                 



                                   

                                       

Saturday, April 27, 2013

தொட்டிமீன்கள்....குறுந்தொடர்....4




                                    தொட்டிமீன்கள்....குறுந்தொடர்....4



                              அந்த மருத்துவமனை வராண்டாவெங்கும் மருந்துவாடை  மிதந்துகொண்டிருந்தது.

                              ஐசியுக்கு வெளியே சங்கரி தரையில் சரிந்து உட்கார்ந்து இருந்தாள். மனமெங்கும் வேதனை கொப்பளித்துக்கொண்டிருந்தது,

                                அப்பாவை இன்னும் காணவில்லை.

                                மருத்துவமனையில் இருந்த பாட்டில் ரத்தம் ஏறிக்கொண்டிருந்தது, இன்னும் எத்தனை பாட்டில்கள் என்பதைவிட இந்தப் பாட்டில் முடிவதற்குள் அப்பா வந்துவிடவேண்டுமே என்கிற கவலை அவளை அரிக்கத்தொடங்கியிருந்தது,

                                 ஒருவேளை பணம் போதவில்லையோ என்கிற எண்ணமும் அவளை மேலும் வதைத்தது,

                                  ஏழையாய் பிறப்பதில் வருத்தமில்லை,  பட்டினியாய் கிடப்பதில்கூட சோகமில்லை, ஆனால் இதுபோன்ற இம்சைகளைத் தருவதில் அப்படியென்ன ஏழைகள் பாவம் செய்தார்கள்? ஏழைகளாகப் பிறந்திருப்பதே பெரிய சாபமும் பாவமும்தானே? இதைவிட கொடிய தண்டனை வேறு வேண்டுமா? ஆண்டவன் நல்லவங்களைத்தான் சோதிப்பான் என்கிறார்கள். இப்படி மரத்தின் வேரையறுப்பதுபோல சோதிப்பவன் எப்படி கடவுளாக இருக்கமுடியும்? அவனை எப்படி நம்பமுடியும்?

                                 ஆனாலும் அவளை மீறி அவளது குலதெய்வம் காமாட்சியம்மன் நினைவுக்கு வந்தது, மனதுக்குள் குலதெய்வக் கோயிலைக் கொண்டு வந்து விழுந்து வணங்கியழுதாள்,

                                   கதவைத் திறந்துகொண்டு நர்சு வந்தாள்,,

                                   சங்கரி நினைவை உதறிவிட்டு எழுந்தாள்,

                                   என்னம்மா ஆச்சு ரத்தம் வரலியா? இது தீரப்போவுது,,

                                   எங்கம்மா எப்படியிருக்காங்க சிஸ்டர்?

                                   நான் என்ன கேக்கறேன்,, நீ என்ன பதில் சொல்றேன்,, உயிரைக் காப்பாத்தத்தானே போராடறோம்,, ரத்தம் நாலைந்து பாட்டில் ஏத்துனாதா எதையும் சொல்லமுடியும்,,,

                                   அப்பா அதுக்குத்தான் போயிருக்காங்க சிஸ்டர்,,,

                                    சீக்கிரம் போன்பண்ணி வரச்சொல்லும்மா,,,

                                   அப்பாகிட்ட செல்பேன் கிடையாது சிஸ்டர்,,,

                                    என்னது? என்றபடி அவளை ஒருமாதிரியா பார்த்துவிட்டு,, எப்படியாச்சு தகவல் சொல்லு,, என்றபடி போனாள்,

                                    சங்கரிக்கு வீட்டில் இருக்கும் தங்கைகள் நினைவு வந்தது, பாவம் அவர்கள் என்ன செய்கிறார்களோ? அவர்களுக்கு அந்தளவுக்கு விவரம் தெரியாது, அப்பாவுக்கு என்னாச்சு? மறுபடியும் அப்பா நினைவு,

                                    அப்பாவை எப்படித் தொடர்பு கொள்வது,,

                                    சங்கரிக்கு ஒன்றுமே புரியாமல் குழம்பி நின்றாள், மறுபடியும் மனதுக்குள் காமாட்சியம்மன் உருவம் வந்து தோன்றியது,

                                     நடப்பது நடக்கட்டும் என்று முடிவெடுத்து  மருத்துவமனையை விட்டு வெளியே வந்து மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள், சிறிது துர்ரம் சென்றதும் ஒரு அம்மன் கோயில் தெரிந்தது, அதை நோக்கி நடந்தாள், அது ஒரு மாரியம்மன் கோயில்,

                                       உள்ளே போனாள், கோயிலில் அதிக கூட்டமில்லை, அர்ச்சகரும் யாருமில்லை,

                                       போய் உள்ளே சன்னதி முன் மாரியம்மனைப் பார்த்தபடி உட்கார்ந்தாள், பச்சைப்புடவை உள்ளங்கை அகல தங்க சரிகையுடன் அலங்காரத்துடன் அமர்க்களமாக இருந்தாள்,

                                       முகத்தில் சிரிப்பு வேறு,

                                       அம்மனைப் பார்த்தாள், உனக்கு சிரிப்பாக இருக்கிறதா? என்ற கேள்வியை அடக்கியபடி பார்த்தாள்,

                                        அம்மனின் சிரிப்பு மாறாமல் இருந்தது,

                                         கண்களை மூடிக்கொண்டாள்,

                                         நாங்க என்ன பாவம் செய்தோம்,,, என்னோட அம்மா அவ என்ன பாவம் செய்தா?  ஏன் இப்படி சோதிக்கறே,,, கஷ்டத்தைக் கொடு,, வேண்டாம்னு சொல்லலே அதைத் தாங்கிக்கற சக்தியையும் கொடுக்கக்கூடாதா? எனக்குத் திருமணப் பேச்சு எடுத்ததுமே அந்த சின்ன இன்பத்தைக்கூட அனுபவிக்க்க்கூடாதுன்னு அப்படி என்ன வன்மம் உனக்கு?,, தாங்கிக்கமுடியாத கஷ்டத்தைக் கொடுத்துட்டு அதை சோதிக்கறேன்னா எப்படி உன்னை கடவுள்னு சொல்லமுடியும்? அப்படி சோதிச்சு அப்புறம் மகிழ்ச்சியைக் கொடுப்பேன்னா இது என்ன விளையாட்டு? அப்படி என்ன அதுல உனக்கு அப்படியொரு ஆர்வம்?... எல்லாக் கேள்விகளையும் உள் வாங்கிகொண்டவள்போலவும் ஆனர்ல் பதில்கூற விரும்பாதவள்போலவும்  பேசும்வரை பேசு என்பதுபோலவே மாறாதிருந்தது அந்தச் சிரிப்பு,

                                         எழுந்து அப்படியே சன்னதியில் விழுந்து வணங்கினாள்,

                                         மறுபடியும் ஒருமுறை அம்மனை உற்றுப் பார்த்தாள், அதில் அம்மா சாரதாவின் முகம் தெரிவதுபோல இருந்தது, அப்படி நினைக்கப் பயமாக இருந்தது,

                                         குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு வெளியே வந்து மறுபடியும் மருத்துவமனையை நோக்கி நடந்தாள்,

                                         உள்ளே நுழைந்தும் அப்பாவைத் தேடினாள், அப்பா வரவில்லை,

                                       மனதுக்குள் மறுபடியும் படபடப்பு ஏறி நின்றது,

                                       ஐசியுக்கு முன்னே போய் நின்றாள், அப்போது கதவைத் திறந்துகொண்டு நர்சு வெளியே வந்தாள்,சங்கரியைப் பார்த்ததும் அவள் முகத்தில் கோபம் பொங்கியது,,

                                        எங்கம்மா உங்கப்பா,, அந்தப் பாட்டில் முடிஞ்சிடுச்சி,, இன்னுமா வரலே,, அப்புறம் ஏதாச்சுன்னா,, எங்ககிட்ட வம்புக்கு வர்றது,, டாக்டர் கோபமா இருக்காரு,,, ஏதாச்சும் செய்யும்மா,, போ உங்கப்பா எங்கருந்தாலும் கூட்டிட்டு வா,,

                                        சங்கரி நிலைகுலைந்துபோனாள், அப்பாவை எங்க போய் தேடுவது? கையில் பைசா  கிடையாது, அப்பா எங்க போயிருப்பார் என்கிற யோசிப்பும் இல்லை,,,நர்சு சொன்னது அவளை உலுக்கிப்போட்டது,,

                                         அப்புறம் ஏதாச்சுன்னா,,,

                                         அம்மாவுக்கு ஏதும் ஆயிடுமா,,, அம்மா இல்லாமப் போயிடுமா,, அம்மா எங்கள விட்டுட்டுப்போயிடுவியா ,,, நினைக்க நினைக்க அவளுக்கு உள்ளுக்குள் பொங்கியது,,

                                          என்னம்மா குத்துக்கல்லாட்டம் நிக்கறே,, வந்து சேர்றீங்க பாருங்க,, எங்களுக்குன்னு,, சே,,, என்றபடி நர்சு திரும்பி திட்டிக்கொண்டே போனாள்,

                                         அவள் பின்னே ஓடினாள் சங்கரி,

                                         ஓடிப்போய் அவள் முன்னே நின்றாள், நின்றவள் அப்படியே அந்த நர்சின் கால்களில் விழுந்து அவள் கால்களைக் கட்டிக்கொண்டு,,, அக்கா,, எங்கம்மாவை விட்டுடாதீங்கக்கா,, காப்பாத்துங்கக்கா என்று கதறினாள்,

                                              நர்சு அதிர்ந்துபோனாள், பதறியபடி,, சட்டென்று சங்கரியைத் துர்க்கியபடி,, அட,, என்னம்மா நீ என் கால்லே போய் விழறே,,
அய்யய்யே இது என்ன ரோதனையாபோச்சு,, சட்டென்று அவளுக்கு சங்கரியைப் பார்க்க இரங்கினாள்,

                                        அம்மாவுக்கு ஒண்ணும் ஆயிடாதும்மா, தைரியமா இரு,,, எங்ககிட்ட அம்மாவுக்கு தேவைப்படற ரத்தக்குருப் இல்லே,, இருந்தத ஏத்தியாச்சு,, அதான்,, பாப்போம்,, எப்படியாச்சும் காப்பாத்திடலாம்,, கடவுளை வேண்டிக்க,,

                                        நர்சு ஆறுதலாய் சொல்லிவிட்டுப்போனாள், ஆனால் அவளின் மனது லேசாக சங்கரிமேல் அனுதாபமாக அசைந்திருந்தது,

                                        அங்கே

                                        கோபாலின் மயக்கத்தை குமரவேல் தெளிவித்திருந்தார், தெளிவித்துப் பேசினார்,

                                   என்ன கோபால் நீங்க? இப்படி கவலைப்பட்டா காரியம் ஆகாது, மனச விட்டுடாதீங்க,, தைரியமா இருங்க,, எங்களோட ஏஜண்ட் சங்கத்திற்கும்  அதிகாரிங்க சங்கத்திற்கும் பணியாளர்கள் சங்கத்திற்கும் போன் பண்ணி பேசியிருக்கேன்,, எங்காச்சும் யாருக்காச்சும் இந்த ரத்தம் இருந்தா உடனே ஆஸ்பத்திரிக்குப் போகச் சொல்லியிருக்கேன்,,,

                                     இல்லண்ணே,,, எனக்குப் பெரிய பலமே அவதாண்ணே,, அவ இல்லாட்டி என்னால வாழமுடியாதுண்ணே,,

                                      உணர்ச்சிவசப்படாதே கோபாலா,,, ஒண்ணும் ஆகாது,, கடவுள் இருக்காரு,,, அவருக்குத் தெரியும்,, இதெல்லாம் ஒரு சோதனைக்காலம்னு நினைச்சுக்க,, சரியாயிடும்,, வா போகலாம்,,

                                       வண்டியில் ஏற்றிக்கெர்ண்டு மருத்துவமனை நோக்கிப் போனார்கள்,

                                       வண்டியில் போகும்போது கோபாலன் மனசு முழுக்க சாரதாவைச் சுற்றியபடியே இருந்தது,

                                       அம்மாடி,, என் வாழ்க்கைக்கு வந்து உனக்கு எந்த சுகமும் இல்லம்மா,, பஞ்ச பராரி மாதிரி ஒரு வாழ்க்கை,, ஆனாலும் அதை சந்தோஷமா எப்பவும் நீதான் மாத்தி வச்சிருந்தே?,,, நீ இல்லாம ஒரு வாழ்க்கையை எப்படிம்மா என்னால வாழமுடியும்?  எனக்கு என்ன தெரியும்? இந்தப் புள்ளங்கள வச்சிக்கிட்டு நான் அல்லாடப்போறேன்,, அல்லாட விட்டுட்டுப் போயிடுவியா சாரதா,,, யாருக்குமே எந்தக் கெடுதலும் பண்ணலீயேம்மா,, நமக்கு ஏம்மா இப்படியொரு சோதனைய கடவுள் கொடுத்தாரு,, எதுவுமே சொல்லாம மறைச்சிட்டியா,,, இல்ல சொல்லி என்ன ஆவப்போவுதுன்னு விட்டுட்டியா நடக்கறது நடக்கட்டும்னு,,, இன்னி வரைக்கும் கயித்தைதான் மாத்திக்கிட்டிருக்கே,, முடிச்சுப் போட்டதிலேர்ந்து அது தங்கத்தையே பாக்காத கயிறு,, அப்படியொரு வரம் வாங்கி வந்திருக்கேன்,, அதை எனக்கும் கொடுன்னு என் வாழ்க்கைக்கு வந்தியா சாரதா?  ஆனா என்னை விட்டு போக முடியாது சாரதா,, நான் உலகத்துக் கண்ணுக்கு வேணா மஞ்சக் கயிறுல முடிச்சு போட்டிருக்கலாம்,, ஆனா என்னிக்கிப் போட்டேனோ அப்பவே மனசுல முடிச்சு போட்டுட்டேன்,, நான் போட்டிருக்கி மனமுடிச்சை யாராலும் அவிழ்க்கமுடியாது,, அது முழுக்க முழுக்க என்னோட ரத்தம்,,,சதை,, உணர்வு,, என்னோட ஆயுள் எல்லாத்தையும் கல்ந்து போட்டிருக்கிற மனமுடிச்சு,, அதை அழிக்க அந்த ஆண்டவனாலும் முடியாது,, ஒருவேளை முடிஞ்சா அவனும் யோசிப்பான்,, அவனுக்கும் மனசு இருக்கில்லே,,, அய்யய்யோ என்ன பண்ணப்போறேன்னு தெரியலியே,, காமாட்சியம்மா எங்களைக் காப்பாத்து,,,

                                கோபாலனின் மனசு என்னும் பட்டாம் பூச்சி நிம்மதி எனும் தேனைத் தேடி கவலைத் தோட்டத்தின் ஒவ்வொரு பூ தோறும் அலைந்தது,,

                               மருத்துவமனையில்  அந்த நர்சால் உட்கார முடியவில்லை,

                               என்ன இது என்னைவிட ஒன்றிரண்டு வயதுதான் சின்ன வயசாக இருக்கும்,, அக்கா எங்கம்மாவைக் காப்பாத்துன்னு கால்ல விழுந்திட்டாளே,,, பார்க்க பாவமாக இருந்தது, அவளால் உட்கார முடியவில்லை, எனவே வார்டை விட்டு நேராக ரிசப்சன் நோக்கி நடந்தாள்,

                               என்ன சிஸ்டர்?
                               ஒரு போன் பண்ணிக்கறேன்,,

                                 பண்ணுங்க சிஸ்டர்,,
                               போன் செய்து யாருக்கோ பேசினாள், ஓ குருப் ரத்தம் இருந்தா உடனடியாக வேணும்,
                                யாருக்கு சிஸ்டர்?
                                என்னோட சொந்தக்கார அம்மா ஐசியுக்கு வந்திருக்காங்க,, அவங்களுக்குத்தான்,, யாராச்சும் எனக்குப் போன் பண்ணா வார்டுக்கு கூப்பிடுங்க,,

                                 சரி சிஸ்டர்,

                                 அவள் போன பத்து நிமிடங்கள் கழித்து, நாலைந்து இளம் பெண்கள் ரிஷப்சன் நோக்கி வந்தார்கள்,

                                  என்னம்மா வேணும்?

                                  நாங்க பாரதியார் மகளிர் கல்லுர்ரியில் படிக்கறேர்ம்,  இதோ இவ இருக்காளே அவளுக்கு இன்னிக்கு பிறந்தநாள்,, நாங்க ஒரு பாலிசி வச்சிருக்கோம்,, எங்க பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடாம அன்னிக்கு ரத்ததானம் செய்யறதுன்னு,, அதுக்குத்தான் வந்திருக்கோம் என்றதும் ரிசப்னஸிட் வியந்தாள்,,

                                 அடே,, இது நல்ல விஷயமா இருக்கே,, என்ன குருப் என்றாள்,

                                 அவளோட ஓ குருப்,,

                                 என்ன குருப்,,

                                  ஓ குருப்,,

                                   ரிஷப்னிஸ்ட் மகிழ்ந்துபோனாள், அய்யோ,, கடவுளுக்கு நன்றி,, இருங்க என்றபடி போனை எடுத்து வார்டுக்குப் பேச அந்த நர்சு ரிசப்ஷன் நோக்கி ஓடிவருவது தெரிந்தது,

                                   வந்தவள் அப்படியே ரத்ததானம் செய்யப்போகும் பெண்ணைப் பார்த்து கையெடுத்துக் குமபிட்டாள், வாம்மா,, உன்னால ஒரு உயிர்பிழைக்கப்போவுது,, ஒரு குடும்பமும்தான்,, வா,, உடனே,,

                                   எல்லாம் முடிந்தது,

                                   அந்தப் பெண் ரததம் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள், அதை உடனடியாக சாரதாவிற்கு ஏற்ற மாட்டிவிட்டு வந்தாள்,

                                   சங்கரியிடம் அந்த நர்சு,,, கவலைப்படாதே ரத்தம் வந்துடிச்சி,, பயப்படவேண்டாம்,,  என்றதும் சங்கரி கையெடுத்துக் கும்பிட்டபடியே அக்கா,, உங்கள மறக்கவே மாட்டேன்,, ரொம்ப தேங்ஸ்க்கா,, என்றாள்,

                                 எனக்கு சொல்லாத,, இந்தப் பெண்ணுக்கு சொல்லு,,

                                சங்கரி அவளைப் பார்த்து கையெடுததுக் கும்பிட்டாள்,

                                உடனே தோழிகள்,, யேய்.. பாரு அவ கையெடுத்து சாமி கும்பிடமாதிரி கும்பிடறா,, உடனே வரம்கொடு,,,

                                   அவ கொடுத்தாலும் கொடுப்பாடி,,,அவ பேரு அப்படி,,

                                    என்ன பேரு? என்றாள் நர்சு,

                                     காமாட்சி,,, என்றார்கள்,

                                    இல்லே,, இல்லே,, காஞ்சிக் காமாட்சி,,, என்றபடி கேலி பேசி சிரித்தபடி வெளியே போனார்கள்,

                                     சங்கரிக்கு இப்போது அழுகை பெருகி வந்தது, அழுதாள்,

                                     கோபாலன் வாசலில் இருந்து உள்ளே ஓடிவந்தான் சங்கரியை நேர்க்கி பதட்டமாக,,,

                                                                                                (மீன்கள் துள்ளும்)

                               

                                       

                                                     

Wednesday, April 24, 2013

தொட்டி மீன்கள்......குறுந்தொடர்....3



                     தொட்டிமீன்கள்.....குறுந்தொடர்......  3




                 சொர்ணத்தாயி இப்படியொரு காட்சியை எதிர்பார்க்கவில்லை. அவளை மிஞ்சிய ஒருத்தி இப்போது மல்லுக்கு வந்திருக்கிறாள். எடுத்த எடுப்பிலேயே மயிறு அறுப்பேன் என்கிறாள். வாயாலே அறுத்தாலும் அறுத்துவிடுவாள் போலிருக்கிறது, நான் பொண்ணு பார்க்கப்போனது இவளுக்கு எப்படிதெரியும், மகனைத் திரும்பிப் பார்த்தாள். பொறுக்கி நாயிக்கு பொறுப்பு வரும்னு ஒரு காரியத்தை செய்ய நினைச்சா... இன்னொரு பொறம்போக்கு வம்புக்கு வந்து தெருகூடி நிக்குது,,,

                              என்னடி ஆத்தாவும் மவனுமா அப்படியே திக்கிச்சிப் போயிருக்கீங்க? இந்த நாதியத்தவளுக்கு எப்படித் தெரியும்னா,,,எல்லாம் உன்னோட பொசகெட்ட மவன்தான் சொன்னான்,,,

                             லோகநாதன் படியிறங்கி அவளை நெருங்கி,,, எதுக்குடி இங்க வந்தே?
                             பின்னே எங்க போறதாம்?

                            ஓங்கி அவளை அறைந்தான், யாரும் எதிர்பார்க்கவில்லை. அவளுடன் வந்திருந்த குழந்தை பயந்துபோய் அவள் பின்புறம் ஒளிந்தது,

                             சொர்ணத்தாயி அதிர்ந்துபோனாள்,

                             அடிய்யா அடி. என்ன கொன்னே போட்டாலும் சரி,, ஒரு நாயம் கிடைக்காம இங்கிருந்து போவமாட்டேன்,,

                               உனக்கென்னடி நியாயம் வேண்டியிருக்கு,,, மனையில உக்காந்து தாலிவாங்கிட்டு வந்தவ மாதிரி கேக்கறே,,,

                                சொர்ணத்தாயி மகன் மிதித்தாலும் பரவாயில்லை என்று அவளிடம் மல்லுக்கு நிற்க முடிவெடுத்து தெருவிறங்கினாள், அதற்குள் அக்கம் பக்கம் வீடுகளிலிருந்து பெண்களும் ஆண்களுமாக அவரவர் வீடுகளில் நின்றபடி லேசான கேலி சிரிப்புடன் அடுத்த காட்சியைக் காணும் ஆர்வத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள்,

                                  காலங்காலமாக இப்படியொரு கீழ்த்தரமான மிருக குணத்தோடே மனித இனம் அலைந்துகொண்டிருக்கிறது, எப்படா அடுத்தவீடு எரியும் வேடிக்கை பார்க்கலாம்னு,,, அந்தக் கொள்ளி தன் வீட்டுலே விழ ரொம்ப நேரமாவாதுன்னு நினைக்காம,,,

                                     போடி கம்னாட்டி நாயே,,, உனக்கு என்னடி கேள்வி வேண்டியிருக்கு,, போயிடு,, இல்லே அடிச்சே கொன்னுடுவேன்,,, என்றபடி கைலியை மடித்தபடி வலது காலை துர்க்கி அவளை உதைக்கப்போனான் லோகநாதன்,

                                    சற்று பின்வாங்கி... வா... வந்து உதை... உன்னோட அண்டி வந்ததுக்கு இன்னும் என்னெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கோ அனுபவிக்கிறோம்,,

                                 போடி பொறம்போக்கு நாயே,,, பத்தினி மயிறு மாதிரி பேசறே..

                                தெரிஞ்சுதானே வரே....லேசா இருட்டக்கூடாது,,, முட்டக் குடிச்சுப்புட்டு வாந்தியெடுக்கறதும் என் மடிதான்,,, வந்து படுக்கறதும் என் வீடுதானே,, அப்ப இனிக்குதா,,, அப்ப பத்தினி வீடு இல்லன்னு தெரியலியோ,, இல்ல நான் படிதாண்டா பத்தினின்னு போர்டு வச்சிருக்கேனா,,அவள் பேச்சு எல்லை மீறிக்கொண்டிருந்தது,

                                  ஊரே நோண்டுவா கெழவி.. பாரு இப்ப தெரு சிரிக்குது,

                                  நோண்டுறது மட்டுமில்ல,,, என்னமோ சத்தியவான புள்ளயா பெத்திட்ட மாதிரி அவனுக்குப் பொண்ணு தேடுவா பாரு,,,வர்ற ஜாதகத்த எல்லாம் அத்தனை நொட்டம் பேசுவா,,, அதான் நோண்டியெடுக்கிறா ஒருத்தி

                                   கெழவிக்கு நல்ல புள்ளங்க மட்டும் பொறந்திருச்ச அவள புடிக்கவேமுடியாது,,

                                   என்ன தான் பழகினாலும் எண்ணம் சரியில்லாதவ கெழவி,,, எவன் வீட்டுலே எழவு வுழுவும்னு சூனிய கண்ண வச்சிக்கிட்டு அலைவா,, ஆண்டவன் அவவீட்டுக்கு காலையிலே இவள அனுப்பியிருக்கான் பாரு சூனியம் வைக்க,,

                                  அந்த பொட்டப்புள்ளய பாரு அந்த லோகுபய சாடையா இல்ல,,

                                  அவனுக்குப் பொறந்ததுதான்,,, இல்லாட்டி இத்தனை உரிமையா இப்படி வந்து கத்துவாளா,,,

                                    பேசாம அவளுக்கே கட்டி வச்சிடவேண்டியதானே? ஒரு பொண்ணோட வாழ்க்கை அழிஞ்சதோட இருக்கட்டுமே,,,

                                   இத்தனை ஊழல வச்சிக்கிட்டு ஒண்ணுந் தெரியாதவமாதிரி கெழவி பொண்ணு தேடறா,, இன்னொரு பெண்ணோட வாழ்க்கையை அழிக்க,,, சகுனிதான்,,

                                 ஆளுக்காள் அவரவர் ஆத்திரத்தை சொர்ணத்தாயி மேல் கொட்டிக் கவிழ்த்தார்கள்.

                                   அதற்குள் மறுபடியும் லோகநாதன் கத்தினாள் அவளிடம்,

                                   மரியாதயா போயிடு,,,நாற மவளே,,,

                                   போவமுடியாது,,, எனக்கு ஒரு வழிய சொல்லு,,

                                   உனக்கென்னடி வழிய சொல்றது,, அதான் கேக்கற பணம் கிடைக்குதுல்லே,,

                                    எனக்கு அது வேணாம்,,

                                     வேறென்ன வேணும்டி?  சொர்ணத்தாயி குறுக்கே புகுந்தாள் ஆத்திரமாக,

                                       உன்ன யாருடி கேட்டா பஞ்சாயத்து,, உம்மவனுக்கு எனக்கும் உள்ள பிரச்சினை இது,, நானே பேசி தீர்த்துக்கறேன்,,

                                       லோகநாதனைப் பார்த்து நீ வேற கல்யாணம் பண்ணிக்கக்கூடாது,,

                                        அத சொல்ல உனக்கு என்னடி உரிமையிருக்கு,

                                       நான் செய்ய வுடமாட்டேன்,, எனக்கும் என் புள்ளங்களுக்கும் வாவு வழி வேணும்,,

                                         அத எவன்கிட்டே படுத்து பெத்தியோ அவன்கிட்ட கேளு,,

                                         அது முடிஞ்ச கதை,, இனிமே நீதான் எல்லாம் செய்யணும்,, முடிவோடு பேசினாள்,

                                         இந்த அசிங்கத்தை தெரு கண் இமைக்காமல் பார்த்து காதாறக் கேட்டு நின்றது,

                                         சொன்ன கேக்க மர்ட்டேடி நீ,, என்றபடி லோகநாதன் அவள் மயிரைக் கொத்தாக் பிடித்து இழுத்து தரையில் தள்ளி அப்படியே இடுப்பில் மிதித்தான், அய்யய்போ கொல்றானே,, கொலைகார கம்னாட்டி,,, பாவி,,பாவி,,, என்று கத்த கத்த மறுபடியும் மறுபடியும் மிதித்தாள்,

                                      அவள் வலி தாங்காமல்  எழுந்தாள், ஓடிவந்து மறுபடியும் ஓங்கி உதைவிட அப்படியே சரிந்தாள், அவளின் பிள்ளை பயங்கர குரலெடுத்து அழுதபடியே ஓட ஆரம்பித்தது, எங்கடி போற என்றபடி,, சட்டென்று எழுந்து தலையைப் பின்னி கொண்டைபோட்டபடியே சுற்றுமுற்றும் பார்த்தாள், பக்கத்தில் செங்கல் ஜல்லிகள் கிடந்தன, அவற்றை எடுத்து சரமாரியாய லோகநாதனைப் பார்த்து வீசினாள், சொர்ணத்தாயி மேல் நாலைந்து கற்கள் விழ வீட்டிற்குள் ஓடினாள்,

                                     குடிகார கம்னாட்டிபய மவனே,, உனக்குத்தான் அடிக்கத் தெரியுமா? கொன்னுடுவேண்டா,, உன்னை,, சாவுடா,,, இன்னொருத்தி வந்துடுவாளா,, ஆயி மவனையும் இங்கேயே வெட்டி புதைச்சிடுவேன்,, பொம்பளன்னா அவ்வளவு இளக்காரமா,, போனாபோவுதுன்னு பேசினா,,  அடிப்பியா,, நீ,,, மரியாதையா சாயந்தரம் வீந்து சேரு,,, எனக்கும் என்னோட மவளுக்கு ஒரு வாவு வழி வேணும்,, அதைவுட்டுட்டு ஆயியும் மவனும ஏதாவது கோக்குமாக்கு பண்ணனா,, வவுந்துடுவேன்,,நீ ஒருத்தன் இல்லே,, புதுசா பாக்கறது,,  உனக்கு முன்னால எத்தனையோ பேர பாத்தவ நானு,,

                                காதுகொடுத்து கேக்க முடியல்லே,,

                                வீட்டு வாசப்படியெங்கும் செங்கல் ஜல்லிகள் இறைந்து கிடந்தன, லோகநாதன் மூக்கின் மேல்,,, நெந்றியில்,, முன் உதட்டில்,,, நெஞ்சுப்பகுதியில் என லேசான சிராய்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது,

                                 வேகமாக உள்ளே போய் ஒரு மூங்கில் குச்சியை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே வந்தான் அவளை அடிப்பதற்கு, அதற்குள் அவள் அழுதுகொண்டே ஓடும் மகளைத் துரத்தியபடி தெரு முனைக்குப் போயிருந்தாள்,

                                    அசையாமல் அத்தனையையும் தெரு பார்த்துக்கொண்டிருந்தது,

                                    கெழச் செறிக்கிபய மவளே,,   உன்னாலதாண்டி இத்தன அவமானம்,, என்றபடி அதே குச்சியுட்ன் லோகநாதன் உள்ளே போக,, சொர்ணத்தாயியின் அலறல் சப்தம் கேட்டது,


                                                                                                     (மீன்கள் துள்ளும்)

                       
                                         ..





Monday, April 22, 2013

தொட்டிமீன்கள்,,,,குறுந்தொடர் -....2



                       

              அன்புள்ளங்களுக்கு...

                            ஹ ரணி வணக்கமுடன்.

                            நான் பதிவிட நேரம் வாய்த்து உட்கார நினைக்கையில் மின்வெட்டாகிவிடுகிறது. மின்சாரம் இருக்கையில்  நான்  வெளியில் வகுப்பில் இருக்கிறேன். ஆகவே இதில் தாமதம். எனவே தாமதம் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

                           நன்றி வணக்கம்.

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

                                          தொட்டிமீன்கள்....

                                                            குறுந்தொடர் ......      2



                    சாப்பிட உட்கார்ந்து இருந்தார்கள். பெரிய தடடில் கொட்டிய சாதத்தின்மேல் ஊற்றப்பட்ட குழம்பு பனிக்காலத்தில் மலைத்தொடர்களில் படிந்திருக்கும் பனியைப்போல அழகாக இருந்தது, அதில் மேலாக ஒரு கத்தரிக்காய் துண்டும் ஒரு முருங்கைக்காய் துண்டும் துருத்திக்கொண்டு இருந்தன,

                        சாதத்தையும் குழம்பையும் சேர்த்து பிசைய ஆரம்பித்தாள்.

                        கேஸ் இல்லாமல் விறகடுப்பில் வெந்த சாதமும் கொதித்த குழம்பும் சேர்ந்த கலவையில்  இளகிப்போயிருந்த காய்கறிகள் மணத்தை வெளியே வீச ஆரம்பித்தன.

                            அம்மா,, சீக்கிரம்மா பசிக்குது என்றாள் சங்கரி..

                            ஆமாம் எனக்கும்தான் என்றார் கோபாலன்.

                            மற்ற இரு பெண்பிள்ளைகளும் அப்படியே கோரசாகக் கத்தினார்கள்.. பசிக்குதும்மா..

                              நல்லா பறக்கறீங்க.. பிசைய வேண்டாமா? குழம்பு சோர வேண்டாமா? இல்லாட்டி வெள்ளையா வெள்ளையா சோறு இருக்கும்,, என்றாள் சாரதா.

                              பரவாயில்லை உருட்டி வையும்மா,, என்றார்கள் பிள்ளைகள்,

                              உருட்டி ஒவ்வொருவரும் நீட்டிய  கைகளில் சோற்றை வைத்தாள், பக்கத்து கிண்ணத்தில் தக்காளியை மசாலாபோட்டு வறுத்திருந்தாள், அதை எடுத்து உள்ளங்கையில் உலக உருண்டைபோல நின்றிருந்த சோற்றின்மேல் தக்காளி வறுவலின் சிறிதை ஒவ்வொருத்தருக்கும் வைத்தாள்,

                                 அப்படியே பழத்தைக் கடித்து சாப்பிடுவதுபோல சோற்று உருண்டையைச் சாப்பிட ஆரம்பித்தார்கள்,

                                  சங்கரி கண்களில் நீர் கொட்டியது, சூடும் காரமும் சுவையும் சேர்ந்து கண்களில் நீரை வரவழைத்திருந்தன, கூடயே புரையேறித் தும்மினாள்,

                    அவசரமாக அவளது தலையில் தட்டிவிட்டு தண்ணீர் எடுத்துக் கொடுத்துவிட்டு மெதுவா சாப்பிடுடா,, என்றான் கோபாலன்,

                       சாப்பிடுகிற தன் குடும்பத்தை வேடிக்கை பார்த்தபடி சாதத்தை கைகளில் உருட்டிக்கொண்டிருந்தாள் சாரதா,

                           சாப்பிட்டு முடித்ததும் அவரவர அப்பாடா,, என்று களைத்துப்போனார்கள், சுவையின் சுமையில் களைத்த களைப்பு அது, ஆனந்த களைப்பு அது, அப்படியே தரையில் அவரவர்கள் மல்லர்ந்து படுத்துக்கொண்டார்கள்,

                               சாரதா சாப்பிட்டுவிட்டு வந்து கோபாலன் அருகில் உட்கார்ந்துகொண்டாள்,

                              கோபாலன் அவளது முகத்தைப் பார்த்தான், எப்படி இருந்தவள் சாரதா, தன்னைத் திருமணம் செய்துகொண்ட எந்த சுகதையும அனுபவிக்காதவள், அதைவிட அதைக் காட்டிக்கொள்ளாதவள், கணவன் பிள்ளைகள் வீடு என்று தன்னை அந்த அசையாத வீடுபோல சுருக்கிக்கொண்டவள், அவளது உலகத்தில் வேறு எதுவும் இல்லை,  முகம் மட்டும் எந்த நிலையிலும் சோர்வில்லாது இருக்கும், சாரதாவின் இயல்பு அது, எதற்கும் கவலைப்படமாட்டாள், சரியான முடிவு எடுப்பதில் பிசகமாட்டாள்,

                            என்ன பாக்கறீங்க? என்றாள்,

                            காலையிலே வந்துட்டுப் போனாங்களே மாப்பிள்ளை வீட்டுலேர்ந்து,, என்றிழுத்தபடி நிறுத்தினான் கோபாலன்,

                             ஏங்க அந்தம்மாவ பார்த்தா எனக்குப் பிடிக்கல்லே ,, என்றாள் சாரதா,

                             எதுக்கு அப்படி சொல்றே?

                             ஒரு பெண்ணைப் பாக்க வர்ற பொம்பள இப்படியா வருவா,, கோழிக்குஞ்ச நோட்டமிடற கழுகு மாதிரி கண்ணு அந்த அலைச்சல் அலையுது,, வாயோரம் எச்சில் வழியுது,, ரொம்ப பேராசைப் பிடிச்ச பொம்பளயா இருக்கும்போலருக்கு,, வரும்போதே பெண்ணைக் கட்டிக்கிட்ட வீட்டுலே பூந்து வர்றமாதிரி அதிகாரமா வருது,, பேச்சும் நடவடிக்கையும் சரியில்லீங்க,,,ஒரு முடிவும் எடுக்கவேயில்லை,, அதுக்குள்ள இப்படின்னா,, நாளை எம்பொண்ண கொடுத்திட்டு நான் சிரிப்பா சிரிக்கமுடியாது,, இதுவும் வெவரணை தெரியா பொண்ணா இருக்கு,, அந்த பொம்பளய பார்த்தா எனக்கு சகுனி மாதிரியே இருக்கு,, எதுக்கும் மாப்பிள்ளையைப் பத்தி நல்லா விசாரிச்சுடுங்க,,, எனக்கு ஐயறவா இருக்கு,,, சாரதா படபடவென்று பேசி நிறுத்தினாள்,

                                   என்ன இது ஒரு தடவை பார்த்ததிலே இத்தனை பேசறே,,, மாப்பிள்ளை நல்லவர்,,, பிரைவேட்டா வேலை பார்த்தாலும் நல்ல சம்பளம்,, ரொம்ப எதிர்பார்க்கலேன்னு சொன்னாங்க,, அதான் நான் ஜாதகத்தைக் கொடுக்கச் சொன்னேன்,, நினைச்சு பாரு  சாரதா,,,  எல்லார்கிட்டேயும் குறைங்க இருக்கு,, குறையில்லாத மனுஷன் கிடையாது,, இப்படியே பார்த்துகிட்டு போறதுக்கு நாம ஒண்ணும் டாடா,, பிர்லா இல்லே,,, இவ போனாத்தான் அடுத்த ரெண்டுக்கும் நாம மூச்சுவிடமுடியும்,, மாமியார் எப்படி யிருந்தா என்ன மாப்பிள்ளை சரியான்னு பார்க்கணும்,,

                              தாயோட குணந்தானே பையன்கிட்டே இருக்கும்,,,

                              சங்கரி பெற்றோர்கள் தனக்கான வாழ்வின் யுத்தத்தைத் தொடங்கியிருப்பதைக் கண்டு உள்ளுக்குள் குமைந்துகொண்டிருந்தாள்,  வறுமை எல்லாவற்றையும் தோற்கடித்துவிடுகிறது, வறுமையை வெல்வதற்கான யுத்த வியுகங்களை வகுப்பதற்கே பலரின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது, வியுகத்தை வகுத்தபின் சிலருக்கு முடிகிறது, அதையும் தாண்டி யுத்தக்களத்தில் வந்து ஒரு வெற்றியைக் கண்டவன் அதை ஏண்டா வெற்றிபெற்றோம் என்று எண்ண வைத்துவிடுகிறது,,

                            மனிதனின் நிழல்போல வறுமை தொடர்ந்து நிற்கிறது, ஆனால் கண்ணுக்குத் தெரியாமல்,

                             எதுவும் பேசாமல் மௌனமாய் அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தாள், எதுவாயினும் அனுசரித்து அவர்கள் எடுக்கும் முடிவிற்கு ஒத்துப்போய்விடவேண்டும், தன்னுடைய இரு தங்கைகளைப் பார்த்தாள் அவர்கள் அசந்துபோய் துர்ங்கிக்கொண்டிருந்தார்கள், இந்த நிம்மதி எல்லாநிலையிலும் அவர்களுக்குக் கிடைக்கவேண்டுமே என்று நினைத்தாள்,

                                 என்னம்மா யோசனை என்றான் கோபாலன்,

                                ஒண்ணுமில்லேப்பா,, என்றாள் சங்கரி,

                                 அவள எதுக்கு கேக்கறீங்க? பச்சப்புள்ள,, நாமதான் எதுவாயிருந்தாலும் நல்லது கெட்டது  பாத்து வைக்கணும் என்று இடைமறித்தாள் இருவரின் எண்ணங்களையும் படம்பிடித்ததுபோல சாரதா,

                                அப்பாவும் மகளும் சாரதாவை பார்த்தார்கள், என்ன இவள் அப்படியே மனத்தைப் படிக்கிறாள் என்று,

                                 சரி,, இந்த நகைசீட்டுக்குப் போய் பணத்தைக் கட்டிட்டு வந்துடுங்க அடுத்த மாசம் முடியுது,,, மாப்பிள்ளைக்கு உதவும்,, நானும் ஒவ்வொரு மாசமும் சீட்டு விழுந்திடும்னு நினைச்சேன்,, கடைசி சீட்டுவரைக்கும் வந்துடுச்சி,,

                               கோபாலன் சிரித்தபடியே அந்த நகைசீட்டை வாங்கி பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்து சைக்கிளை எடுத்தான்,, இருபது வருஷத்திற்குமேலாக இந்த சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கிறது, அதில் பெல்லைத் தவிர எல்லாமும் சத்தமிடும் சைக்கிள் அது, ஆனாலும் ஒரு தந்தையின் பரிவைப்போல அவனைத் தாங்கியோடுகிறது,,

                                 சங்கரி வாசலுக்கு வெளியே வந்தாள்,

                                 தெருவில் ஒரு புதுமண ஜோடிகள் புது வண்டியில் போனார்கள், அந்தப் பெண் ஒருக்களித்து அவன் முதுகின்மேல் சாய்ந்திருந்தாள், இருவரும் சிரிப்பும் பேச்சுமாக வண்டி கட்ந்துபோனது, மேலத்தெரு வாத்தியார் வீட்டுப் பொண்ணு அது,, சங்கரியைவிட வயதில் சின்னவள்,

                                  அப்படியே சாணிமெழுகிய திண்ணையில் சரிந்து உட்கார்ந்தாள், மதியப்பொழுதுகளில் சிலசமயம் தெரு அழகாக இருக்கும், காரணம் அவரவர்கள் வீடடஙகிக் கிடப்பார்கள், ஒருசிலர் சாப்பிட்டவுடன் வெற்றிலைப்பெட்டியுடன் திண்ணைக்கு வருவார்கள், பெரும்பாலும் ஆண்கள் திண்ணையில் உட்கார படியில் பெண்கள் உட்கார்ந்துகொள்ள குடும்பக் கதை பேசுவார்கள், அதுதான் சமயம் பல விஷயங்களைப் பேச,,

                                   இதுபோன்ற சமயங்கள் சங்கரிக்குப் பிடிக்கும், யாருமற்ற தெருவில் அவள் கற்பனையில் ஓடிக்கொண்டேயிருப்பாள், ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் உட்கார்ந்து பார்ப்பாள், படுத்துப்பார்ப்பாள், போடப்பட்டிருக்கும் வைக்கோற்போரில் ஓடிப்போய் ஏறி சறுக்குவாள்,, தென்னை மரத்தில் பாதி ஏறுவாள்,, தெருவின் மதகருகில் கிடக்கும் குளத்தில் குதித்து பார்ப்பாள், எருக்கம் செடிகளில் அந்தப் பூக்களை விரல்களால் அமுக்கி கேப் வெடிப்பாள்,, தட்டான் பிடிப்பாள்,, பாவாடையை மேலாக செருகி சில்லு விளையாடுவாள்,, எல்லாம் கற்பனையில்தான் எல்லா ஆட்டமும் ஆடிப் பார்த்ததுதான் ஆனாலும் வயதுக்கு வந்தவுடன் நின்றுவிட்டன, அம்மா கண்டிப்பானவள் படிப்பையும் ஆட்டத்தையும் ஒருசேர நிறுத்திவிட்டாள், காசில்லாட்டி என்ன மானத்தோட வாழணும்,, செத்தாலும் மானத்தோட சாவணும்,, ஏழைக்குத்தாண்டி ரோஷமும் மானமும் அதிகமா இருக்கணும், உசிருபோல,, என்று அடிக்கடி சாரதா சொல்வாள்,,

                                    சங்கரி நினைவு கலைந்தாள்,  ஆனால் சொர்ணத்தாயி நினைவுக்கு வந்தாள், அவள் உள்ளே நுழையும்போதே பிடிக்கவில்லை, பார்ப்பதற்கு கூனிக்கிழவிபோலத்தான் இருந்தாள், அவளுடைய பல்லும் எச்சில் ஒழுகும்வாயும் சூனியக்காரி மந்திரக்கோலை வைத்துக்கொண்டு கண்களை அலையவிடுவதுபோல அலையவிட்டபடிதான் உள்ளே வந்தாள், அவளது பார்வை சரியில்லைதான், அவளோடும் அவளின் மகனோடும்தான் காலம்முழுக்க வாழவேண்டியிருக்குமோ என்றதும் உடலில் இருந்து எதிர்பாராமல் ஒரு நரம்பை சட்டென்று உருவியதுபோல அதிர்ந்தது,

                                 அப்போது சுவற்றின் மூலையிருந்து ஒரு பல்லி உச்சுக்
கொட்டியது,

                                   அய்யோ கௌளி  சொல்லுதே என்றதும்,,,பதறிப்போய்
வெளிப்படையாக உடம்பை ஒருமுறை குலுக்கிக்கொண்டாள்,

                                  உள்ளிருந்து சாரதா காலை தாங்கியபடியே வெளியே வந்தாள்,
                                   சங்கரி பதறிப்போய் என்னம்மா ஆச்சு? என்றாள்,

                                  அடுப்புக்கு சட்டம் ஒடச்சிப்போட்டிருந்தேன்,, அதுலே ஒரு ஆணி இருந்தது கவனிக்கல்லே காலை அழுத்தி வச்சிட்டேன்,,

                                    வலது கட்டைவிரலுக்கு கீழாக ரத்தம் கொட்டிக்கொண்டேயிருந்தது, சங்கரி பதறிப்போனாள, என்னம்மா நீன்னு,,
பார்த்து நடக்கக்கூடாது,,, உக்காரு முதல்லே,, என்றபடி அவளைத் தாங்கி திண்ணையில் உட்கார வைத்துவிட்டு உள்ளே ஓடிப்போய் பழைய வேட்டியைக் கிழித்துத் துண்டாக்கி வந்து அவள் விரலைச் சுற்ற வந்தவள் அதிர்ந்துபோனாள்,

                             திண்ணையில் அப்படியே மல்லாக்கச் சரிந்து மயங்கிப் போயிருந்தாள் சாரதா, ரத்தம் கொட்டுவதும் நிற்கவில்லை, அம்மா என்றலறியபடி அவளை எழுப்பினாள்,, எழுந்திருக்கவில்லை சாரதா,, அம்மா,, என்று மறுபடியும் அலறிய அலறலில் தெரு கூடி ஓடிவந்தது, யாரோ ஒருத்தர் ஓடிப்போய் ஆட்டோவை அழைத்துவர,, ஆட்டோவிற்குத் துர்க்கிக்கொண்டுபோனார்கள், ஆட்டோவில் கிடத்திவிட்டு

                            அந்தக் கால்ல ஈரத்துணிய சுத்தும்மா என்றார்கள், சங்கரிக்கு அது காதில் விழவேயில்லை, ஆட்டோவில் அம்மாவைத் தாங்கியபடி அம்மா, என்று அழுதுகொண்டிருந்தாள், அதற்குள் அவளின் தங்கைகள் எழுந்துவந்து அம்மா என்று கத்தி அழ ஆரம்பித்தார்கள்,

                               ஒண்ணுமில்லேம்மா,, ரத்தத்தப் பார்த்து மயங்கியிருக்கும், பயப்படாத,, ஆமா கோவாலு எங்கே,,

                                அப்பா நகை சீட்டு கட்டப்போயிருக்கு,,

                                சரி,, பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோங்க,, கோவால அங்க வரச்சொல்லுப்பா,,

                               ஏம்பா,, இந்த பொட்டப் புள்ளங்கள பாத்துக்கங்கப்பா,, மிரண்டுபோயிருக்குங்க,,

                               ஆட்டோ அரசு மருத்துவமனை நோக்கிப்போனது,

                               பற்கள் கட்டிப்போயிருந்தன சாரதாவிற்கு, சங்கரி பார்த்து பார்த்து அழுதுகொண்டிருந்தாள்,

                                அதற்குள் கோபாலைப் பார்த்து விவரம் சொல்ல,, சீட்டுக்கட்ட கடைக்குள் நுழைந்தவன் கட்டாமல் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு சைக்கிளை வேகமாக மிதிக்க ஆரம்பித்தான் அரசு மருத்துவமனை நோக்கி

                                கட்டைவிரலில் சுற்றியிருந்த வேட்டித்துண்டை மீறி ரத்தம் பெருகியிருந்தது,

                               மருத்துவனையில் ஆட்டோவில் இருந்து துர்க்கிக்கொண்டு அவசரச் சிகிச்சைப் பரிவுக்குக் கொண்டுபோனார்கள்,

                                   பயிற்சி டாக்டர்கள்தான் இருந்தார்கள்,

                                  ஒரு டாக்டர் சாரதாவின் நாடியைப் பார்த்துவிட்டு பல்ஸ் டவுனாகுது உடனே ஐசியு கொண்டுபோங்க என்றார்,

                                    ஐசியுவிற்குள் கொண்டுபோனார்கள்,

                                    கோபாலன் ஓடிவந்தபோது சாரதாவை கண்ணாடி அறைக்கு வெளியே நின்று பார்த்தான், உள்ளே உயிர்வாயு முகத்தில் பொருத்தப்பட்டிருந்தது,

                                        டாக்டர் வந்தார்,,

                                       கோபாலன் அழுதான்,, என்னாச்சு டாக்டகர்?

                                       பதட்டப்படாதீங்க,, லோ பிரசஷர் ஆயிடிச்சி,, பல்ஸ் டவுனாயிடிச்சி,, பார்க்கலாம்,, மதியம் என்ன சாப்பிட்டாங்க? கால்ல எப்படி அடிபட்டிச்சி,, ரொம்ப ரத்தம் போயிருக்கு,,ரத்தம் தேவைப்படலாம்,

                                       ரத்தமா?

                                        ஆமாம்,, என்றபடி டாக்டர் போனார்,

                                         அதுக்குள்ள என்னம்மா ஆச்சு?

                                         அடுப்புக்கு வெட்டிபோட்டிருந்த சட்டத்துலேர்ந்து ஆணி குத்திடிச்சுப்பா,, துருப்பிடிச்ச ஆணிவேற,, சங்கரி சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள்,

                                         அட மகமாயி,,, என்ன நேரம் என்னத்தானா ஆட்டி வைக்கணும்,,

                                        கோபாலும் அழ ஆரம்பித்தான்,

                                         அப்போ நர்சு வந்தாள்,, சாரதாவோ  வந்தவங்க யாரு,,

                                        கோபாலன் முன்னே போனான்,

                                          நீங்க யாரு?

                                          என்னோட மனைவிதான் சிஸ்டர்,,

                                         அவங்களுக்கு ரத்தம் ஏத்தியாகணும்,, என்ன குரூப்?
                 
                                         தெரியாது டாக்டர்,,

                                         என்ன மனுஷங்க நீங்க? என்றபடி திரும்பி ஓடினாள் நர்சு,
ஓடிய வேகத்திலேயே திரும்பி வந்தாள்,

                                         ஓ பாசிடிவ்,,,  மூணு பாட்டில் வேணும் வாங்கிட்டு வாங்க,,

                                           உங்க கிட்ட இல்லையா சிஸ்டர்?

                                          ஒரு பாட்டில்தான் இருக்கு,, நாலு பாட்டில் ஏத்தணும்,, போங்க வாங்கிட்டு வாங்க உடனடியா,,

                                           சங்கரியை பார்த்து இரும்மா நான் வீட்டுக்குப் போயிட்டு ரத்தம் வாங்கிட்டு வந்துடறேன்,

                                              வீட்டுக்கு வந்து சங்கரிக்கான சேமித்து வைத்திருந்த இரண்டு பவுன் சங்கலியை எடுத்துக்கொண்டு அடகுக் கடைக்குப்போய் அடகு வைத்து பணத்தை வாங்கிகொண்டு எங்கே ரத்தம் கிடைக்கும் என்று யோசித்தபடி சைக்கிளை மிதித்தான்,

                                            அவனுக்குத் தெரிந்த எல்ஐசி ஏஜண்ட் குமாரவேலு இருக்கிறார், அவரைக் கேட்டால் தெரியும்,,

                                            அவரைத் தேடிப்போய் பார்த்து சொன்னதும்
எனக்குத் தெரிந்த நாலைந்து இடங்கள் இருக்கு வா போய் பார்க்கலர்ம் என்று அவன் வண்டியை தன் வீட்டில் போடச்சொல்லிவிட்டு அவருடைய வண்டியில் ஏற்றிக்கெர்ண்டு போனார்,

                                           நாலைந்து ரத்த வங்கிகளிலும் ஓ பாசிடிவ் ரத்தம் இருப்பு இல்லை என்றார்கள்,

                                          கோபாலனுக்கு சாரதாவை நினைக்க நினைக்க மயக்கம் வந்தது, சாரதாவை கை நழுவ விடப்போகிறோமோ என்ற கலக்கம் வந்தது. அப்படியே மயங்கி விழுந்தான்,

                                                                                                (மீன்கள் துள்ளும்)